எனக்கு 24 வயது தான் ஆகிறது.எனக்கு கால்களின் இரு முட்டிகலும் வலிக்கிறது.எனக்கு 1^1/2 வயது குழந்தை இருக்கிறது.அவனுடன் விளையாடக்கூட முடியவில்லை.doctor-டம் போயும் பலனில்லை.காலில் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.உங்களுக்கு தெரிந்த Excercise or ஒர் வைத்தியம் சொல்லுங்கள்.reply please.
soundarya
bengay என்று ஒரு ointment உள்ளது அது try பண்ணுஙள் தோழி நிச்சயமாக சரி ஆகும்.
சௌந்தர்யா
சௌந்தர்யா முட்டி வலிக்கு ஆங்கில மருத்துவ முறைகளை விட ஆயுர்வேதம் சரியான தீர்வளிக்கின்றது. மருந்து உட்கொள்ளாமல் எண்ணெய் மருத்துவ முறைகள் நிரந்தர தீர்வை கொடுக்கின்றது. அதனால் நீங்கள் அது போன்ற மருத்துவ முறைகளை கையாண்டு பாருங்கள். வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும்போது தற்காலிக தீர்வுதான் உண்டாகும்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
thank you
thank you jessy,and arutselvi.
hai enaku full udampum
hai enaku full udampum payangarama vali iruku matham 5 days romba valikum help me
முட்டி வலிக்கு
இது எனக்கு பலன் அளித்த ஒரு பயிற்சி. செய்து பாருங்கள். உங்களுக்கும் வலி குறையலாம். ஆனால், என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியாது.
சுவற்றை நோக்கியபடி சுவருக்கு மிக அருகில் நின்று கொள்ளுங்கள். சுவரின் மீது உங்கள் முகம், வயிறு, கால் முட்டிகள் படியும் அளவிற்கு நெருக்கமாக இருக்கவேண்டும். இரண்டு கால் முட்டிகளும் சுவற்றில் படியும்படி நிற்பதில் சிரமம் இருந்தால், ஒரு கால் முட்டி மட்டுமாவது நன்கு அழுந்துமாறு நிற்கவேண்டும். முதலில் வலது கால்(ஏதேனும் ஒரு கால்) முட்டி, சுவற்றில் நன்கு அழுந்தி படியும்படி நின்று கொள்ளுங்கள்.
இப்போது சுவற்றில் முட்டி அழுந்தியுள்ள காலை மட்டும் பின்னோக்கி தூக்க வேண்டும். முட்டி சுவற்றில் அழுந்தியவாறே இருக்க வேண்டும். காலை தூக்கும்போது மிக மிக மெதுவாக, ஒரே சீரான வேகத்தில் தூக்க வேண்டும். காலை நிறுத்தி நிறுத்தி தூக்கக்கூடாது. வேகமாகவும் தூக்கக்கூடாது. வேகமாக தூக்கினால் இந்த பயிற்சியால் பலன் இருக்காது. முட்டியால் சுவற்றை உந்துவதுபோல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காலை கிடைமட்டத்திற்கு தூக்கிய பிறகு, தூக்கியது போலவே மெதுவாக கீழே இறக்கவும். இப்படி ஒரு காலுக்கு ஐந்து முறை செய்துவிட்டு, அடுத்த காலுக்கு ஐந்து முறை செய்யுங்கள். பிறகு மீண்டும் ஐந்து ஐந்து முறை என்று ஒவ்வொரு காலுக்கும் பத்து அல்லது இருபது முறை செய்து வாருங்கள். ஒரே நாளில் இருபது செய்ய வேண்டும் என்றில்லை. சிறிது சிறிதாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
காலை மாலை இருவேளைகளும் செய்யுங்கள். எளிதான பயிற்சிதான். தொடர்ந்து செய்து வந்தால் கால் முட்டி வலி குறைய வாய்ப்புள்ளது. முயற்சி செய்து பாருங்கள். இதனால் ஆபத்தோ, இழப்போ ஒன்றும் இல்லை. மூட்டு வலிக்கு நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. எனக்கு அதிகம் பலன் கொடுத்த எளிதான பயிற்சி என்பதால் இதை மட்டும் இங்கே கொடுக்கின்றேன்.
நன்றி அட்மின்
நன்றி அட்மின்.கண்டிப்பாக செய்து பார்க்கிரேன்.நான் இந்த முட்டிவலியிலிருந்து மீள வேண்டும்.