ஆம்பூர் சிக்கன் பிரியாணி

தேதி: December 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (15 votes)

 

பாசுமதி அரிசி - 500 கிராம்
சிக்கன் - 650 கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 3
தயிர் - அரை டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது - 4 மேசைக்கரண்டி
புதினா, கொத்தமல்லி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை - பாதி
கலர் பவுடர் - சிறிது
பட்டை - ஒரு இன்ச் அளவு இரண்டு
கிராம்பு, ஏலம் - தலா 2
எண்ணெய் - கால் டம்ளர்
நெய் - கால் டம்ளர்
உப்பு – தேவைக்கு


 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.
சிக்கனை சுத்தம் செய்து அதில் பாதி தயிர் சேர்த்து கிளறி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
சிக்கனை போட்டு கிளறி தயிர், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
பின் கலர் பொடி, வெங்காயம், தக்காளி சேர்த்து கிளறி விட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதந்து வரும் போது இறக்கி விடவும்.
தண்ணீரை கொதிக்க விட்டு களைந்து வைத்துள்ள அரிசியை போட்டு அதனுடன் ஒரு பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய், சிறிது உப்பு சேர்க்கவும்.
வெந்ததும் சாதத்தை வடிகட்டியில் வடிக்கவும்.
இறக்கி வைத்துள்ள கிரேவியில் வெந்த சாதத்தை சேர்த்து கிளறி சமப்படுத்தி குறைந்த தணலில் 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும். பின் சிம்மில் வைத்து, தோசை தவாவில் 20 நிமிடத்திற்கு தம் போடவும்.
சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார். தயிர் சட்னி, எண்ணெய் கத்தரிக்காயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு அருமை வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தேன்க்யு அருட்செல்வி..

ஷபானா
பிரியாணி அருமையா வந்திருக்கு வாழ்த்துக்கள் பார்த்ததும் சாப்பிடத் தோணுது.இன்னும் நிறைய குறிப்புகள் தரணும்

அட்மின் அண்ணா தேன்க்யு சோமச்..என் முதல் குறிப்பை வெளியிட்டதற்க்கு..

தேன்க்யு நிக்கி..குறிப்புகள் விரைவில்..

முதல் குறிப்பிலேயே அட்டகாச படுத்திட்டீங்க. வாழ்த்துக்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அஸ்ஸலாமு அலைக்கும் சபானா ஆம்பூர் பிரியானி அருமையாயிருக்கு வாழ்த்துக்கள்

ஆஹா ஆஹா வெரி டேஸ்டி பிரியாணி:) ஃபோட்டோ நாக்கில் நீர் ஊற வைக்குது. கண்டிப்பா செய்வேன் ரொம்ப எளிமையான செய்முறை வாழ்த்துக்கள் ஷபானா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நல்ல குறிப்பு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வலைக்கும் சலாம் நிஷாக்கா..வாழ்த்துக்கு நன்றி.

ஷமீனா,வனிதாக்கா நன்றி.

நித்தி கட்டாயம் செய்துபாருங்க..

இது உங்களோட முதல் குறிப்பா என்னால நம்பவே முடியலை...இவ்ளோ அழகா ப்றேசண்டேசன் பண்ணி அழகா செய்து காட்டி இருக்கீங்க...இன்ஷா அல்லாஹ் ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன்மா வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

அஸ்ஸலாமு அலைக்கும் சபானா ஆம்பூர் பிரியாணி அசத்தலாக செய்து இருக்கீங்க,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இப்ப உங்க பிரியாணி செய்யப்போறேன். என்னிடம் 2 பொருட்கள் இல்லை. அது இல்லாமல்கூட செய்யலாமா சொல்லுங்க. தயிர் இல்ல அண்ட் பாஸ்மதி அரிசிக்கு பதிலாக பச்சரிசியில் செய்யலாமா? உடனே பதில் ப்ளீஸ் ஷபா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா தயி்ர் இல்லாமல் பண்ணினா நல்லா இருக்காது..basmati la ulla taste paccharisi la kidaikathu..rice vara vara nu irukum..

ஷமிகா கண்டிப்பா செய்யுங்கள்..taste அருமையாக இருக்கும்.தேன்க்யு..

வலைக்கும் சலாம் முசி வாழ்த்துக்கு நன்றி.

ஷபானா ஆம்பூர் பிரியாணி அருமையா செய்துருக்கீங்க அந்த கடைசி பட ப்ளேட்டை இங்க நகர்த்துங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிரியாணி செய்து சாப்பிட்டாச்சு:) பாஸ்மதி அரிசியும் தயிரும் வாங்கிட்டு வந்தே செய்துட்டேன். டேஸ்ட் அருமையா இருந்ததுன்னு சொன்னாங்க என் ஹஸ்:) ரொம்ப நன்றி ஷபா. வாழ்த்துக்கள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷபானா அருமையா ப்ரெசென்ட் பண்ணி இருக்கீங்க..easy யா இருக்குமா..கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன் மா..முதல் குறிப்பிற்கு வாழ்த்துக்கள்..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

வாழ்த்துக்கள் ஷபானா.பார்க்கவே வித்தியாசமா இருக்குது.நிச்சயம் செய்து பார்த்துட்டு சொல்றேன்.ஆனா உன் அளவுக்கு எனக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

சுவர்ணா உங்களுக்கு இல்லாததா..

ஷம்னாஜ்,மீனாள் அக்கா தேன்க்யூ..

ஷபானா, அறுசுவை வழியாக, எங்க ஊர் பிரியாணியை காங்கோவுக்கே அனுப்பிட்டீங்க.. நாவூற வைக்கும் குறிப்பு. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா..காங்கோவுக்கே சென்றதில் மிக்க சந்தோஷம்..

ஷபானா,
சூப்பர்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா