நானஹத்தா

தேதி: December 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

மைதா - ஒரு கப்
கரூர் நெய் - 100 கிராம்
சீனி - முக்கால் கப்
சமையல் சோடா - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

சீனியை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய், சீனி, சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைய பிசைய உளுந்து மாவு போல் இருக்கும்.
அதில் மைதா மாவை சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும்.
மாவை அடித்து பிசையாமல் தேய்த்து பிசையவும்.
மாவை கையால் கால் இன்ச் அளவிற்கு தட்டிக் கொள்ளவும். சிறு அச்சுகளால் தட்டிய மாவை விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
நெய் தடவிய பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள நானஹத்தாவை சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும். குக்கர் தட்டை குக்கரில் வைத்து அதன் மேல் நானஹத்தா வைத்துள்ள பாத்திரத்தை வைக்கவும். கேஸ்கட், வெயிட் போடாமல் குக்கரை மூடி சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும். இடையில் வேண்டுமானால் திறந்து பார்த்துக் கொள்ளலாம்.
நானஹத்தா வெள்ளையாக இருக்க வேண்டும். மேலே லேசாக வெடிப்புகள் இருக்கும் சிறிய தோசை திருப்பியால் மெதுவாக எடுக்கவும்.
சுவையான நானஹத்தா தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹலி அக்கா நானஹத்தா பார்க்க பட்டர் பிஸ்கட் மாரி இருக்கு அக்கா யம்மி டிஷ் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அஸ்ஸலாமு அலைக்கும் நானஹத்தா சிம்பிளா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்....

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா நானஹத்தா ரொம்ப நல்லாயிருக்கும்மா ஒவன்ல பன்னிதான் பார்த்துருக்கேன் குக்கரில். இதை செய்யலாமா நானும் ட்ரைபன்னுறேம்மா வாழ்த்துக்கள்

ஹலீலா, எளிய,சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ். நல்ல குறிப்பு. 'நனஹத்தா' பெயர் காரணம் என்னனு சொன்னீங்கன்னா நல்லார்க்கும். தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். உங்களோட அத்தனை குறிப்புகளுமே புதுமையாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா நானஹத்தா நான் ஒவன்ல செய்து தான் பழக்கம்.ஒரு சந்தேகம் குக்கர் தட்டு,சும்மாவே வைக்கனுமா?எனக்கு நானஹத்தான் அமையாது.உங்கள் முறையில் செய்து பார்க்கீரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் ஹலிலா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அஸ்ஸலாமு அழைக்கும்...நெனச்சேன் பேரை பார்த்ததும் இது கண்டிப்பா ஹலீலா குறிப்பா தான் இருக்கும்ன்னு நெனச்சேன்...நீங்க எங்க ஊர் டிஷ் நிறைய செய்றீங்க...நானஹத்தம் எங்க ஊரில் பேமஸ்...பட் இது வரைக்கும் நான் செய்தது கிடையாது இப்போ உங்க குறிப்பை பார்த்ததும் எனக்கு செய்ய ரொம்ப ஆவல் வந்திடுச்சி இதோ நானாஹத்தம் வேளையில் இறங்க போறேன்...வாழ்த்துக்கள்:)

ஹலீலா உங்களுக்கு அரட்டையில் 4 வது பகுதியில் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க...ஹலீ...
இன்ஷா அல்லாஹ் நீங்க அரட்டைக்கு வரும் போது சொல்லுங்க நாம பேசலாம்...

SSaifudeen:)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் சாதிகா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா லாத்தா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் ஒவன்ல செய்தது போலவே இருக்கும். இன்ஷா அல்லாஹ் அவசியம் செஞ்சி பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கல்பனா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா நானஹத்தா எங்க ஊர் பக்கம் ரொம்ப ஃபேமஸ்மா சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் அவசியம் செஞ்சி பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா . இன்ஷா அல்லாஹ் அவசியம் செஞ்சி பாருங்க குக்கரில் தண்ணீர் ஊற்ற கூடாது குக்கர் தட்டை குக்கரில் வைத்து(குக்கருடன் கொடுத்து இருப்பார்களே அந்த தட்டு) அடுப்பை மட்டும் சிம்மில் வைங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அருட்செல்வி உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா எப்படி இருக்கீங்க? உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இன்ஷா அல்லாஹ் அவசியம் செஞ்சி பாருங்கமா

ஷமீஹா அப்போதே உங்களுக்கு பகுதி 8ல் பதிவு போட்டேன் மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரைத்தான் கரண்ட் இருக்கும் உங்களுக்கு நேரம் கிடைத்தால் அரட்டை பக்கம் வாங்க இன்ஷா அல்லாஹ் நாம பேசலாம்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நானும் நானஹத்தா அடிக்கடி செய்வேன்.............ஆனால் ஓவனில் தான் குக்கரில் ட்ரை பண்றேன் ஹலி

கல்ப்ஸ் நானஹத்தா என்றால் பேக்கரியில் விற்கும் சூஸ்பரி தான் :)...........

நானும் இதுபோல் அவனில் செய்துருக்கேன்.பேரு தெரியாமையே செய்துருக்கேன்.டேஸ்ட் நல்லா இருக்கும்.இப்போதான் தெரியுது இது நானஹத்தான்னு.குக்கரில் செய்து பார்கிறேன்.தண்ணி ஊத்தாம வைத்தால் குக்கர் அடி பிடிக்காதா?.சொல்லுங்களேன் ஹலிலா.வாழ்த்துக்கள்.

Kalai

நானஹத்தா அழகா இருக்குப்பா. சாப்பிடவும் டேஸ்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு டவுட் க்ளியர் பண்ணுங்க ப்ளீஸ். கரூர் நெய்க்கு பதிலா எந்த நெய் யூஸ் பண்ணலாம்? மைதா கப் அளவில் கொடுத்திருக்கீங்க. அது எவ்வளவு கிராம்னு கொஞ்சம் சொல்லுங்க ஹலி இல்லாட்டி நெய் அளவை கப் அளவில் சொல்லிடுங்க. என் மகளுக்கு செய்துதரப்போறேன். சோ ப்ளீஸ் க்ளியர் மி தி டவுட்ஸ்:) வாழ்த்துக்கள் ஹலி

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
நானஹத்தா செம சூப்பர்......அழகா செய்முறையை விளக்கி இருக்கிங்க.....இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் செஞ்சு பார்க்குறேன்.....

ஹளிலா,
எளிமையான குறிப்பு..அதுவும் முட்டை சேர்க்காமல்...
ஓவனில் எவ்ளோ நேரம் வைக்கலாம்?
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நான்ஹத்தா அருமை... படங்கள் பளிச். செய்யறேன் கட்டாயம்.. ஈசியா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

pressure cooker-ril thannir serkanuma?illai vendama?badil kurungal.pls.

mohusina

வஅலைக்கும் முஸ்ஸலாம் ரூபி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா இன்ஷா அல்லாஹ் குக்கரில் அவசியம் செஞ்சி பாருங்க
கல்பனாவின் கேள்விக்கு பதில் சொன்னதர்க்கும். நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கலா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. என் குக்கருக்கு எதுவும் ஆகல குக்கர் நல்லா இருக்கு அடியில லேசா கொஞ்சம் கருப்பா ஆச்சி அதுவும் குக்கர விளக்கவும் போயிடுச்சி.அதனால பயப்படாம செஞ்சி பாருங்க ஒன்னும் ஆகாது. அடுப்பை மட்டும் சிம்மில் வைங்கமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நித்யா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா பசுநெய் அல்லது டால்டா சேர்த்து செய்யலாம். மைதா 150கிராம் அல்லது ரைஸ் குக்கருடன் கொடுத்து இருப்பார்களே அந்த கப்பால் ஒரு கப் சேர்த்து செஞ்சி பாருங்க நல்லாயிருக்கும்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா இன்ஷா அல்லாஹ் அவசியம் செஞ்சி பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவிதா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா அவனில் 150 டிகிரி சூட்டில் 10 நிமிடம் வைக்கவும் அவ்வப்போது திறந்து பார்க்கவும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா அவசியம் செஞ்சி பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அர்சத் குக்கரில் தண்ணீர் ஊற்ற கூடாது அடுப்பை மட்டும் சிம்மில் வைங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலீலா நான்ஹத்தா ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எளிமையா இருக்கு செய்து பார்க்கிறேன் ..ஆனாலொரு சந்தேகம் குக்கரின் அடியில் தண்ணீர் ஊற்ற வேண்டுமா

பானுகமால்

சுவர்ணா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பானு உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா குக்கரில் தண்ணீர் ஊற்ற கூடாது அடுப்பை மட்டும் சிம்மில் வைத்து செஞ்சி பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

assalamu alaikum.... akka indha recipe Romba easya irukku follow panna