ரோகினி சிக்கன்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒன்று
தயிர் - ஒரு கப்
நெய் - 100 கிராம்
உலர்ந்த மிளகாய் - 5
முந்திரி - 10
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 7 பல்
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு - தேவையான அளவு


 

கோழிக் கறியை கழுவி சுத்தம் செய்து, வேண்டியவாறு துண்டங்கள் போட்டுக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் கறியினைப் போட்டு சிவக்க வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும். கருகிவிடக்கூடாது.
வெங்காயத்தை நறுக்கி பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய், முந்திரி, கசகசா, இஞ்சி, பூண்டு, வதக்கின வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவை வாணலியில் உள்ள நெய்யில் இட்டு குறைந்த தீயில் லேசாக வதக்கவும்.
பிறகு இத்துடன் எடுத்து வைத்துள்ள கறியினைச் சேர்த்துப் பிரட்டி வேகவிடவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும். தேவையெனில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
முக்கால் பாகம் வெந்த நிலையில், தயிரினை நன்கு அடித்து கறியின் மேல் ஊற்றவும்.
கறி நன்கு வெந்து மிருதுவாகும் வரை வேகவிட்டு பிறகு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்