சமையல் சொதப்பல்ஸ் ;)

ஏன் வனி திடீர்னு இப்படி ஒரு டாப்பிக்னு யாரும் கேட்காதீங்க... டாப்பிக் தந்தவங்களே வந்து பதிவு போட்டா தெரியும் ;)

தலைப்பு தெளிவா இருக்கில்ல... நம்ம சுவாரஸ்யமான எதாவது ஒரு டாப்பிக்கோட தான் பேச போறோம். கூடவே ஜாலியாவும் பேசலாம். ஆனா கட்டாயம் நான் சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா, என்ன சமையல் பதிவு, சந்தேக கேள்விகளுக்கு அனுமதி இல்லை.

வாங்க... கலகலப்பா கொட்டிட்டு போங்க ;)

சமீபத்தில் ஒரு மஃபின் ட்ரை பண்ணி சம சொதப்பல். எல்லாம் முடிஞ்சு என்னடா இப்படி கோதுமை மாவில் திக்கா ஊத்தி எடுத்த கலி மாதிரி வந்திருக்கு... என்னாச்சுன்னு மண்டை காய்ஞ்சு போய் யோசிச்சப்பா தான் லைட்டு எரிஞ்சுது... மண்டை நீ பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்க்க மறந்துட்டியேன்னு ;( வெறும் மாவை கரைச்சு மஃபின் செய்தா எப்படி இருக்கும்னு எக்ஸ்பீரிமண்ட்டா இருந்துட்டு போகட்டும்னு எல்லாரையும் குப்பைல போட்டேன். நான் போட்டதுக்கு கூட ஃபீல் பண்ணல... அதை போட சொல்லி தூக்கி கொடுத்தப்போ அப்ப தானே அவன்’ல இருந்து எடுத்தேன், ஏன் போட சொல்றேன், அது என்னன்னு தெரியாம அதை கைல வெச்சு ஆராய்ந்து பார்த்த என் வேலைக்காரரை பார்த்ததும் கண்ணே கலங்கிடுச்சு... ஷேம் ஷேம். ;( அம்மே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, இழை போட்டாச்சா? இதோ வந்துட்டே இருக்கேன் பதிவோட.. எனக்காகவே தொடங்கப்பட்ட மாதிரி இருக்கு.. தேங்க்ஸ் வனி.. அட்டெண்ட்டன்ஸ் போட வந்தேன்.

நேத்து தேங்காய் பர்பி நீங்க செய்த மாதிரியே செய்ய நினைச்சு வேலைக்கார் கிட்ட ஒரு 3 தேங்காயை தந்து திருக சொன்னேன்.. நான் சொன்ன நேரம் எமகண்டம். அதாவது வேலைக்காரர் வீட்டுக்கு கிளம்பும் நேரம். தேங்காயை திருகும்போது தேங்காயில் கறுப்பு பகுதியை தவிர்க்க அதை அரிந்து விட்டு சின்ன சின்ன துண்டா போட்டு மிக்சியில் அரைச்சுடலாம்னு நினைக்க்கறதுக்குள்ளே, எங்க ஆள் அலாவுதீன் விளக்குல இருந்து வந்த பேய் மாதிரி எல்லாத்தையும் திருகி கருப்பும், வெள்ளையுமா கொட்டி வச்சிருக்கார். சரி எதுவும் பேசாம அதை மிக்சில போட்டு சுத்தி எடுத்து அளந்துட்டு, சர்க்கரையை அளக்கலாம்னு பார்த்தா ஈரமா இருக்கு. எல்லாம் வேலையாள் விட்ட சாபம்னு நினைச்சுட்டு சளைக்காம அந்த சர்க்கரையையும் அளந்து ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்துல ரெண்டையும் போட்டு 2 ஸ்பூன் பட்டர் போட்டு மூடி வச்சேன். 2,3 முறை திறந்து கிளறினால் சும்மா கோவத்துல பொங்கிருச்சி பொங்கி.. கைல அங்கங்கே அந்த கலவை தெளிச்ச தெளிப்புல சரியான கோவம் வந்தது.. எக்கேடும் கெட்டு போன்னு மூடி வச்சுட்டு போய்ட்டேன்.

திரும்ப மனசு கேக்காம திறந்து பார்த்தேன்.. அப்ப அதுக்கும் கொஞ்சம் கோவம் அடங்கி, அடங்கியே வேக ஆரம்பிச்சது. அப்ப அப்ப வந்து கிளறிவிட்டு, வனி சொன்ன மாதிரி நுரைச்சு வருதான்னு கண்ணை வெண்ணெய்ல கழுவி பார்க்கறேன்.ஹு..ஹும் நுரை வந்த பாடில்ல.. கைல கம்பி பதம் வருதான்னு பார்த்தா கைலயே ஒட்டலயே.. அப்புறம் எங்கேர்ந்து கம்பியாவது, ஜல்லியாவது.. ஒரு 5 நிமிஷம் பொறுமையா கிளறி பார்த்துட்டு தட்ல கொட்டிட்டேன்.. என் பொண்ணும், பையனும் ஸ்வீட் வேனும்னு காவல் பூனைங்க மாதிரி சுத்தி உக்கார்ந்துட்டாங்க. இப்ப கிடையாது, உங்களுக்கு பீஸ் போட்டு தர்றேன்னு அவங்க கிட்டே பெருமிதமா சொல்லி அனுப்பி விட்டுட்டு 2 மணி நேரமா காத்திருக்கேன். பர்பி இருகும் அப்புறம் பீஸ் போடுவோம்னு.. நடுவே ஜுரம் வந்தவங்களை தொட்டு பார்க்குற மாதிரி இருகிடுச்சா இல்லையான்னு தொட்டு தொட்டு பார்த்து பார்த்து கால் ப்ளேட் வேற காலி பண்ணியாச்சு.

நடந்தது நடந்து போச்சு.. இனி மறைச்சு பலனில்லைன்னு வனிகிட்டயே உண்மையை சொல்லி வழியை கேட்டேன். அவங்க தான் திரும்ப போட்டு கிண்ட சொன்னாங்க. அதுக்கு பிறகு வேலை செய்ற பொண்ணுகிட்ட தந்து கிண்ட சொன்னேன். அவளுக்கு இந்த ஊர் சோளமாவு கலி கிண்டி கிண்டி பழக்கம். அந்த தோஷத்துல சூப்பரா கிண்டினா. அப்புறம் நான் பதம் பார்த்து பார்த்து இறக்கி தட்ல கொட்டி பீஸ் போட்டா வரல. சின்ன பசங்களை தாஜா பண்ற மாதிரி பர்பியையும் தாஜா பண்னி பீஸ் பீஸாக்கி போட்டாவும் பிடிச்சு உங்களுக்கு போட்டேன் வெற்றிக் களிப்போட ;) எப்பூடி எங்க சொதப்பல் ?????

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்பூ எப்படி தேங்காய் பர்ஃபி பண்றதுனு தெளிவா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்! கல்ப்பூ இன்னொரு விஷயம் வனி இவ்வளவு தெளிவா சொன்னமாதிரி தெரியில வெள்ளை தேங்காபர்ஃபி
பிரியாணிக்கு தண்ணீர் நிறைய ஊற்றி கஞ்சியாக்கியதே என்னுடைய முதல் சமையல் சொதப்பல்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பொங்கலுக்கு ஊருக்கு போறேன் . அதுக்கான் ஸ்பெஷல்.

இது நடந்தது சென்னையில். காலையில் எப்போதும்போல அவசரமாக டிஃபன் பாக்ஸ் சமையலை முடித்து, பிரேக்ஃபாஸ்ட்க்கு பொங்கல் செய்தேன். நேரமாச்சேன்னு அவசரம் காட்டினார் தலைவர். இதோ ஆச்சு ஆச்சுன்னு சொல்லிடே குக்கரை ஃபேனுக்கடியில் வைக்க எடுத்துவந்தேன். தண்ணி கொஞ்சம் அதிகமாயிடுச்சுபோல குழுங்கறமாதிரி தெரிஞ்சது. ஆனா வாசனை சூப்பரா இருக்கு. நீங்க சேர்ல உட்காருங்க நான் போடறேன்னு சொல்லி டேபிள் மேலே குக்கரை வைத்து திறந்தேன். முகத்தில ஆவிபட, ஆஹா என்ன மணம்னு சொல்லிட்டே உள்ளேபார்க்கிறேன் பொங்கலைக்காணோம் தாளிப்போடு தண்ணிதான் இருக்கு.ஹீ..ஹி இதுக்கு மேலே நடந்ததை நான் ஏன் சொல்லனும். அது சரி அரிசி எங்கேன்னு தானே கேள்வி . பருப்போடு கழுவி சின்க் பக்கத்தில் வச்சிருந்தேன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனி,

//வெறும் மாவை கரைச்சு மஃபின் செய்தா எப்படி இருக்கும்னு எக்ஸ்பீரிமண்ட்டா இருந்துட்டு போகட்டும்னு எல்லாரையும் குப்பைல போட்டேன்.// எக்ஸ்பிரிமெண்ட்டுக்கே இத்தனை மெனக்கெட்டிருக்கீங்கன்னா... க்ரேட் தான் வனி நீங்க ;)

//அது என்னன்னு தெரியாம அதை கைல வெச்சு ஆராய்ந்து பார்த்த என் வேலைக்காரரை பார்த்ததும் கண்ணே கலங்கிடுச்சு... ஷேம் ஷேம். ;( அம்மே.// ஹா.ஹா... அப்படி பார்த்தா இங்கே நான் அடிக்கடி கண் கலங்குவேன் வனி :) ஆனா, ஒண்ணு இதுங்களுக்கு நம்ம மொழியும் புரியாது.. எதுக்கு செய்றோம்னும் தெரியாது. அதனால சமையல்ல எப்ப தப்பு நடந்தாலும் அவங்க கிட்ட தந்து போட சொல்ல மாட்டேன். நல்ல பொருளையும் தூக்கி போட்டுட்டா என்ன பண்றது..

நல்ல சொதப்பல் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அருள்,

அறுசுவைலயே தெளிவா 4 பக்கம் டைப் பண்ணி விளக்கி புரிய வைக்க நம்மள விட்டா ஆளில்ல ;) அப்பவும் யாருக்கும் புரியாதுங்கறது தான் கொடுமை.. இப்ப என்னதான் சொல்ல வர்றேங்கற மாதிரி தான் பார்ப்பாங்க.. அவ்ளோ தெளிவா விளக்குவேன்.. நீங்க என்னடான்னா நான் தெளிவா விளக்கினேன்னு சொல்றீங்க.. தூக்க கலக்கத்துல சொல்லிட்டீங்க.. மன்னிச்சு விட்டுடறேன் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனாவின் விடாமுயற்சியைப் படித்து புல்லரிப்பு.ஹா..ஹா முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சரித்திரம் படைத்த சமையல் குறிப்புகள்னு புக்கே போடலாம் என் சொதப்பல்களை வச்சு.. அந்த அளவு முயற்சியில் இகழ்ச்சியடையாதவள் ;) உங்கள் பதிவுக்கு நன்றி ஜெயந்தி :)

//ஆஹா என்ன மணம்னு சொல்லிட்டே உள்ளேபார்க்கிறேன் பொங்கலைக்காணோம் தாளிப்போடு தண்ணிதான் இருக்கு.// உண்மையாவே இது தாங்க சூப்பர் சொதப்பல் :) நானா இருந்தா சுதாரிச்சுட்டு சமாளிச்சு இது பொங்கலுக்கு முன்னாடி குடிக்கற பொங்க தண்ணி சூப்-னு சொல்லி தந்திருப்பேன் ;) பொங்கல் சாப்டா மந்தமா இருக்கும். அதுக்கு முன்னாடி குடிக்கறது இதுன்னு சொல்லிடுவேன் ;) அடுத்தமுறை சொதப்பினா இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. எதிர்வினை வந்தா நான் பொறுப்பல்ல ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//இது பொங்கலுக்கு முன்னாடி குடிக்கற பொங்க தண்ணி சூப்-னு சொல்லி தந்திருப்பேன் //ஹா..ஹா. நல்ல முயற்சி.உங்க ஐடியாவிற்கு இந்தா பிடிங்க கோப்பை.

என்ன பண்ண நான் ஒரு "பொங்க"வச்சி அதைக்கொண்டாடி முடிக்கறதுக்குள்ளே அடுத்த "பொங்க"வக்கும் நேரம் வந்துடுது. அப்படி நான் "பொங்க"ல் வைக்கும்போதெல்லாம் மாமா தீபாவளி கொண்டாடுவார் ஹி..ஹி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

உங்களால நான் போய் மீண்டும் பர்ஃபி ரெசிபியில் ஏதும் பிழை இருக்கான்னு தேடிட்டு வரேன் ;) ஏன் மகளே... நான் உங்களை மூடி போட சொல்லவே இல்லையே... மூடி சமைத்தால் நீர்க்க தானே செய்யும்??? அட பாவிகளா.... இப்படி சொதப்பினதை நேற்றி நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே ;) முடியல சாமி முடியல... இனி மூடி போட கூடாதுன்னு குறிப்புல எழுதனும் போலயே.... ஹஹஹா. கல்ப்ஸ் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது தான் மிச்சம். நடத்துங்க நடத்துங்க... இன்னும் என்ன என்ன ஆராய்ச்சி பண்ணனுமோ பண்ணுங்க.

நானும் பொதுவா வேலை ஆட்களிடம் கொட்ட சொல்ல தர மாட்டேன்... ஆனா அன்னைக்கு அவன் அங்கையே நின்னு வேலை பார்த்துட்டு இருந்தானா, அவர் வரும் முன் டிஸ்போஸ் பண்ணலன்னா இவ்வளவு வீணான்னு திட்டுவாருன்னு பயந்து போய் அவசரமா அவன்கிட்டையே கொடுத்து கொட்ட சொன்னேன். ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்