ஓடிவாங்க அரட்டையடிக்கலாம்

தொடர்ந்து பேசலாம் வாங்க

ஸாரி புவி, நேத்து உங்களுக்கு மெஸேஜ் டைப் பண்ணிகிட்டே நல்லா தூங்கிட்டேன். கண்டிப்பா உண்ட மயக்கமில்ல. உண்ணாத மயக்கம்தான் என் தூக்கத்திற்கு காரணம். இப்ப நேரமிருந்தா வாங்க பேசலாம்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இப்போ வேலை எல்லாம் முடிந்ததா??

நித்தி என்னை இப்ப எல்லாம் கண்டுக்க மாட்டுறீங்க??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஹாய்! இப்படியெல்லாம் சொன்னா நான் என்ன பண்றது?;) நேத்துதான் அம்மா வீட்லயிருந்து இங்க வந்திருக்கேன் வந்ததிலருந்து ஒரே க்ளீனிங் ப்ராஸஸ் போய்ட்டிருக்கு. அதான் சரியா அரட்டைக்கு வர முடியல கார்த்தி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வேலை இருக்குப்பா பாத்து கிட்ட அனுப்புரென் கரன்ட் வேர இல்ல

ஷர்மி ஸாரி ஷர்மி. நேத்து மதியம் சாப்பிடாததால செம்ம டயர்டு அதான் தூங்கிட்டேன். எழுந்ததும் வேலை சரியா இருந்தது. அதான் பேச முடியல. இப்ப இருந்தா வாங்க பேசலாம்.
ஹாய் அஸ்விதா. நானும் மொபைல்தான் யூஸ் பண்றேன். ஆரம்பத்தில கஷ்டமாத்தான் இருக்கும். போகப்போக பிக்கப் பண்ணிடுவீங்க. அது மட்டுமில்ல அரட்டைக்கு வராம இருக்க முடியாம டைப் பண்ண கஷ்டமா இருந்தாலும் வருவீங்க பாருங்க:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சரி விடுங்க நித்தி... ஹர்ஷிதா என்ன பண்றா??நானும் இன்னைக்கு cleaning தான் பண்றேன்... half தான் முடிஞ்சு இருக்கு... சமையல் எல்லாம் முடிஞ்சதா??

சுகா பவர் இல்லையா?? அப்போ திடீர்னு காணாமல் போய்ருவிங்க??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நித்யா பூட்டிபோட்டு போனாலே போகும்போது ஜாலியாயிருக்கும் ஆனால் வந்து சுத்தம் பன்னுரதுக்குல்ல போதுனு ஆயிடும்பா இப்ப எல்லாம் முடிஞ்சிதா ஹர்ஷி என்னபன்னுது உன்ஹஸ் ஊர்லயிருந்து என்னவாங்கிவந்தார் முத்து ஐயிட்டம் பேமசாச்சே சமைச்சிட்டியா

இருக்கியாடா? நீ ஃபேஸ்புக்ல போட்ட மெஸேஜால எனக்கு எந்த வருத்தமோ கோவமோ இல்லடா. ஸாரிடா நான்தான் உனக்கு உடனே ரிப்ளை போடாம மண்டை காய வெச்சிட்டேன்;) ஹர்ஷி நல்லா இருக்கா சுதா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷமீஹா நேத்து அரைமணிநேரம் தனியா காஃபி ஆத்திட்டு போயிருக்கீங்க?;) ம்ம்ம் நிஷாக்கா சொன்னமாதிரிதான் நீங்க ரொம்பத்தான் பிஸி:) ஃபோன் போட்டா எடுக்கிறதில்ல, இல்லாட்டி நாட் ரீச்சபிள் ஆகிடுது. மெஸேஜ் போட்டா ரிப்ளை இல்ல. பின்ன வேற என்ன சொல்வாங்க உங்கள?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரொம்பத்தான் லொல்ஸ் ஆகிப்போச்சு உங்களுக்கு:) உங்க அண்ணா என்ன ஊருக்கு டூரா போய்ட்டு வந்தாங்க? அவரே பாவம் ஆஃபிஸ் கான்ஃபெரன்ஸ்க்கு போய்ட்டு வந்திருக்காங்க. நீங்க சொன்னமாதிரியெல்லாம் ஒன்னும் பேசல ஷமீஹா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்