தேதி: January 2, 2013
துணி
லைனிங் துணி
ஸ்பாஞ்ச் ஷீட்
கத்தரிக்கோல்
ஊசி
நூல்
மணிகள்
மொபைலின் அளவை விட ஒரு இன்ச் அதிகமான அளவில் துணியை இரண்டு துண்டுகள் வெட்டி எடுத்து கொள்ளவும். அதே அளவில் இரண்டு துண்டுகள் ஸ்பாஞ்ச் ஷீட்டையும், இரண்டு துண்டுகள் லைனிங் துணியையும் வெட்டி வைக்கவும். ப்ளீட்ஸ் வைக்க ஒன்றரை இன்ச் அளவில் படத்தில் காட்டியபடி சில துண்டுகள் வெட்டிக் கொள்ளவும்.

ஒன்றரை இன்ச் அளவில் வெட்டிய துண்டை படத்தில் காட்டியபடி இரண்டாக மடித்து சாய்வாக வைத்து தைக்கவும். இதேபோல் அனைத்து துண்டுகளையும் இரண்டு பக்கங்களிலும் மாற்றி மாற்றி வைத்து சாய்வாக வைத்து தைத்து முடிக்கவும்.

பிறகு அதன் மேல் மணிகள் வைத்து தைத்து உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கவும். மணி வைத்து அலங்கரித்த துணியின் அடியில் ஸ்பாஞ்ச் ஷீட்டை வைத்து, அதற்கும் அடியில் லைனிங் துணியை வைத்து தைக்கவும். பவுச்சின் முன் பக்கம் தயார்.

மற்றொரு துணியை எடுத்து அதன் அடியிலும் ஸ்பாஞ்ச் ஷீட், லைனிங் துணியை வைத்து தைத்து பவுச்சின் அடிபக்கத்தை தயார் செய்து கொள்ளவும்.

உள்பக்கத்தில் லைனிங் துணி இருப்பதுபோல் வைத்து இரண்டு துண்டுகளையும் இணைத்து தைக்கவும். பிறகு ஜிப் வைத்து தைக்கவும். அழகிய மொபைல் பவுச் ரெடி.

Comments
நிகிலா
நிகிலா
அழகோ அழகு.. வாழ்த்துக்கள்
கலர் காம்போ செம.. :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
நிகிலா
வாவ்... அடுத்தடுத்து வெவேறு டிசைன்ஸ் போட்டு கலக்குறீங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
nikila akka
நிகிலா அக்கா ப்ளீட்ஸ் மொபைல் பவுச் அட்டகாசமா இருக்கு கடைசி பௌச் மாதிரியே அச்சு அசலா எனகு ஒரு பவுச் ஆர்டர் சொல்லி புட்டேன்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
nikila
நிகிலா பவுட்ச் சூப்பர்,அசத்தலா செய்து இருக்கீங்க.நானும் இது போல் முன்பு நிறைய செய்வேன்,கைவினைக்கு சீக்கீரம் அனுப்ப முயர்ச்சி செய்கிரேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
மொபைல் பௌச்
சுப்பர்ப் நிகிலா. முகப்பில் பார்க்க... சாக்லேட் கேக் போல இருக்கு. ;)
எனக்கும் ஒன்று குரியர் ப்ளீஸ்.
- இமா க்றிஸ்
நிகிலா
மொபைல் பவுச் ரொம்ப அழகா வந்துருக்கு.வாழ்த்துக்கள்.
Kalai
அட்மின் குழுவினருக்கு நன்றி
ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு இப்போ தான் வந்தேன்.அறுசுவையை பார்த்தால் ஹை என்னோட குறிப்பு.
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி
ரூபி,இமா,வனி
இது தான் நான் முதலில் அனுப்பிய குறிப்பு.என்னை அனுப்ப சொல்லி ஊக்கபடுத்திய உங்கள் மூவருக்கும் முதல்ல நன்றி
ரம்யா
ரம்யா
இது பட்டு பிளவுஸ் துணி. அதனால் கலர் சூப்பரா வந்திருக்கு.நன்றி ரம்யா
வனி
வனி
வாழ்த்துக்கு நன்றி வனி.இன்னும் டிசைன்ஸ் வெயிட்டிங்ல இருக்கு வனி
கனிமொழி
கனிமொழி
உனக்கு இல்லாமலா?உடனே அனுப்பி வைக்கிறேன் வாங்கிக்கோ
வாழ்த்துக்கு நன்றி கனி
முஷ்ஹினா
முஷ்ஹினா
வாழ்த்துக்கு நன்றி முசி.
நீங்களும் செய்வீங்களா?
கட்டாயம் அனுப்பி வைங்க.விரைவில் எதிர்பார்க்கிறேன்
இமா
வாழ்த்துக்கு நன்றி இமா
ஒவ்வொரு நாளும் என்னோட குறீப்பு வருதான்னு ஆர்வமா பார்த்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு தான் ஸ்பீட் குரியர்ல பவுச் வந்திட்டே இருக்கு பா.
(உள்ளே சாக்லேட் வச்சுருக்கேன் அது ஏஞ்சலுக்கு குடுத்திருங்கோ)
கலா
கலா
உங்க அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி கலா
நிக்கி
ஹாய் நிக்கி,
"ப்ளீட்ஸ் மொபைல் பவுச்"சூப்பராயிருக்குடா.
பார்க்கவே அழகாயிருக்கு.விளக்கமும்,படமும் அசத்தல்.
ரொம்ப சந்தோஷமாயிருக்கு உங்க குறிப்பு பார்க்க,தொடர்ந்து அசத்துங்க நிக்கி.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் நிக்கி.
அன்புடன்
நித்திலா
நிகி
ப்ளீட்ஸ் மொபைல் பவுச் அழகோ!!! அழகு!!! .........வாழ்த்துகள்!!! நிகி சாரிமா எவ்வளவு நாள் வெயிட் செய்து இப்பொ பார்க்க மிஸ் பண்ணிட்டேன் (நான் ரொம்ப பிஸி).....................
நித்திமா
நித்திமா
சூப்பரா இருக்கா.
பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் ரொம்பவும் நன்றி நித்தி.
ரூபி
ரூபி
ஆமா ரூபி, நாம ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு அப்புறம் நானும் ஊருக்கு போனப்புறம் வந்திருக்கு பா.
"ரொம்பவும் பிஸியா" அப்படி இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்.இன்டெரெஸ்டிங்கா இருக்கும். ரூபி