பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். என்ன செய்யலாம்?

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நம் நாட்டில் இப்போது அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது :(. இடித்தல் சீண்டல்கள் வல்கர் கமென்ட்ஸ் என ஆரம்பித்து இன்று ஆசிட் வீச்சு, பலாத்காரம்னு போய்கிட்டு இருக்கு. இதுக்கு அரசியல் ரீதியான சட்ட ரீதியான தீர்வுகள் எப்போ கிடைக்கும் அப்படீங்கறது அந்த ஆண்டவனுக்கே கூட தெரியாது :(.

இதை தவிர்க்க பெண்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? சமூக மாற்றம் என்பது வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அப்படி நாம் வீட்டில் கொண்டு வரவேண்டிய மாற்றங்கள் என்னென்ன? சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும்? ஊடகங்களில் என்ன மாற்றம் தேவை? அறுசுவையில் அரசியல் கூடாது என்பதால் அது பற்றி மட்டும் எதுவும் பேச வேண்டாம்.

அரசியல் கலக்காமல் இதை பற்றி உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன். அடுத்த தலைமுறையாவது நம்நாட்டில் பாதுகாப்புடன் வலம் வரட்டுமே!

கவி
இது பற்றி நாம் பேசிகிட்டே போதே நான் அறுசுவையில் இழை தொடங்க நினைத்தேன்..
நீங்க தொடங்கிட்டிங்க.

என்னனு சொல்றது கவி.. நினைத்து பாக்கவே பயமா இருக்கும் விஷயம் தான் அதிகம் நடந்துகிட்டு இருக்கு.. பெண்களை மட்டுமா.. குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை ;(
அது எப்படி இப்படி எல்லாம் தோன முடியுது.. வளர்ப்பு தான் முக்கிய காரணம்.. சமூகமும் பங்கு கொடுக்குது..குடும்பத்தில் இருந்து தான் எல்லாமே ஆரம்பம் ஆகிறது. பெத்தவங்க மட்டும் தான் ஒழுக்கத்தை முதலில் விதைக்க முடியும்.. அப்பறம் பள்ளி, சமூகம் ..எதுவா இருந்தாலும் தன் மனதில் தோன்றனும் இல்லையா..

பஸ்ஸுல போகவே பயமா இருக்குங்க.. நான் எப்பவும் பஸ்ஸில் ஏறினா குடுகுடுன்னு முன்னாடி ட்ரைவர் சீட்டுக்கு பின்னாடி நின்னுப்பேன்.அதிகம் பஸ்சில போனதில்லை ,..அதனால் தவறான எந்த நிகழ்வையும் பார்த்ததில்லை. அண்ணன் கூடவே படித்தான்.ஆனாலும் ஏறும் போதோ இறங்கும் போதோ ஒதுங்கி நிக்கனும்னு கூட அறிவு இருக்காது.. ஜடங்களாட்டம் சிலது நிக்கும். இதில் என்ன சந்தோசம் கிடைக்குதோ.. :(

எரிச்சலா இருக்கு. ந்யூஸ் பாத்தாலே இந்த மாதிரி விஷயங்கள் தான். மனசை கஷ்டபடுத்துது..பொண்ணுங்களுக்கு வீட்டில் இருப்பவங்க தைரியத்தையும், எப்படி இருக்கு இந்த உலகம் என்பதையும், ஒருவர் நம்மிடம் பழகும் போது எந்த கண்ணோட்டத்தில் நடந்துக் கொள்கிறார் என்பதை சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்கணும்.கையில் ஏதாவது பெப்பர் ஸ்ப்ரே, சிறிய கத்தி எல்லாம் கண்டிப்பா வெச்சுக்கணும்.. தைரியமா இருக்கணும். தைரியம் என்பது, ஒருவரின் பயம் தான் இன்னொருவரின் தைரியம்.. சோ பயப்படக் கூடாது .

அதே போல.. பெண்களின் உடை பற்றியும் கருத்துகள் பரவி வருது.. உடை விஷயத்தில் பொண்ணுங்க சரியா இருக்கணும் என சொன்னது பலருக்கு தவறாவே தெரியுது.. சரி தான்.. இல்லைன்னு சொல்லலை..ஆனா சமூக பொறுப்பு ஆண் பெண் இருவருக்கும் இருக்கு. பொண்ணுங்களும் அவங்க உடைகளை சரியா பார்த்துக்கணும்.. உடல் வடிவமே தெரிவது போல எல்லாம் உடை அணிவதும் தவறு தான்..அடுத்த தலைமுறை எங்கே போயி நிற்கும் என்பதை யோசிப்பது இல்லை..வெளிநாட்டில் சாதாரணா சுத்தறாங்க.. நம் கலாச்சாரம் அது இல்லை.. அதை பார்த்துட்டு நாமும் இப்படி மாறணும்னு நினைக்க கூடாது ... இப்படி தான் இருக்கு சமூகம். எனவே உடை விஷயத்திலும் கவனம் தேவை. அசிங்கமா போட்டா எப்படி.. ?

அசிங்கமா ஓர் பெண் உடை போட்டு இருக்கு அதான் நான் தவறா நடந்துக்கிட்டேன் சொல்வது ரொம்ப தப்பு தான்.தண்டனைக்கு உரிய விஷயம் . ஆனாலும் அந்த பெண் உடை அசிங்கமா போடுவதும் தவறு தான்.ஒரு உடை ஒருத்தனை வக்கிரமா மாத்துனா, அதுக்காக நாம உடையை மாத்தனுமானு கேக்கலாம்.. தேவையில்லை தான்.. ஆனா இப்ப தான் மாற்றம் வந்துட்டு இருக்கு. இதை எல்லாம் பழகிக்கும் வரை நம்ம கொஞ்சம் கண்ணாடியை போல தான் ஹேண்டில் பண்ணனும்.அடுத்த தலைமுறையில் வேணா சாதாரணமா ஆகலாம்.. பழக்கம் வரும் வரை கடினமா தான் இருக்கும்..இதெல்லாம் பெண் சுதந்திரம் கிடையாது.. ஸ்லீவ்லெஸ் போட்டுட்டா நமக்கு சுதந்திரம்னு அர்த்தம் இல்லை. என்னை பொறுத்த வரை இரண்டு பக்கங்களும் சரியாக நடந்துக்கணும். இன்னும் நிறையா இருக்கு. அடுத்தவங்களும் சொல்லட்டும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தினம் தினம் நியூசை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது.

ரம்யா சொன்னது போல ஒழுக்கத்தை குடும்பத்தில்தான் முதலில் விதைக்கணும். ஒருவரை ஒருவர் மதிக்க கத்துக் கொடுக்கணும். ஆனால் நம்மை அறியாமல் நாம் சொல்லும் வார்த்தைகள் ஆண்குழந்தைகள் மனதில் பெண் என்பவள் தனக்கு கீழானவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துது. ஏற்கெனவே காலங்காலமாக பெண் ஆணுக்கானவள், பெண்ணை நிலை குலைய வைக்க அவளை பாலியல் ரீதியாக (வார்த்தைகளாகவோ அல்லது செயலிலோ) தாக்கினால் போதும் என்ற எண்ணம் ஊறிக்கிடக்கும் ஆண் மனதில் இது இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியது போல் ஆகி விடுகிறது.

நீ இன்னொரு வீட்டுக்கு செல்லப் போகிறவள், புருஷனுக்கு அடங்கி நடக்கணும், அவன் ஆண் பிள்ளை நீதான் கொஞ்சம் விட்டுக் கொடேன் என்பது போல நாம் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்தும் சாதாரண வார்த்தைகள் ஆண்கள் மனதில் பெண் என்பவள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டுகிறது. இப்போது பெரும்பாலான குடும்பங்களில் இந்நிலை மாறி வருகிறது.

அடுத்து பெண்களின் உடை பற்றிய விமர்சனங்கள். பெண் கவர்ச்சியா உடை அணிவதால்தான் ஆண்கள் தவறு செய்கிறார்கள் என்பது காலங்காலமாக ஆண்கள் தங்கள் தவறை மறைக்க பயன்படுத்தும் ஆயுதம். அப்படி உடைதான் பிரச்சினைன்னா பள்ளிச்சீருடையில் சென்ற பெண்ணை சீரழித்தவனை (இந்த வார்த்தைக்கு மாற்றா என்ன வார்த்தை சொல்றது. ஒரு கேடுகெட்ட ஜென்மம் செய்த தவறுக்கு அந்த பெண் எப்படி சீரழிந்தவள் ஆவாள்) எந்த லிஸ்டில் சேர்ப்பது?

ரம்யா சொல்வது போல பெண்களும் தங்கள் உடைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாய்கள் (நாய் இனம் மன்னிக்கவும்) நாம எவ்வளவு கண்ணியமா உடை உடுத்தினாலும் நாக்கை தொங்க போட்டுக்கிட்டு வக்கிர பார்வைதான் பார்க்கும். இதுல கவர்ச்சியா உடை அணிந்தால் கேட்கணுமா? உடை குறைப்பில் இல்லை பெண் சுதந்திரம் என்பதை பெண்களும் உணர வேண்டும்.

அடுத்து ஊடகங்கள். இவனுங்க பண்ற அழும்புக்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சு. ஒரு பொறுக்கி ஒரு பொண்ணை காதலிப்பானாம். அவ மாட்டேன்னு சொன்னாலும் விடாம மிரட்டியாவது சம்மதிக்க வைப்பானாம். இதை பார்த்துட்டு வர சில அரைவேக்காட்டுப் பசங்க தான் விரும்பற பொண்ணு முடியாதுன்னு சொன்னா ஆசிட்டை வீசுவேன்னு கிளம்பிடறானுங்க. காலேஜில் காதலிக்கற காலம் போய் இப்போ ஸ்கூல் லெவல் காதல்னு படம் எடுக்கறானுங்க. அவனுங்க எடுக்கட்டும் நாமளும் அதை பார்த்து வெற்றி பெறச் செய்யறோமே நம்மை என்ன செய்யலாம் ?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி..

ரொம்ப சரி.. பெண் பிள்ளைகள் என்றாலே பாகுபாடு காட்டி தான் வளர்க்கபடுகிறோம்..
ஒரு பையனிடம் அம்மா, அக்கா தங்கை என்பவள் எப்படிப்பட்டவள் என்பதை சொல்லி வளர்த்தனும் .அப்ப தானா மத்த பொண்ணுகளை பார்த்தாவே மரியாதை வரும்..
அதிலும் இந்த சினிமாவை சொல்லவே வேணாம்.. பள்ளிக் காதல்.. எப்படி இருக்குனு பாருங்க.. போதா குறைக்கு செல் போன் வேற.. நான் பி ஜி படிக்கிற காலத்துலேயே என்னிடம் செல் இல்லை. வேலைக்கு வந்து, அதுவும் பாதுக்காப்புக்காக வாங்கியது தான்.. இப்ப எல்லாம் அது இல்லை.. கலாச்சாரம் எங்கேயோ போகுது.. :( பார்ட்டி, அரட்டைக்குனு ஒரு இடம்.. சேர்ந்து சுத்துவது. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லைன்னு வேற பெத்தவங்களிடம் சண்டை போடுவது.அப்படியே மேற்கத்திய கலாச்சாரம்.. இத்தனைக்கும் காரணம் சினிமா..

குழந்தைகளை டான்ஸ் பண்ணவிட்டு, அதுங்களிடம் கெமிஸ்டரி பத்தி பேச வேண்டியது.. குழந்தைகள் குழந்தைகள் போலவே இருப்பதில்லை. எந்த குழந்தைகள் நிகழ்ச்சி முன்பெல்லாம் பாத்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.. இப்போ பக்குன்னு தான் இருக்கு..எப்படி இருக்காங்க பாருங்கன்னு நினைக்க வைக்குது.. ஒருவேளை நம்ம தான் ரொம்ப நேரோ மைண்டட்டா யோசிக்கறோமோ.. இன்னும் பழைய கால ஆட்களாக, நம்ம அம்மா கொடுத்தது இன்னும் மனச விட்டு போகலையோனு தோணுது.. ஆனா.பல தடவை , நாம் நினைப்பது சரி தான்.. அம்மா கொடுத்த அந்த ஒழுக்கமும், கல்ச்சரும் தேவை..அப்படின்னு புரியுது..

ரியாலிட்டி ஷோவில், சின்ன பொண்ணுங்களுக்கு போட்டு விடற ட்ரஸ், அதை எக்ஸ்போஸ் பண்ணி காட்டும் கேமரா, அந்த புள்ளையை பெத்த அம்மாக்கள் அதை பார்ப்பதே இல்லையானு தோணுது.. இந்த லட்சணத்துல வர படங்கள். கவி சொன்னது போல பொறுக்கித்தனம் செய்யும் ஹீரோ..அதை பார்த்து கேட்டு போன பெண்கள், இப்ப எடுத்த சர்வேல ரகடான பையன் தான் வேணும். அதான் கெத்துனு சொல்லுது.. இதெல்லாம் தவறு எங்கேயோ நடக்க நாம வெச்சிக்கிற சூன்யம் தான்..

சின்ன சின்ன விஷயத்துல கூட ஒழுக்கம் இருக்கு. யாரையும் நமது எல்லைக்குள் வரவிட கூடாது என பெத்தவங்க தான் சொல்லித் தரனும். நெருப்பு மாதிரி இருந்தா தான் பொழைக்க முடியும் இப்போ.. :( ஆபிஸ்ல 6 மணிக்கு மேல இருந்து வேலை செய்வது, தங்குவது, வீட்டில் இருக்கும் கஷ்டங்களை பேசுவது. இது எல்லாம் வக்கிர புத்தி கொண்டவனை பலமாக்கும் செயல் தான்.. என்னத்த சொல்றது .. நல்லா பேசினால், இவள் நமக்கு நல்லா கம்பெனி கொடுப்பாள் என சொல்லுவானுங்க, அதுக்கு சரியா பேசாம, அவளுக்கு ரொம்ப ஹெட் வைட் னு பேரு வாங்கலாம்.அளவாக இருப்பதே உத்தமம்.அதை பெத்தவங்க தான் சொல்லிக் கொடுக்கணும்..எல்லாரும் அப்படி இல்லை.. இதில் பெண்களும் விதி விலக்கு இல்லை..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிசிவா... அன்னைக்கே இதை பற்றி பேச அண்ணாவிடம் கேட்டு இழை துவங்க சொல்லி அருள் சொன்னாங்க. அண்ணா ஊரில் இல்லை, பேச்சை எடுத்தால் திசை மாறிட கூடாதேன்னு யோசனையில் விட்டோம். நீங்க ஆரம்பிச்சுட்டீங்க. பேச பேச மனசு வலிக்க தான் செய்யுது.

மாற்றம்.... முதல்ல வீட்டில் வரணும். ஆணும், பெண்ணும் சமமென சொல்லி சொல்லி வளர்க்கனும். ஆணுக்கு பெண் அடங்கி போகணும் என்பதை நாம் முதல்ல மாற்றனும். விட்டு கொடுத்து போன்னு பெண்ணுக்கு மட்டும் சொல்லாம ஆணுக்கும் சொல்லணும். ஆண் பிள்ளை பெற்றால் கொம்பு இருக்க மாதிரி அடங்காம தான் தோன்றிதனமா சுத்தும் பிள்ளைகளை கண்டிக்கனும். சில வீடுகளில் பார்த்திருக்கேன்... ஆண் பிள்ளை இரவு சினிமா போனா கூட... “அவனுக்கென்ன ஆம்பல, எப்படியும் பிழைச்சுக்குவான்” என்பது.... பெண் பிள்ளை படிக்கலன்னா “அவ படிச்சா என்ன படிக்கலன்னா என்ன... எப்படியும் கட்டி கொடுக்க போறவ தானே... சம்பாதிச்சு நமக்கா குடுக்க போறா”னு மட்டம் தட்டுறது.... இதெல்லாம் ஒழியணும்.

சினிமாவில் நடப்பதை தான் சொல்றோம்னு தெரியாதவங்களுக்கு கூட எங்க எப்படி தனியா பெண்ணை மடக்கலாம், என்ன செய்தா மாட்டாம குற்றம் செய்யலாம்னு கத்து கொடுத்துடுறாங்க. டெக்னிக்கா பண்ணா மாட்டிக்காம குற்றம் பண்ணலாம்னு க்ரிமினல்ஸ் கத்துக்கறாங்க. நம்ம பொண்ணுங்க மக்குங்க... அதுகளூக்கு தான் மண்டையில் ஒன்னும் ஏறாம இன்னும் இரவில் ஊர் சுத்துறதுலாம் இப்போ சகஜம்னு சுத்திகிட்டிருக்குங்க.

தனியா சிக்கினா பிரெச்சனை தான்.... அது அறை குறை ஆடையானாலும் சரி, முழுசா மூடி போனாலும் சரி.... அது கிழவியா இருந்தாலும் சரி, கை குழந்தையா இருந்தாலும் சரி. ஆடை.... அதெல்லாம் போலியான காரணம். அப்படி இருக்கவங்களுக்கு தான் இப்படிலாம் நடக்கும்னா முதல்ல சினிமா நடிகைகளை தானே காலி பண்ணிருப்பாங்க... அவங்க எல்லாம் பாதுகாப்பா இருக்காங்க. பெண்ணோட நிழலை கூட விட்டு வைக்காத மிருகத்துக்கு ஆடை எல்லாம் மேட்டரே இல்லைங்க. இதெல்லாம் இயற்கைகாவே அய்யோக்கிய குணம்.... கேவலமான ஜென்மங்கள்.

ஆம்பலன்னா எப்படி வேணும்னா இருக்கலாம், எத்தனை பேரை வேணும்னா கட்டலாம், அவனுக்கு கற்பு இல்லை, வெட்கம் இல்லை... எங்க வேணும்னா எதுக்கு வேணும்னா ஒதுங்கலாம்... இந்த பேசிக் பிரெச்சனைகளை வளர விட்டதோட விளைவு தான் இன்னைக்கு திமிரு பிடிச்சு போய் இப்படி சிலது சுத்துது. இதையெல்லாம் நம்ம பிள்ளைகளிடமாவது மாற்றனும். அட்லீஸ்ட் வளரும் ஜெனெரேஷன் இது போல் இல்லாமல் நாகரீகமான வாழ்க்கைக்கு மாறணும். உயிரை உயிராக மதிக்கும் மனபக்குவத்தை குழந்தையில் இருந்தே புகட்டனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா குழந்தைகள் ரியாலிட்டி ஷோ பற்றி சரியா சொன்னீங்க. அம்மாக்களுக்கு தன் பிள்ளையின் முகம் டிவியில் வந்தால் போதும். அதுக்கு எப்படி ட்ரெஸ் பண்ணினாலும் பரவாயில்லைன்னு நினைக்கறாங்க :(. ஓரு நிகழ்ச்சியின் தேர்வு சுற்றில் நடுவர்களே அந்த பெற்றோரை கூப்பிட்டு கண்டிக்கும் அளவுக்கு இருந்துச்சு அந்த குழந்தைக்காக அவள் பெற்றோர் தேர்ந்தெடுத்திருந்த பாட்டும் அதற்கான நடன அசைவுகளும் உடையும். இப்படி இருந்தா என்ன பண்றது?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானும் அண்ணாகிட்ட கேட்டுட்டுதான் ஆரம்பிக்கணும்னு இருந்தேன். சரி அரசியலுக்கு தடா போட்டுட்டு ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சுட்டேன் :)

//நம்ம பொண்ணுங்க மக்குங்க... அதுகளூக்கு தான் மண்டையில் ஒன்னும் ஏறாம இன்னும் இரவில் ஊர் சுத்துறதுலாம் இப்போ சகஜம்னு சுத்திகிட்டிருக்குங்க. //

இவங்க அப்பா அம்மால்லாம் என்ன பண்றாங்க? விழிப்புணர்வு தேவை. ஆனால் எங்கிருந்து ஆரம்பிக்கப் போறோம்?

//அட்லீஸ்ட் வளரும் ஜெனெரேஷன் இது போல் இல்லாமல் நாகரீகமான வாழ்க்கைக்கு மாறணும். உயிரை உயிராக மதிக்கும் மனபக்குவத்தை குழந்தையில் இருந்தே புகட்டனும்.//

எல்லா குடும்பங்களிலும் இதை செய்ய ஆரம்பித்து விட்டால் அடுத்த தலைமுறையாவது ஆரோக்கியமாக வளரும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெண்மையைப்போற்றுவோம் இந்த வார்த்தைக்கான அர்த்தம் வழக்கொழிந்து கொண்டிருக்கிறது. அட போற்றவேண்டாம் மானதோட வாழ வழி விட்டாப்போதுமே.

பெண் என்பவள் போகப்பொருள்தானா உயிரும், உணர்வும் உள்ள மானிடப்பிறவிதானே,
அந்தக்காலத்தில் வயதான பெண்மணிகள் ரவிக்கை அணியாமலே மானத்துடன் வாழ்ந்தனரே!!
அயல்நாட்டு நாகரீகத்தின் மோசமான நடவடிக்கைகளை கற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, அங்கு கணவன் மனைவியாக மனம் ஒத்து கடைசிகாலம் வரை ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கலாச்சாரத்தை மதித்து வாழ்கின்றனர் என்பதையும், நேரந்தவறாமை, எதற்கும் வரிசையாக செல்லுதல் ஆகியவற்றில் மிகவும் கண்டிப்புடனும் இருக்கின்றனர் என்பதையும்.
குழந்தை பிறந்து பள்ளி செல்லும் பருவம் வரும் வரை பக்குவமாக வளர்ப்பதில் அக்கறை காட்டும் பெற்றோர், பள்ளி சென்றவுடன் அந்த அக்கறையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடைசியில் கண்டுக்காமல் விடுவதினால் ஏற்படும் பேராபத்துதான் இது போன்ற கேடுகெட்ட ஜென்மங்கள் உருவாவதற்கு மிகப்பெரிய காரணம்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு எதற்கு காரையும், பைக்கையும் கொடுத்து பள்ளிக்கு அனுப்பவேண்டும். பள்ளி நிர்வாகம் கடுமையாக இதற்கு தடைவித்திருந்தும் ,அத்தடையை பொருட்படுத்தாது பள்ளிக்கு அருகில் இருக்கும் வெளி இடத்தில் பார்க் செய்து விட்டு போகச்சொல்லிக்கொடுக்கும் பெற்றோருக்கு தெரியுமா, இத்தடையை மீறும் தங்களது செல்லக்குழந்தை பிற்காலத்தில் ஒரு கேடு கெட்டவனாக வளருவதற்கு துணை போகின்றோம் என்று:(((
வீட்டில் கம்யூட்டரை வரவேற்பரையில் வைக்கலாமே, தனியாக அறை ஒதுக்கி உள்ளே என்ன நடக்கின்றது என்று தெரியாமல் தன் வேலையை பெரிதாக எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு தெரியுமா, தங்கள் அருமை மகன் ஒருநாள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைத்த கொடுமைக்கு ஆளாவான் என்று:(((
சிறுவயதிலேயே சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்று கொம்பு சீவி அழகுபார்க்கும் பெற்றோருக்கு, தங்களின் சாண்பிள்ளை முரட்டு பிள்ளையாக வளர்ந்து சமுதாயத்தின் பெருமையைக் குலைத்து, அதன் காரணமாக கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி கழுதை மேல செருப்பு மாலையுடன் ஊர்வலம் வாருவான் என்று:((((

தோழிகளே பெண்களால் முடியாதது எதுவுமில்லை, நம் வளர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதில் பெரும் அக்கறை கொண்டு விளங்கவேண்டிய நேரமிது. வீட்டில் கணவர் புகைபிடிக்கிறாரா?? மது அருந்துகிறாரா?? போடுங்கள் அனைத்திற்கும் தடை உத்தரவு.

நம் குழந்தைகளுக்கு நம்நாட்டின் பாரம்பர்யத்தையும், பெருமையையும் சொல்லிவளர்ப்போம்.
வாழ்க்கையின் மதிப்பீடு அவர்களுக்கு தெரியட்டும். நேர்மறை எண்ணங்களையே ஊட்டி வளர்ப்போம்.
எதிர்மறையான நிகழ்வுகளை அறியாமல் செய்தால் அன்புடன் கண்டிப்போம்.

எங்கள் ஊருக்கு அருகாமையில் புதிதாக ஒரு கல்லூரி திறக்கப்பட்டது, அங்கு படிக்க வந்த மாணவர்களி பலர்(??) ரோடில் செல்லும் கிராமத்து மக்களை கேலி செய்வதும், கிண்டல் செய்வதும் வழி விடாமல் நடுரோடில் நடப்பதுமாய் பெரும் அட்டூழியம் செய்து வந்தனர்.
பொறுத்து பொறுத்துப்பார்த்த மக்கள், பிரிஸிபாலிடம் புகார் கூறினர் இருந்தும் கொட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்த்து, கல்லூரி நிர்வாகமே கூறி விட்டது அம்மக்களிடம் கல்லூரி வளாகத்தினுள் எதுவும் செய்துவிடாதீர்கள் , வெளியில் என்னமோ பண்ணுங்கள் என்று,
ஒருநாள் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து மாடு அடிக்க பயன்படும் சாட்டையை வாங்கி அருகில் உள்ள காட்டிற்குள் பதுங்கி கொண்டனர், ஓரிருவர் மட்டும் சாலையில் நடந்தனர், அவர்களை கிண்டல் பண்ண ஆரம்பித்த கயவர்களை அனைவரும் சேர்ந்து பின்னி பெடலெடுத்து விட்டனர். அதவும் உயிருக்கு ஒண்ணும் நேரக்கூடாது என்னும் அக்கரையில் நிதானமாகவே அடிபோட்டு அறிவுரை கூறி அனுப்பினர்.
அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் நல்லவிஷயங்களை. இல்லையெனில் இதுபோல ஊரார்கையில் அடிவாங்க வேண்டிய நிலமை ஏற்படும்.
வாருங்கள் தோழிகளே!! புதிய சமுதாயம் படைப்போம்!!பார் போற்ற வாழ்வோம்.!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனக்கு இப்பிரச்சினைக்கு காரணமாக இன்னொன்றும் தோன்றுகிறது. ஆண் பெண்ணை இயல்பாக பழக விடாமல் தடுக்கும் நம் சமூக அமைப்பு. பல கல்லூரிகளிலும் ஆண் பெண் பேசினால் தப்பு, ஆணும் பெண்ணும் ஒன்றாக நடந்தால் தப்பு அதையெல்லாம் மீறி கல்லூரி பேருந்தில் ஆண்பகுதிக்கும் பெண்பகுதிக்கும் இடையே கயிறு கட்டி வச்சிருக்கானுங்க. அடப்படுபாவிங்களா நீங்க இப்படி தடை போட்டாலே அவங்க அதை மீறத்தானே பார்ப்பாங்க. ஏன்னா அந்த வயசு அப்படி.. அதை விடுத்து ஆண் பெண் நட்பை இயல்பா பாருங்க. ஆண் பெண் நட்பின் எல்லை எது என்பதை நிர்ணயிக்க அவங்களுக்கு கற்றுக் கொடுங்க வழிகாட்டுங்க. எல்லை மீற மாட்டாங்க தவறும் செய்ய மாட்டாங்க.

பிள்ளைகளோட மனம் விட்டு பேசுங்க. ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக் கொடுங்க.

இன்னிக்கு ஒரு மலையாள நிகழ்ச்சியில் ஒரு தாய் சொன்னது. "என் மகன் பத்தாவது படிக்கும் போது அவனிடம் சொன்னேன் நீ பிற பெண்களை கேலி செய்யவோ அல்லது தொல்லை கொடுக்கவோ செய்தால் நாளை இன்னொருவன் என்னையோ அல்லது உன் சகோதரியையோ அதே போல் கேலியோ தொல்லையோ செய்யும் போது உனக்கு அதை தட்டிக் கேட்கும் உரிமை இல்லாது போய் விடும்" இப்படி சொன்னாங்களாம். இன்று அந்த மகனுக்கு 25வயதாகிறதாம். எந்த பிரச்சினையும் அவனால் வந்ததில்லைன்னு சொன்னாங்க. இந்த அப்ரோச் சரியா இருக்கும்னு தோணுது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெண்களின் ஆடைதான் ப்ரச்சினை என்றால் மேற்கு வங்கத்தில் 42 வ்யது பெண்மனியை சீரழித்துள்ளனர். அதற்கு என்ன சொல்வது? ஊடகங்களில் ஆண்கள் பயன்படுதும் பொருளுக்கு கூட பெண் மாடலாக போடுகிறார்கள்.இதனால் ஆண்களுக்கு பெண் என்றால் போகப் பொருளாகத் தெரிகிறது இதுவும் ஒரு காரணம்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

பெண்களின் ஆடைகள் மட்டும் தான் பிரச்சனை என்பது இல்லை தான் .. ஆனால் ஆடைகளும் ஒரு வகையான பிரச்சனை என்பதை மறுக்க கூடாது. பெண்ணின் நிழலை கூட விடாதவனுக்கு ஆடை ஒரு விஷயம் இல்லை.ஆனால் சமூக பொறுப்பு இரு பாலருக்கும் இருக்கு.. சபல புத்தி இருப்பவனுக்கு, இது மேலும் தூண்டி விடப்படுகிறது.மிகவும் அசிங்கமகாக உடை உடுத்தும் பெண்ணையோ, சினிமா நடிகையோ பார்த்துவிட்டு, நல்ல உடை உடுத்தும் அடக்க ஒடுக்க பெண்களிடம் தன் சபல புத்தியை தீர்த்து கொள்கிறாங்கள். நடிகைக்கோ, அசிங்கமா உடை உடுத்துவருக்கோ ஒன்னும் ஆவதில்லை.. ஆனா நல்லா ட்ரஸ் பண்ணும் பொண்ணுக்கு இப்படி ஆகிறதே.. அதுக்கு என்ன செய்யறது என நாம நினைத்துக் கொண்டிருக்கோம்..ஆனால் ஆழமாக பார்த்தால், எங்கேயோ கண்ணுக்கு உறுத்தலான ஆடை அணிந்த நடிகை மற்றும் பெண்களை பார்த்து புத்தி மேலும் கேட்டு போக, சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், பாவம் நல்லா ட்ரஸ் பண்ணி இருக்கும் பெண்களிடம் இச்சையை தீர்க்க நினைக்கிறார்கள். அங்கே அவனுக்கு கிடைத்துள்ள சூழல் தான் காரணம்.. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டால் , அது நடிகைனாலும் சரி, நல்லா ட்ரஸ் செய்த வயது பெரியறானாலும் சரி, எங்கேயோ அவன் மனதை மேலும் அழுக்கு செய்த நிழல் உடை, அங்கே நிஜமாக உருவாகிறது.பின்ன என்ன பிரச்சனை தான்.ஆனால், ஆடை காரணம் காட்டுவது வெறும் சாக்கு தான்..இருந்தாலும், ஆடை காரணமும் இல்லை என்கிறீர்களா.. ஏதோ பெண் செய்யும் சிறிய சமூக ஆடை சீர்கேடால் , நல்ல உடை உடுத்தும் பெண்களுக்கும் பிரச்சனை.. அதிகமாக பாலியல் பிரச்சனை நடக்கும் இடமாக டெல்லி தேர்வாகி உள்ளது. டெல்லியில் தான் ஆடை உடுத்தும் விதம் ரொம்பவே ஃப்ரி.. எப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது சபலம் தலை தூக்குகிறது என எடுக்கப்பட்ட சர்வேயில் கிடைத்த முடிவு.. கண்களை உறுத்தும் உடை அணியும் பெண்கள் தான் என தெரிய வந்துள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாவது நன்றாக உடை அணியும் பெண்களும் தான். அசிங்கமாக ஆடை அணியும் பெண்களை பார்த்தால், நமக்கே உறுத்துது இல்லையா?

அதே சமயம் நானும், ஆடையை காரணம் காட்டும் சில ஆண் வக்கிரகாரர்களை கடுமையாகவே கண்டிக்கிறேன்.ஆனால் பெண்களிடம் பொறுப்பு இருக்கு என மறக்க கூடாது.நான் எப்படி வேணா இருப்பேன். நீ பாத்தினா கண்ணை நோண்டிடுவேன் என சொல்லக் கூடாது. இது அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் முறை இல்லை. வெளிநாடுகளில் அது ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த நிலைக்கு இந்தியா வர நாட்கள் ஆகும். அது வரை நாம் பெலன்ஸ்ஸா இருக்கணும்.
நம்ம ஜெனறேஷக்கு இந்த மாற்றம் கொஞ்சம் கடுமையா இருக்கும். ஏனா மாற்றம் வர வேண்டிய ஜெனரேஷன்ல நாம வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த தலைமுறையில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வந்துவிட்டா, அடுத்த தலைமுறை வேணா வெளிநாடுகள் போல, உடையால் எந்த பிரச்சனையும் இல்லை என மன நிலைக்கு வரலாம்.அது வரை நாம் கொஞ்சம் பார்த்து தான் இருக்கணும். உடனே புரட்சிகரமா ஆடை காரணம் இல்லை என பேச முடியாது என நினைக்கிறேன்.எந்த புரட்சிக்கும் பல ஆண்டுகள் எடுக்கும். அது முடியும் வரை பார்த்து ஹேண்டில் பண்ணும் பொறுப்பு இருக்கு.

குடும்பமும்,சமூகமும் பாலியல் வன்முறைக்கு எதிரா செயல்பட வேண்டியது.. தண்டனைகள் கடுமையாக்கப்படனும்.நாவரசு இறந்ததும் தான், ரேக்கிங் பத்தியே அதிக பேச்சு. சரிகா இறந்த பின் தான் ஈவ் டீசிங் பத்தி தன்டைனைகள் .. இப்ப அமானத். இப்பதான் எல்லா கேசும் விரைவாக்கபடுது.. இப்ப தான் இது ஒரு தலையான பிரச்சனையாவே பார்க்கபடுது.. :(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்