புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) டிசம்பர் 21 ங்கற பயம் தந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருந்து தப்பிய அழகான 2013 பிறக்க போகுதே ..
புது இழை தொடங்கி பல மாதங்கள் ஆகி போனது..அதான் புத்தாண்டு இழையை தொடங்கலாம் என முடிவு செய்தேன்..
புத்தாண்டுனாவே, உறுதிமொழி எடுப்பது ஜகஜம் .. அதை கடைபிடிக்கறோமோ இல்லையோ.. எடுக்காமல் இருந்தால் எப்படி..?
சோ எல்லாருமே வந்து எது எதை உங்களிடம் மாத்திக்க நினைக்கறிங்கனு சமர்த்தா சொல்லுங்கோ..

மீண்டும் அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் மனதில் இருக்கும் குறைகள் நீங்கி எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கணும்.. :)
எல்லாருக்கும் வாழ்க்கை வளமாக அமையனும்.:)

நானே ஆரம்பிக்கிறேன்

ம்ம்ம்ம். நான் என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்கு.. அதெல்லாம் இந்த ஆண்டு சத்தியமா கடைபிடிக்கணும்னு நினைக்கிறேன்..சாமி தான் காப்பாத்தணும்..:)

* முதலில் நேரமா எழுந்து யோகா செய்யனும்னு நினைத்து இருக்கேன். கஷ்டம் தான் என்ன செய்ய..
* மூனு வேளையும் கண்டிப்பா சாப்பிடனும்.. இதுவும் அதே தான்..
* வாரம் ஒருமுறை தான் நான் வெஜ் சாப்பிடனும்.. பார்ப்போம்.. :) ஹ்ஹிஹி
* சின்ன சின்ன விஷயத்துக்கு எமோஷனல் ஆகாம லைஃபை லைட்டா எடுத்துக்கணும்..:) மனம் உடஞ்சிட கூடாது .. செஞ்சே ஆகணும்..
* அறுசுவைக்கு மாதம் ஒருமுறையாவது எதாவது பங்களிப்பை கொடுக்கணும்..அப்பப்ப பதிவு போடனும்.
*டிவி முன் சாப்பிட கூடாது.அளவா கம்ப்யூட்டர் பயன்படுத்தணும்.
*அடுத்தவங்களை பற்றி அதிகம் கவலைப்பட்டு என் உடலை கெடுத்துக் கூடாது.
* யாரிடமும் அதிக எதிர்பார்ப்பையும், அதிக உரிமையும் வெச்சிக்க கூடாது.எது நடந்தாலும் ஏத்துக்க பழகிக்கணும். கணவரை தவிர .. :) இப்போதைக்கு இது தான்..

இனி உங்க பதிவை பார்த்து, அட இதையும் நாம மாத்திக்கலாமேனு நினைக்க வாய்ப்புண்டு.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அறுசுவை நேயர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ரம்யா, உங்களுக்கும் மற்றும் அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ரம்யா நீங்க எடுத்த சபதம் எனக்கு ரொம்ப பிடித்திற்கு ஏன்ன நானும் இது தான் செய்ய முடிவு எடுத்த உள்ளேன். ஏன்ன இந்த குளிர் நாட்டுக்கு வந்து முதல்ல கஷ்டமான விசயம் சீக்கிரம எழும்புறது. Anyway இந்த try முறை பண்ணி பார்ப்போம்.

அறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

ரம்ஸ் எல்லோருமே கடைபிடிக்க நினைப்பது,கடைபிடிக்க வேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க :) அதுல நான் கடைபிடிக்கவேண்டியது எதுலாம்னு சொல்றேன்

/முதலில் நேரமா எழுந்து யோகா செய்யனும்னு நினைத்து இருக்கேன்./ யோகா இதுவரை செய்தது இல்லை இனியும் செய்யப்போறதும் இல்லை ஆனா நேரமா எழனும் இதுதான் நான் அவசியம் கடைபிடிக்கவேனியது :)

/மூனு வேளையும் கண்டிப்பா சாப்பிடனும்.. / இதுல நான் குறையே
வச்சதில்லை :)

/வாரம் ஒருமுறை தான் நான் வெஜ் சாப்பிடனும்../இது வழக்கமா செய்யும் வேலைதான் வாரத்துக்கு ஒரு முறைதான் செய்வேன் :)

/சின்ன சின்ன விஷயத்துக்கு எமோஷனல் ஆகாம லைஃபை லைட்டா எடுத்துக்கணும்..:) மனம் உடஞ்சிட கூடாது .. செஞ்சே ஆகணும்..
* அறுசுவைக்கு மாதம் ஒருமுறையாவது எதாவது பங்களிப்பை கொடுக்கணும்..அப்பப்ப பதிவு போடனும்../இதுவும் நான் செய்யனும் :)

/*டிவி முன் சாப்பிட கூடாது.அளவா கம்ப்யூட்டர் பயன்படுத்தணும்./
நான் எப்பவும் டீவி முன் சாப்பிட்டதே இல்லை,கம்ப்யூட்டர் அளவா பயன்படுத்தனும் இது செய்யவேண்டிய விசயம் தான் :)

கடைசி இரண்டும் நானும் கட்டாயம் கடைபிடிக்கனும் ;)

அடுத்து இரவில் நேரமே படுக்கனும்னு நினைக்கிறேன் ஆனால் செய்ய முடியல இந்த புத்தாண்டில் இருந்து இதையும் கடைபிடிக்கனும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அறுச்சுவை தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,

மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தான்டுவாழ்த்துக்கள் நம் அனைவருக்கும் இப்புத்தான்டு பொன்னான வருடமாக அமைய இறைவனை வேன்டுகிறேன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அறுசுவை சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லாருக்கும் வர ஆண்டு ரொம்ப சிறப்பா சந்தோஷமா நினைத்ததெல்லாம் நடக்கனும்னு இறைவனை வேண்டிக்கிறேன்

மேலும் சில பதிவுகள்