வெஜிடபுள் புலாவ்

தேதி: December 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (10 votes)

 

பாஸ்மதி அரிசி - அரை கிலோ
தேங்காய் சிறியது - ஒன்று
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கேரட் + பீன்ஸ் (கலந்து) - கால் கிலோ
பட்டாணி - 100 கிராம்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு சிறிய கப்
புதினா, கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 5
வெண்ணெய் (அ) எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். கேரட், பீன்ஸை நறுக்கி வைக்கவும். அரிசியை களைந்து வைக்கவும்.
அரிசியை அளந்து ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் (அ) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வேக விடவும்.
களைந்து வைத்துள்ள அரிசியை போட்டு கிளறி, தேங்காய் பால், தயிர் சேர்த்து கிளறவும்.
அடுப்பை அதிக தீயில் ஐந்து நிமிடமும், சிறுந்தீயில் பத்து நிமிடமும் வைத்து கடைசியில் நெய் சேர்த்து இறக்கி புதினா, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
சுவையான வெஜிடபுள் புலாவ் தயார். மட்டன் கிரேவி (அ) உருளை கிரேவியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புலாவு சூப்பர்... வாசமா அப்படியே கையில் கொடுத்துடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மூன்றாவது குறிப்பும் முத்தான குறிப்பா கொடுத்திருக்கீங்க. கண்டிப்பா ட்ரை பண்றேன் ஷமீனா. வாழ்த்துக்கள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வனிதா அக்கா உங்களுக்கு இல்லாததா? இந்தாங்க எடுத்துக்கோங்க!
சீக்கிரம் பிடிங்க சூடா இருக்கு........

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நன்றி நித்யா. கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு பதிவு போடுங்க.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

sooda erukurathu kaila kudokathingapa

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீனா வெஜிடபுள் புலாவ் ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க. வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் சமினா அருமையா இருக்குமா கன்டிப்பா செய்துப்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீனா,கம கம வெஜிடபுள் புலாவ் நல்லா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வெஜ் புலாவ் சூப்பரா இருக்கு கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எப்போதும் பிரியாணி இந்த மாதிரி சாப்பிட்டு அழுத்து போச்சி சோ இன்ஷா அல்லாஹ் இந்த ஃப்ரைடே உங்க வெஜ்புலாவ் தான்...வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

சரிங்க. உங்களுக்கு தான் பிளேட் தந்திருக்கிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வ அலைக்கும் சலாம் ஹலீலா. வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வ அலைக்கும் சலாம் அம்மா, கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்கம்மா. வாழ்த்துக்கு நன்றிமா.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வ அலைக்கும் சலாம் முஹ்சினா. வாசனை அங்க வரைக்கும் வருதா? நன்றி உங்கள் பதிவிற்கு.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுவர்ணா. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ரொம்ப அலுத்துக்காதீங்க ஷமிஹா. ஓகே ஓகே, மறக்காம வெள்ளிக்கிழமை செய்துட்டு எனக்கும் ஒரு பிளேட் பார்சல் செஞ்சிடுங்க.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமீனா வெஜிடபுள் புலாவ் ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க................ வாழ்த்துக்கள்!!!!! கண்டிப்பா ட்ரை பண்றேன்..........

அஸ்ஸலாமு அலைக்கும் சமீனா
வாழ்த்துக்கள்....
புலாவ் சூப்பர்...தேங்காய் பாலில் செய்திருப்பதால் செம ருசியாக இருக்கும்...
கண்டிப்பா செஞ்சு பார்க்குறேன் மா...

ஷமீனா புலாவ் அருமையா செஞ்சு இருக்கீங்கமா .வாழ்த்துக்கள் ..தொடர்ந்து குறிப்புஹள் குடுத்து அசத்துங்க மா.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபி. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வாழ்த்துக்கு நன்றிமா. செய்து சாப்பிடும்போது எனக்கும் ஒரு பிளேட் தரணும்.ஓகே வா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

வாழ்த்துக்கு நன்றி ஷம்னாஸ். நீங்க சொல்லிட்டீங்கல்ல இனி அசத்திபுடுறேன் அசத்தி... இப்ப எப்பிடி தமிழ் பதிவு?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஓகே அசத்துங்க அசத்துங்க..இப்ப ரஹ்மான் தூங்குரார்மா.அதான் அண்ணா வோட லேப்டாப் எடுத்து தமிழில் பதிவு போடுறேன் மா.மகன் முழித்த சமயத்தில் லேப்டாப் எடுத்து இரண்டு தடவை உடைத்து விட்டார் ரஹ்மான் அதான் அவன் தூங்கும் சமயத்தில் எப்பொழுதாவது தமிழ் ல டைப் பன்வேன்மா ..மத்த படி மொபைல் மட்டும் தான் நா use பண்வேன்

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

வெஜிடபுள் புலாவ் சிம்ப்ளி சூப்பர்ர்! தேங்காய்ப்பால் சேர்த்து செய்தாலே ஒரு தனி டேஸ்ட்தான்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சுஶ்ரீ.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமீனா,
நானும் இது போலே செய்வதுண்டு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல குறிப்பு,
வாழ்த்துக்கள் ஷமீனா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்கள் இருவரின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ம்ம் அப்படியே வாசம் தூக்கிறமாதிரி இருக்கு.

எளிதாகவும் இருக்கு.இந்த சனிக்கிழமை செய்திடுவோம்.

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!