ஹஜ்ஜீர் பணியாரம்

தேதி: January 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

அரிசி மாவு - 3 கப்
மைதா - அரை கப்
முட்டை - 2
சீனி - ஒன்றேகால் கப்
கரூர் நெய் (அ) டால்டா - 75 கிராம்
தேங்காய் பால் - கால் கப் (முதல் பால் மட்டும்)
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
உப்பு - சிறிது

முட்டையுடன், உப்பு மற்றும் சீனியை சேர்த்து நன்கு சீனி கரையும் வரை கலக்கவும். பெருஞ்சீரகத்தைப் பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவையும், மைதாவையும் சலித்துக் கொள்ளவும். அதோடு பெருஞ்சீரகப் பொடி சேர்த்து, நெய்யை உருக்கி ஊற்றி கரண்டியால் நன்கு ஆறும் வரை கலக்கவும். அதில் முட்டை, சீனி கலவையையும், தேங்காய் பாலையும் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
சிறிது மாவை எடுத்து படத்திலுள்ளது போல் கையால் கால் இன்ச் அளவிற்கு தட்டிக் கொள்ளவும்.
அச்சுகளால் தட்டிய மாவை விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான ஹஜ்ஜீர் பணியாரம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹலிலா அக்கா ஹஜ்ஜீர் பணியாரம் எபோதும் போலவே அருமையான வித்யாசமான குறிப்பு சூப்பர் டிஷ் அக்கா இது பொருச்சு எடுததுக்கு அப்புரம் சாகி ஆன மாரி இருக்குமா இல்ல கிற்ஸ்பியாவே இருக்குமா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

hi halila hajur paniyam super

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
ஹஜூர் பணியாரம் நல்லா பண்ணி இருக்கிங்க மா...பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது....சூப்பர்....வாழ்த்துக்கள்...

பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது. அருமையான ரெசிபி

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

வழக்கம் போலவே வித்தியாசமான குறிப்பு,வாழ்த்துக்கள்.

Kalai

ஹலி ஹஜூர் பணியாரம் நாங்களும் செய்வோமா.............நாங்கள் கசகசா சேர்ப்போம்.............நல்லா செய்து இருக்கீங்க வாழ்த்துகள் :)

ஹலீலா ஹஜ்ஜூர் பணியாரம் எளிமையாகவும் அருமையாகவும் இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வழக்கம் போல உங்க ஊர் ஸ்பெஷல்... சூப்பர். எல்லாமே டிஃபரண்ட்டான குறிப்பா, அருமையா இருக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி பதிவிற்கு ரொம்ப நன்றிமா. இந்த பணியாரம் கிற்ஸ்பியா தான் இருக்கும் அவசியம் செஞ்சி பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நமீரா பதிவிற்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

லிமா பதிவிற்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கலா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ரூபி வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சுவர்ணா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அறுசுவை குயினின் அன்பான பாராட்டுக்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,ஹஜூர் பணியாரம் சூப்பர்.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)