பருத்துறை வடை

தேதி: January 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மைதா மாவு - 750 கிராம்
ஊற வைத்த உளுந்து - ஒரு கப்
பொடித்த வற்றல் மிளகாய் சலித்தது - 50 - 75 கிராம் (படத்தில் உள்ளது போல் சிறிது சிறிதாக இருக்கும்)
சோம்பு - 50 கிராம்
மிளகுப் பொடி - 20 கிராம்
உப்பு
எண்ணெய் - பொரிக்க


 

மைதா மாவில் ஊற வைத்த உளுந்து, உப்பு, மிளகாய், சோம்பு, மிளகுப் பொடி சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்று சேர நன்கு கலந்து வைக்கவும்.
சிறிது நீர் தெளித்து பிசையவும். கடைசியில் எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும். ( கட்டியாக இருக்க வேண்டும். மாவு கையில் ஒட்ட கூடாது).
பிசைந்த மாவை எலுமிச்சை அளவிற்கு உருட்டி வைக்கவும்.
உருண்டைகளை தனித்தனியாக பூரிக்கட்டையால் உருட்டவும். (ஒட்டாமலிருக்க எண்ணெய் தடவலாம்).
அவற்றை எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும். சுவையான மொறு மொறுப்பான பருத்துறை வடை ரெடி.

அவரவர் காரத்திற்கேற்ப வற்றல் மிளகாய் சேர்க்கலாம். இதனை மாலை வேளைகளில் டீ அல்லது காபியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதமானாலும் கெடாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

லலிதாம்பிகா
முதல் குறிப்பா ? வாழ்த்துக்கள். படங்கள் தெளிவா இருக்கு.
வித்தியாசமான சுலபமான குறிப்பு..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

லலிதாம்பிகா அக்கா பருத்துறை வடை ரொம்பவே சுலபமானா ஈஸியானா குறிப்பு டேஸ்ட்டி ஸ்நாக் சூப்ப்பர இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பருத்துறைவடை ஈஸியான ஈவினிங் ஸ்னாக்ஸ் ஐட்டம்:) பெயர்க்காரணம் அண்ட் இந்த வடை எந்த ஊர் ஃபேமஸ்னு சொல்லுங்க. ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எனது முதல் சமையல் குறிப்பை வெளியிட்ட admin குழுவினருக்கும் மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி. இது இலங்கையில் தழிழரின் இடமான யாழ்ப்பாணதில் ஒரு ஊரில் செய்யத்தொடங்கப்பட்டது. நன்றி

லலிதா,
புதுமையா இருக்கு :)
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லலிதா, பருத்துறை வடை கேள்விபடாத குறிப்பு.. பருத்துறைங்கறது ஊர் பெயரோ? காரசாரமான மாலை நேர நொறுக்ஸ். வித்யாசமான குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆமாம். அது ஒரு ஊர் பெயர். கண்டிப்பா try பண்ணவும். என் கணவர் இதை கண்டால் விட்டு வைக்கவே மாட்டார்..

'பருத்தித்துறை' வடை என்பதுதான் நாளடைவில் பருத்துறை வடை ஆகிவிட்டது.

‍- இமா க்றிஸ்

yes u rite....

ஆகா.... முதல் குறிப்பு அருமையா வந்துட்டுது போலவே :) சூப்பர். இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

thanks to every one....

லலிதாம்பிகா பருத்துறை வடை அருமையாக இருக்கு.ரொம்ப ஈஸியானா குறிப்பு வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஈழத்தில் பருத்தித்துறை என்னும் ஊரில் பெயர் பெற்றது இந்த தட்ட வடை. அதனாலேயே இதை பருத்தித்துறை வடை என்று அழைப்பார்கள்.

மைதா மா சேர்க்காமல். உளுந்தை ஊற வைத்து கொஞ்சம் அரைத்தும்(கர கர மொற மொற பதத்தில்(மாவு பதத்தில் அல்லாமல்) ; கொஞ்சம் அரைக்காமலும் பிசைந்தும் செய்யலாம். 'நல்ல மொறு மொறுப்பாக இருக்கலாம். மாவு சேர்த்தால் எளிதில்'இளகிவிட வாய்ப்பிருக்கு.

எனக்கு பிடிச்ச வடை இது.

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!