தேதி: December 26, 2012
அழகான டிசைன் துணி
ஸ்பாஞ்ச் ஷீட்
லைனிங் துணி
வெல்க்ரோ (Velcro)
அழகான டிசைன் துணியை எடுத்து உங்கள் மொபைலின் அளவிற்கு அளந்து, நான்கு புறமும் தையலுக்காக அரை இன்ச் அதிகமாக விட்டு கோடு வரைந்து கொள்ளவும். (ஒரு பக்கம் மட்டும் மடித்து தைப்பதற்காக அதிகமாக ஒரு இன்ச் விடவும்). வரைந்துள்ள அளவில் டிசைன் துணியை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இதே போல் ஸ்பாஞ்ச் ஷீட்டையும், லைனிங் துணியையும் வெட்டிக் கொள்ளவும்.

அடியில் டிசைன் துணியை வைத்து அதற்கு மேல் ஸ்பாஞ்ச் ஷீட், லைனிங் என அடுக்கவும்.

ஒரு இன்ச் அதிமாக விட்டு வெட்டிய பாகத்தை படத்தில் காட்டியபடி மடித்து தைக்கவும்.

அதில் வெல்க்ரோ வைத்து தைத்து, இரு துண்டுகளிலும் டிசைன் துணி உள்பக்கம் இருப்பது போல் வைத்து இணைத்து தைக்கவும்.

தைத்த பிறகு பிரட்டி விடவும். பவுச் ரெடி

வெல்க்ரோ வைக்காமல் ஜிப் வைத்தும் தைக்கலாம்.

Comments
நிகிலா
அழகோ அழகு. சுலபமா செய்யும்படி சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அட்மின் குழுவினருக்கு
அட்மின் குழுவினருக்கு தான்க்யூ தான்க்யூ
இது என்னோட முதல்குறிப்பு
தான்க்யூ வனி.
முதல் குறிப்புக்கு முதல் வாழ்த்து வனிகிட்ட இருந்து.தான்க்யூ வனி.
ரொம்ப ஈசியா செய்யலாம்.அவசியம் செய்து பாருங்க.
நிகி
நிகி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................ரொம்ப ஈசியா & அழகா செய்து காமிச்சு இருக்கீங்க :) ஒரு மாசமா எப்பொ வரும்னு எதிர்பார்த்து வந்தாச்சு வாழ்த்துகள்.................இதோட நிறுதிடாமல் தொடர்ந்து கலக்குங்க :)
ரூபி
ரூபி
ரொம்பவும் நன்றி. இது நான் ரெண்டாவது அனுப்பிய குறிப்பு .முதல்ல அனுப்பியது இன்னமும் வரலை.தொடர்ந்து கலக்கிடுவோம். ரூபி
நிகிலா அக்கா
நிகிலா அக்கா
சிம்பிள் பவுச் பார்க்வெ ரொம்ப குட்டியா கியூடா இருக்கு அக்கா சூப்பர் பவுச் முதல் குறிப்பே அசத்தலா இருகே அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
நிகிலா முதல் குரிப்பே முத்தான
நிகிலா முதல் குரிப்பே முத்தான பவுச் நல்லாயிருக்குமா வாழ்த்துக்கள்
நிகிலா
நிகிலா, உங்களின் குறிப்பு மிகவும் அழகாகவும் உபயோகமானதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் தோழி, தொடர்ந்து குறிப்புகள் அனுப்புங்கள்....
கனிமொழி
கனிமொழி
குட்டியா க்யூட்டா இருக்கா. அப்பதானே ஹேண்ட் பேகில் வச்சுக்கலாம்.ரொம்ப நன்றிமா
நிஷா
உங்களின் முத்தான வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.
nikila
அழகா செய்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
லக்ஷ்மி
லக்ஷ்மி
ஆமா பா சும்மா கையிலும் வச்சுக்கலாம். அல்லது .மொபைல் ஸ்க்ராட்ச் ஆகாமல் பவுச்ல வச்சி ஹேண்ட்பேகில் போட்டுக்கலாம்.நல்ல உபயோகமானது.நன்றி லக்ஷ்மி
முஷ்ஹினா
முசி நான் உங்களிடம் பேசுவது முதன்முறை என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கு நன்றி தோழி முசி
நிகிலா
பவுச் ரொம்ப அழகா இருக்கு நிகிலா.கண்டிப்பா செய்துபார்ப்பேன்.இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.
Kalai
நிகிலா
நிகிலா
அழகான பயனுள்ள கைவேலை..
ரொம்ப நல்லா இருக்கு ..
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சிம்பிள் பவுச்
நிகிலா,
சிம்பிள் பவுச் ரொம்ப அழகா செய்து காட்டி இருக்கீங்க. முத்தான இந்த முதல் குறிப்புக்கும், இன்னும் பல தொடர்ந்து கொடுத்திடவும் வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
கலா
கலா
வாழ்த்துக்கு நன்றி கலா.ரொம்பவும் ஈசியானது.அவசியம் செய்து பாருங்க
ரம்யா
ரம்யா
வெல்வெட் துணியில் செய்தால் ரொம்ப அழகா இருக்கும் .
வாழ்த்துக்கு நன்றி ரம்யா
சுஸ்ரீ
சுஸ்ரீ
ரெண்டு மூணு மாடல்ல பவுச் கொடுக்க நினைச்சிருக்கேன்.முயற்சி பண்ணுறேன்.
நன்றி சுஸ்ரீ
நிகிலா
பவுச் ரொம்ப அழகா இருக்கு நிகிலா வாழ்த்துக்கள்
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
நிகிலா
ம்ம்ம் ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க:) தொடர்ந்து உங்க கைவேலைப்பாடுகளை ஸ்டெப் பை ஸ்டெப்பா படம் எடுத்து போடுங்கோ;) நாங்க காத்திருக்கோம் நிகி:) வாழ்த்துக்கள் நிகி.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஹலீலா
ஹலீலா
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தோழி
நித்யா
நித்யா
ஸ்டெப் பை ஸ்டெப்பா தானே,அவசியம் போடுறேன் நித்தி.
உங்க பதிவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்பவும் நன்றி.
நிக்கி
ஹாய் நிக்கி,
நிக்கியோட முதல் கைவினை குறிப்பு வெளியானதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்,
வாழ்த்துக்கள்டா.எளிமையும்,அழகும் இணைந்த ஒரு அசத்தலான குறிப்பு
கொடுத்திருக்கீங்க,பாராட்டுக்கள் நிக்கி.
படங்கள்,விளக்கம்,குறிப்பு எல்லாமே நிக்கியோட கைவண்ணத்தில்
ஜொலிக்குது,மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் நிக்கி.
நிக்கியின் கைவண்ணம் கைவினைப் பகுதியை தொடர்ந்து அலங்கரிக்க
வாழ்த்துக்கள்:)
லேட்டா பதிவு போடறதுக்கு சாரி நிக்கி,வோட் மட்டும் பண்ணேன்,இப்பதான்
பதிவு போட முடிஞ்சுது.தொடர்ந்து கலக்குங்க செல்லம் :)
அன்புடன்
நித்திலா
நித்திமா
நித்திமா
வோட் பண்ணீங்களா?ரொம்ப நன்றி பா
கவிதை லயத்துடன் உள்ள உங்க பதிவை படிக்கவே எனக்கு ரொம்பவும் ஆனந்தமா இருக்கு பா.
பௌச்
அழகா, அருமையா இருக்கு நிகிலா. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
- இமா க்றிஸ்
இமா
உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் .அறுசுவையில் என் கைவேலைக்குன்னு ஒரு பேஜ் வந்திருக்கே தான்க்யூ இமா.
thank u so much
simple and nice
simple and nice
ஷீலா
ஷீலா மிக்க நன்றி