கொங்கு கோழி வறுவல்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒன்று
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 10
காய்ந்த மிளகாய் - 4
மல்லி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
நெய் - 50 கிராம்


 

துருவிய தேங்காயையும், மல்லியையும் சேர்த்து ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
மிளகு, மிளகாய், வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அரைக்கவும்.
கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரும்பியவாறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளவற்றைப் போட்டு அத்துடன் கறியினையும் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
சுமார் 20 நிமிடங்கள் கறி வெந்தபிறகு நறுக்கின தக்காளியைச் சேர்த்து, சிறிது சுடு தண்ணீர் தெளித்து சுமார் பத்து நிமிடங்களுக்கு நன்கு பிரட்டவும்.
பிறகு மேலும் சிறிது சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கறி மிருதுவாகும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.


மேலும் சில குறிப்புகள்