கிச்சடி செய்வது எப்படி ?தெரிந்தால் சொல்லுங்களேன்

கிச்சடி செய்வது எப்படி ?தெரிந்தால் சொல்லுங்களேன்

ரவா கிச்சிடி

தேவையானவை

ரவை - 2 கப்
பீன்ஸ் - 6
காரட் - சிரியது - 1
வெங்காயம் - 1
பச்சை பட்டாணி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலை பருப்பு - 1 தே. கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே. கரண்டி
தண்ணீர் - 3 கப்

செய்முறை

ரவையை வாசனை வரும் வரை வருத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை சிரிது சிரிதாக நருக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளை போட்டு, தேவையான தண்ணிர் ஊற்றி வேகவிடவும். உப்பு சேர்க்கவும்.வெங்காயம் சேர்க்கவில்லை என்றால் பெருங்காயம் சேர்க்கவும். காய்கள் வெந்த பின் வருத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளரவும். சிறிது தளராக இருக்கும் போது இறக்கவும்.

சட்னி/சாம்பார்/ஊறுகாய் வைத்து சாப்பிடவும்.

மேலும் சில பதிவுகள்