மீன் வறுவல்

தேதி: September 22, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - ஒரு கிலோ
வெங்காயம் - ஒன்று
பூண்டு - நான்கு பற்கள்
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
கடலை மாவு - அரைக்கோப்பை
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

மீனை நன்கு கழுவிக்கொண்டு வேண்டிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்துடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், எலுமிச்சைரசம், உப்பு ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளுடன் அரைத்த விழுதை சேர்த்து கைகளால் நன்கு பிசறி விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு கடலைமாவுடன் மிளகுத்தூள், ஒரு சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
சட்டியில் போதுமான அளவு எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். பிறகு மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கடலைமாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று மீன் ரெடியாக வீட்டில் இருந்தது,செய்து பார்த்தேன் , கடலை மாவில் டிப் பண்ணி இப்ப தான் முதன் முதலில் செய்கிறேன்.உங்க மீன் வறுவல் சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

திருமதி. ஆசியா உமர் அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த மீன் வறுவலின் படம்

<img src="files/pictures/fishvaruval.jpg" alt="picture" />

இன்று தான் அனுப்பினேன்,உடன் இணைத்தமைக்கு மகிழ்ச்சி .
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹலோ ஆசியா டியர் எப்படி இருக்கீங்க? உங்க பின்னூட்டம் புகைப்படத்தில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது,உணவினை அலங்கரித்திருக்கும் விதமும் ரொம்ப அழகாய் இருக்கின்றது மிக்க நன்றி. புகைப்படம் வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும் என் நன்றி.

உங்க பாராட்டுக்கு நன்றி.உங்க குறிப்புக்களில் multi national cuisine,நிறைய இருக்கு.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.