பெரும் பிரச்சனை உதவுங்கள் தயவு செய்து.

பெரும் பிரச்சனை உதவுங்கள் தயவு செய்து இம்மாதத்தின் குளிர் அதிகம் என்பதால் வீசிங் மனிதனை வாட்டி வதைக்கிரது. பகல் முலுதும் வேலை செய்து பாடுபடும் மனிதனுக்கு இறவில் நிம்மதியான உறக்கத்தை இலந்து மூச்சு விட முடியாமல் தவிக்கும் தவிப்பை கான முடியவில்லை..இதற்க்கு எதேனும் வழி இருந்தால் சொல்லுங்கல் தோளிகலே. உங்களுக்கு தெரிந்த சிரு விசயமாக இருந்தாலும் கூறுங்கல். பெரிதும் உதவியாக இருக்கும் பலருக்கும்.

உங்க கேள்வியை படித்ததும் வேதனை புரிந்தது. நானும் ஆஸ்துமா குடியிருக்கும் பாக்யசாலிதான். கவலைப்படாதீங்க. குளிர்காலம் சிகிச்சைக்கு உகந்தது அல்ல. ஆனால் கோடைகாலத்தில் நிச்சயமா நல்ல சிகிச்சை மூலம் விரட்டி பாதுகாப்பா இருக்கலாம். இப்போ எப்படி ஆஸ்துமாவை குறைப்பது என்பது பற்றி சொல்றேன் . இது உங்க கணவருக்கு இருக்குன்னு உங்க கேள்வியில் தெரியுது. என்ன மருந்து எடுக்கறார்? எத்தனை வருடமா ஆஸ்துமா இருக்கு? அவருக்கு எதெதெல்லாம் அலர்ஜி?

நான் சென்னை மயிலாப்பூரில் ஒரு டாக்டரிடம் போனேன். பரிசோதித்து மாத்திரைகள் தந்தார். அதை எடுத்துகிட்டே உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் நிம்மதியாய் தூங்கினேன்.

நுரையீரலுக்கு நல்ல பயிற்சி அளிப்பதன் மூலம் அதன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கமுடியும் . ஆனால் இது கோடைகாலத்தில் மட்டுமே சாத்தியம். இப்போது குளிர் காலத்தை சமாளிக்க மருந்தின் துணை அல்லாது வேறு வழி இல்லை. ஆஸ்துமாவிற்கான் எந்த மருந்தும் நுரையீரலை பலமிலக்கவே செய்யும்.இப்போதைக்கு வேறுவழியில்லை.இன்னும் சொல்றேன்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

//நுரையீரலுக்கு நல்ல பயிற்சி அளிப்பதன் மூலம் அதன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கமுடியும்.//
ஜெயந்தி சொல்லி இருப்பது முற்றிலிம் உண்மை, பிராணயாமப்பயிற்சியின் மூலம் ஆரம்பக்கட்டத்திலிருந்தால் முற்றிலும் குணமாக்கிவிடலாம், தொடர்ந்து இப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நாள் பட்டிருந்தாலும் கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆர்ட் ஆஃப் லிவிங்(ஸ்ரீ ரவிஷங்கர்ஜீ) பயிற்சி மையம் இதற்கு சிறந்த பயிற்சி அளிக்கிறார்கள்.
விரைவில் குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள் தோழி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெயந்தியும், அருளும் சொன்னது போல தான் என் அப்பா சொல்வார். அவர் யோகா மற்றும் மூச்சு பயிற்சி மூலம் இப்போது இந்த தொந்தரவு இல்லாமல் இருக்கிறார். ஜெயந்தி சொன்னது போல எது அலர்ஜின்னு பார்த்து கொஞ்சம் அவாய்ட் பண்ணனும். எனக்கு சிறிது காலம் இந்த தொந்தரவு இருந்தது, ஆனால் அது பூக்களின் மகரந்தத்தால் ஏற்ப்பட்டது என தெரிந்து அவற்றின் அருகே இருப்பதை தவிர்தேன்... இப்போது அந்த தொல்லையே இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளே மிகவும் நன்றி உங்களின் பதிவுகலுக்கு. எனக்கு மிகப்பெரிய சந்தேகம். வீசிங் என்பது ஆஸ்துமா தானா? இதற்க்கு தீர்வு உன்டா? என் அக்காவின் குழ்ந்தைக்கும் (வயது 8) வீசிங் தொந்தரவு உள்ளது. எனக்கு TP என்றால் மிகவும் பயம். என் தாத்தாவிர்க்கு இருந்தது. இதற்க்கு முடிவு யோகா என்றால் எம்மாதிரியானது. உங்கலுக்கு தெரிந்த பயிற்ச்சி இடங்கல் இருந்தாலும் கூறுங்கல்.

நல்ல ஹோமியோபதி மருத்துவரை அணுகுங்கள்.சிறுகுழந்தைக்கு இப்போதே அந்த மருத்துவத்தில் பலன் உண்டு. அலர்ஜியினாலும் வீசிக் வரலாம்.

வீசிங் ஆஸ்துமாவால் தான் வர வேண்டும் என்றில்லை. எனக்கு ஆஸ்துமா கிடையாது, ஆனால் வீசிங் இருந்தது. காரணம் அலர்ஜி மட்டுமே. வீசிங்கு பல காரணங்கள் உண்டு. ஆஸ்துமாவும் ஒரு காரணம் அவ்வளவு தான். குழந்தைகளுக்கு வரவும் காரணம் நிறைய இருக்கு. சில நேரம் வெறும் ரெஸ்பிரேட்டரி ட்ராக் இன்ஃபெக்‌ஷனால் கூட ஏற்படும். அதனால் பயம் தேவை இல்லை. எதுவாக இருந்தாலும் மூச்சு விட கஷ்டப்படுவது ஒரு பெரிய பிரெச்சனை தான் என்பதால், மருந்தோடு மட்டும் அல்லாது மூச்சுபயிற்சி செய்து கட்டுப்பாட்டில் வைப்பது நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனி. கன்டிப்பாக மூச்சு பயிற்சி செய்ய தொடங்கி விடுகிரோம். துளசி சாப்பிட்டால் சிரிதளவு நன்றாகுமா? தொலைகாட்சியில் பார்த்தேன். சீரகம், துளசி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடித்தால் நல்லது என்றார்கல். இது என்ந்தலவுக்கு சாத்தியம். யாரேனும் பயன் படுத்துல்ளீர்களா?

காலை தினமுமே வெறூம் வயிற்றில் துளசி சாப்பிடுவது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி தொல்லைக்கு இது மருந்து. வீசிங் பிரெச்சனைக்கு எந்த அளவு உதவும் என்று தெரியாது. ஆனால் தினமும் சாப்பிடுவது நல்லது.. அதனால் சாப்பிடுங்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் அனுபவத்தில் ஹோமியொபதி நல்ல relief தரும். ஆனால் குணம் ஆக நாள் ஆகும்.

தினமும் மிளகு+ தேன் எடுக்கவும். This helps expel the accumulated phlegm.

முச்சு பயிர்சி நல்ல பலன் தரும். நடக்கும் போது 2 stepsku முச்சை உள்ளெ இழுக்கனும். பின் 2 எட்டிர்கு முச்சை வெளியில் விடனும்.Once they get comfortable with this, then they can inhale and exhale for more steps. இது நுரையேரல் விரிய உதவும்.

100% சரி ஆகும்னு இது வரை எந்த doctorum promise பண்ண மாட்டெங்கிராங்க. They say cure depends on one's immunity and a lot other factors. But for me, it's 99% cured. I still get a wheezing when exposed to certain types of dust. there was a time when I used to get wheezing for no reason and it used to be there throughout the year no matter what the weather was/how clean the surrounding was. Now I get it like 2-3 times a year and the intensity is much lower. I was under homeopathy treatment for 2 years. Allopathy medicines can weaken the nervous system when taken for a long time.

மேலும் சில பதிவுகள்