பாஸ்மதி அரிசி

வணக்கம் தோழிகளே,

என் சந்தேகங்களே தீர்த்து வைக்கவும் பாஸ்மதி அரிசி தினசரி உணவுக்கு உபயோகபடுத்தலாம? சொல்லுங்க பா.

ஆமாம் தாராளமாக உபயோகிக்கலாம்.நான் பாசுமதி அரிசியைத்தான் சுமார் 4 வருடமாக தினமும் பாவிக்கிறேன்.முதலில் 1kg பேக்கட் வாங்கி சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள். உடம்புக்கு ஒத்துக் கொண்டால் தாரளமாக தொடருங்கள்.

தாராளமாக உபயோகிக்கலாம் ,இங்கு (uk) எனக்கு தெரிந்து எல்லோருமே பாஸ்மதி அரிசிதான் உபயோகிக்கிறார்கள், நாங்களும் அதைத் தான் உபயோகிக்கிறோம்.

தோழி பஸ்மதி அரிசியில் சுகர் அதிகம் என்று கேள்வி பட்டிருக்கேன் தினமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க கூடும். பொதுவாக வெள்ளை நிற உணவுகள் உடம்பிற்கு அவ்வளவு நல்லதல்ல. இனி உங்கள் விருப்பம்.

மிக்க நன்றி தோழிகளே,
சந்தேகம் தீர்த்ததோடு ஆரோக்கியமும் கூறியதற்க்கு

மேலும் சில பதிவுகள்