மொச்சைக்கொட்டை குழம்பு

தேதி: December 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

சிவப்பு மொச்சைக்கொட்டை - அரை கப்
கத்தரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - ஒன்று
அவரைக்காய் - 10
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - எலுமிச்சை அளவு
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் விழுது - 3 தேக்கரண்டி
இறால் - 20
கோலா கருவாடு - ஒன்று
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை நீளவாக்கிலும், அவரைக்காயை இரண்டாகவும் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீருடன் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அதில் மல்லித் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். அந்தக் கலவையுடன் இறாலையும், வறுத்த கருவாட்டையும் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மொச்சையைப் போட்டு 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
மொச்சை முக்கால் பாகம் வெந்ததும் அவரைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வேக விடவும்.
அத்துடன் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றவும். பிறகு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும். ஒரு மூடி போட்டு மசாலா வாசம் போகக் கொதிக்க விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை குழம்பில் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சுவையான மொச்சைக்கொட்டை குழம்பு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹை... இறால், கருவாடு, மொச்சைன்னு காம்பினேஷன் சூப்பர் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலீலா எனக்கு பிடித்த குழம்பு கட்டாயம் செய்து பார்க்கிறேன் ..............

நீங்க அரட்டைக்கு வந்தது சந்தோசமா இருக்கு தொடர்ந்து வாங்க கொஞ்சம் வேலையா இருந்துட்டு இருக்கேன் நெக்ஸ்ட் வீக்கில் வந்து ஜாய்ன் பண்ணிகுறேன் :)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா சூப்பர்மா இந்த மொச்சகொட்டை ஆனம் எங்கம்மா செய்வாங்க இப்ப பார்த்தவுடன் செய்யனும்னு நாளைக்கு எங்கவீட்டில் இதுதான் வாழ்த்துக்கள்மா

ஹளிலா இதே மாதிரி தான் நாங்களும் செய்வோம் மா.இன்று மொச்சை சேர்க்காமல் இந்த குழம்பு தான் செய்தோம்.நன்றாக இருந்தது.கண்டிப்பா சிஹப்பு மொச்சையில் செய்து பார்க்கிறேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள் தோழி.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,மொச்சகொட்டை ஆனம் சூப்பர்.நானும் இதுபோல் தான் செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ம்ம்ம் எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப பிடிச்ச குழம்பு:) ஆனா நாங்க பச்சை மொச்சையும் நெத்திலி கருவாடும் போட்டு செய்வோம்பா. சிவப்பு மொச்சைன்னா ராஜ்மாவை சொல்றீங்களா? குறிப்புக்கு வாழ்த்துக்கள் ஹலி:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹலீலா, இறால்,மொச்சை,கத்தரிக்காய் காம்பினேஷன்ல மொச்சை குழம்பு கலக்கலா இருக்கு. நான் வெள்ளை மொச்சைல செய்திருக்கேன். நீங்க தந்திருக்கும் மொச்சை .. ராஜ்மாவா? படத்தில் அப்படி தெரிகிறதா? மணமான, ருசியான குறிப்புகளுக்கு வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ரூபி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா லாத்தா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இன்ஷாஅல்லாஹ் அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷம்னாஸ் உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நித்யா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.இது ராஜ்மா தான் எங்க ஊரில் இதை சிவப்பு மொச்சைக்கொட்டைனு சொல்வாங்கமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

முகப்பிலேயே மொச்சைக்கொட்டை குழம்பு சும்மா ஆளைத்தூக்குது! :)

வழக்கமா, மொச்சையும், கத்திரிக்காயும் சேர்ந்த காம்பினேஷன்ல‌ செய்வேன். உங்க குழம்பில், நிறைய காய்கறி, இறால் எல்லாம் போட்டு அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கல்பனா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.இது ராஜ்மா தான் எங்க ஊரில் இதை சிவப்பு மொச்சைக்கொட்டைனு சொல்வாங்கமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சுஸ்ரீ உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ம்ம்ம்ம்..யம்மி குழம்பு.நானும் இதேபோல்தான் செய்வேன்,ஆனா பச்சை மொச்சையில் இறால் சேர்க்காமல்,சால கருவாடு போட்டு செய்வேன்.முதல் நாளைவிட அடுத்த நாள் சுவை அட்டகாசமா இருக்கும்.வாழ்த்துக்கள்.

Kalai

அஸ்ஸலாமு அலைக்கு ஹலிலாஅப்படியெ எங்க அம்மா செய்ரா மாதிரியெ இருக்கும்

ஹளிலா,
சூப்பர் குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹலி அக்கா அம்மாகு ரொம்பவே பேவரிட் இந்த டிஷ் அம்மாகு உடம்பு முடியாததால இந்த டிஷ் சமைகுரது இல்ல அக்கா நா நாலைக்கே இத அம்மாகு செஞ்சு குடுகுரேன் அக்கா நன்றி அக்கா மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அஸ்ஸலாமுஅலைக்கும்...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச குழம்பு ஹலீ இது...இதை நாங்க மொச்சைகொட்டை,கருவாடு,இறால் போட்டு காய்கறி ஆனம்ன்னு சொல்லுவோம் ரொம்ப அழகா செய்து காட்டி இருக்கீங்க வாழ்த்துக்கள் ஹலீ...:)

SSaifudeen:)

கலா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ரினோஸ் உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவிதா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா அம்மாக்கு அவசியம் செஞ்சி குடுங்கமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. எங்க ஊர் பக்கம் மொச்சைக்கொட்டை ஆனம்னு சொல்வாங்கமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)