நான் 7 மாத கர்பம் என்ன குழந்தை என தெரிந்து கொள்ள ஆசை

இடது பக்கம் தான் அசைவு அதிகமாக தெரிகிறது அப்ப என்ன குழந்தைனு யாருக்காவது தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே

hi vijaya...unga age conceive ana po ,last mensural period date sollunga...naan sonna padi pappa piranthuchu na neenga enaku treat tharanum athaiyum pathukanga.

தோழி விஜயலட்சுமி ,எனக்கு இது எட்டாவது மாதம் ,என்னைப் போன்று என்ன குழந்தையை சுமக்கிறீர்கள் என்று ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா ?மருத்துவர் உதவியின்றி நம் கருவிலிருக்கும் குழந்தை என்னவென்று நம்மால் துல்லியமாக சொல்ல இயலாது ,இருந்தாலும் ஒரு சிலவற்றை வைத்து கருவிலிருப்பது ஆணா ?பெண்ணா ?என ஓரளவு நாமாக கணிக்கலாம் .
அதாவது குழந்தையின் தலை எந்த பக்கம் இருக்கிறது என்பதை வைத்து அதனை சொல்வார்கள்.நம்முடைய இடது பக்கம் வயிற்றில் குழந்தையின் தலை இருப்பதாக தோன்றினால் அது பெண் குழந்தையாக இருக்கலாம் ,அல்லது வலது புறமாக தலை இருப்பதாக தோன்றினால் அது ஆண் குழந்தையாக இருக்கலாம் .மேலும் வயிறு பானை போல் விரிந்து பெரிதானால் பெண் குழந்தை என்றும் ,முன்னோக்கி பெரிதானால் ஆண் குழந்தை என்றும் அந்த காலத்து பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்,ஆனால் இவை எந்த அளவுக்கு உண்மை என தெரியாது .

எப்படி இருந்தாலும் அந்த கடவுள் நமக்கு குழந்தை செல்வத்தை அருளியுள்ளான் ,அப்படி பட்ட இறைவன் நமக்கு கண்டிப்பாக குழந்தையை எந்த குறையும் இல்லாமல் தந்தாலே போதும் .இருந்தாலும் உங்களுடைய ஆசை என்னவோ அது நிறைவேற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ,எந்த குழந்தையாக இருந்தாலும் அது நம்முடையது ,அதன் முகத்தை பார்க்கும் போதே நாம் பெண்ணாக பிறந்த பலனை அடைந்து விடுவோம் .நீங்கள் அதை உணரும் நேரம் அருகிலே வந்துக் கொண்டே இருக்கிறது தோழி .
எனவே நல்ல மாதிரியாக உங்களுக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டிக் கொள்கிறேன் .நல்லதே நடக்கும் .வாழ்த்துக்கள்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

கர்பமான பெண்ணின் தனத்தில் சுரக்கும் தாய்ப்பால் துளித்துளியாக சிறிதளவே வருமானால் ஆண்குழந்தை. கெட்டியாக பிசின்போல் சிரமத்துடன் வருமானால் பெண்குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.
புத்தகத்தில் படித்தேன். எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

hi pa my age 26, LMP - JUNE 4 OR 5

மிக்க நன்றி நீங்கள் சொல்லுவதை பார்தால் பெண் ஆக இருக்குமோ இருந்தாலும் நீங்கள் சொல்லியபடிஇறைவன் நமக்கு கண்டிப்பாக குழந்தையை எந்த குறையும் இல்லாமல் தந்தாலே போதும் உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அது எப்படி தெரியும் எனக்கு புரியவில்லை பா

unkaluku neenga sonna month padi patha boy baby pa...baby piaranthathum solunga..correct a illana thitirathenga..ha..ha.

vairu parisa iruntha boy chinatha iruntha girl enga patti ennaku sonathu

nan 8 matham karpamaga ullen. vayitril kuhanthai valathu pakkamagave eppothum ullathu. valathu pakkam mattum perithaga ullathu. ethu aana pen kuzhanthaya thrinthavargal sollavum.

எப்போதும் அதிக சோர்வு முகத்தின் நிறம் முன்பைவிட குறைவாக இருந்தால் ஆண் குழந்தைனு சொல்வாங்க எந்த குழந்தையாயினும் நல்லபடியா பிறக்க வாழ்த்துக்கள்பா

மேலும் சில பதிவுகள்