அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்...
இந்த வார பட்டிமன்ற தலைப்பு
" காதலுக்காக பெற்றோரை விடலாமா? அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா?"
தலைப்பு தந்த தோழி வனிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
முதன்முறையாக பட்டி நடுவராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.அதனால் குறை நிறைகளை அன்பு தோழிகள் பொறுத்து பட்டியை நல்ல முறையில் நடத்தி செல்ல உதவ வேண்டும்...
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
சூடான வாதங்களுடன் வாங்க தோழிகளே.....உங்களுக்காக நான் காத்திருக்கேன்....
பட்டி இனிதே ஆரம்பம்
முதல் முறையாக தலைமை ஏற்றுள்ள என்னை நீங்கள் ஏற்று உங்கள் சூடான வாதங்களை வந்து பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பட்டியில் முதல்முறையாக தலைமை வகிப்பதால் ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.
வாங்க தோழிகளே வாங்க, நல்ல வாதங்களுடன் வருபவர்க்கு சுண்டல், வேர்க்கடலை, மசாலா பூரி, மீன் வருவல் மற்றும் சூடான டீயுடன் பீச்சாங்கரை(கடற்கரை) ஓரமா காத்து வாங்கிட்டு காத்துக் கிடக்குறேன்.
நடுவரை தேடி வாங்க, நல்ல கடல் காத்தோட உங்க வாதங்களையும் சேர்த்து தந்திட்டு போங்க. சீக்க்ரம் வாங்க
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
நடுவரே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :) முதன் முறையாக நடுவராகி இருக்கும் நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் :) இதோ வந்துட்டேன்... பெறோருக்காக காதலை விடுவதே சிறந்ததுன்னு அணியில் வாதாட. ;) இது நிச்சயம் கல்யாணத்துக்கு முன் உள்ள காதல் தானே. ஹிஹிஹீ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
புது நடுவரே !!
புத்தம் புது நடுவருக்கும், நல்ல தலைப்பை தந்த வனிக்கும் வாழ்த்துக்கள் :)
(நல்ல) காதலுக்காக பெற்றோரை விடுவதே சரி என்ற அணியில் பேச விரும்புகிறேன். பதிவுகளோடு பிறகு வருகிறேன். பட்டியில் வாதிட்டு சிறப்பிக்கவிருக்கும் இருஅணி தோழர்/தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வனிதா அக்கா
வாழ்த்துக்கு நன்றி வனிதா அக்கா. வாங்க வாங்க பெற்றோர் சார்பா வந்து இருக்கீங்களா? உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் கல்யாணத்துக்கு முன்னாடி உள்ள காதல் தான். ஹாஹாஹா
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
கல்பனா
வாங்க கல்பனா வாங்க, எதிரணிக்கும் ஆள் வந்துடீங்களா?
வாழ்த்துக்கு நன்றி கல்ப்ஸ். சீக்கிரம் வாதங்களோட வாங்க.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
புது நடுவர் அவர்களுக்கு வணக்கம்
நல்லதொரு தலைப்பு . பெற்றோருக்காக காதலைவிடலாம் என்கின்ற தலைப்பில் எனது வாதங்களை தயார்
செய்து கொண்டு வருகிறேன் .
அன்புடன் ஈஸ்வரன்
பட்டிமன்றம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
புதிதாக நடுவர் பதவியில் வீற்றிருக்கும் ஷமீனாவிற்க்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டும், சூப்பர் தலைப்பு தந்த ஆல்-இன்-ஆல் வனிதாவிற்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...
காதலுக்காக பெற்றோரை விடுவதே சரி என்ற தலைப்பை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்...
விரைவில் வாதங்களுடன் வருகிறேன், மசாலா பூரி சூடு ஆறாமல் பார்த்துக்கோங்கோ நடுவரே...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
ஈஸ்வரன்
வாங்க சகோதரரே வாங்க. நீங்களும் பெற்றோருக்குகாக காதலை விடலாம் என்ற அணி சார்பாக வந்து இருக்கீங்களா? சீக்கிரம் வாதங்களோட வங்க.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
பட்டிமன்றம்
புதுமுக நடுவரான எங்கள் பழையமுக அன்புத்தோழிக்கு வாழ்த்துக்கள்:) முத்தான தலைப்பை தந்த வனிதா அக்காவுக்கும் எனது வாழ்த்துக்கள்:) என் வாதம் பெற்றோருக்காக காதலை விடுவதே என்ற அணிக்கு சார்பாக. வாதங்களுடன் வருகிறேன் நடுவரே;)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
பிரேமா
வணக்கம் வணக்கம், வாங்க பிரேமா. வாழ்த்துக்கு நன்றி மா. நீங்களும் எதிரணிக்கு ஆதரவா வந்து இருக்கீங்களா? சூடான வாதங்களுடன் நீங்க வாங்க, உங்களுக்கு சூடு ஆராமல் மசாலா பூரி நான் தாரேன். சீக்கிரம் வாங்க
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா