சுட்ட கத்தரிக்காய் கறி

தேதி: September 23, 2006

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - 1/4 கிலோ.
நல்லெண்ணெய் - 6 மேசைக்கரண்டி.
வெங்காயம் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கியது).
தக்காளி - 2 மிகவும் பொடியாக நறுக்கியது.
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி.
மிள்காய் தூள் - ஒரு தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
தனியாத் தூள் - ஒரு தேகரண்டி.
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி.
சுக்குத் தூள் அல்லது பொடியாக நறுக்கிய இஞ்சி.
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறியது).
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.


 

கத்தரிக்காயின் காம்பை நீக்காமல், எண்ணெய் தடவி மிதமான தீயில் சுட்டுக் கொள்ள வேண்டும். தோல் சுருங்கி, காய் வெடிக்க ஆரம்பித்தவுடன் எடுத்து விடலாம்.
தோலை நீக்கிவிட்டு கையால் நன்கு மசித்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
அதனுடன் மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, பொடித்த கறிவேப்பிலை, சுக்குத்தூள் இவற்றையெல்லாம் நன்கு கலந்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை பொன்னிறமாக, மிதமான சூட்டில் வதக்கி, அதோடு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
இந்த நிலையில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நறுமணம் வரும் வரை கிளறி, மசித்து வைத்த கத்தரிக்காய் கலவையை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
எண்ணெய் மேலே வந்த நிலையில் கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறலாம்.


சப்பாத்தி, நாண், பரோட்டா, புல்கா, ப்ரெட் சாண்ட்விச் மற்றும் தயிர் சாதம் இவற்றுடன் மிக பொருத்தமாக இணையும் கறிவகை. பொறுமையாக, மிதமான தீயில் தயாரித்தால் மிகவும் நன்றாக அமையும்.
தண்ணீரே சேர்க்காததால், எண்ணெய் தேவையானால் கூடுதலாக்கிக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜுபைதா,
இன்று உங்கள் சுட்ட கத்திரிக்காய் கறி செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இன்று இந்த கறி செய்தேன் ரொம்ப நல்லா இருந்த்து,எங்க அம்மா இப்படித்தான் செய்வாங்க,சுக்குத்தூள் சேர்க்காமல்.

நானும் இது போல் சுக்கு சேர்க்காமல் செய்தேன்..நன்றாக இருந்தது..நன்றி..

வாழு, வாழவிடு..