பயம் போக்க உதவுங்கள் தோழிகளே....

தோழிகளே... நான் தற்போது 26 வாரம் கர்ப்பமாக உள்ளேன்.. யூரின் அர்ஜன்ஸிக்காக டாக்டரை பார்த்தேன்... போன மாதம் டெஸ்ட் செய்து இன்ஃபெக்சன் உள்ளது என்ரு டேப்லட் கொடுத்தார்... இந்த மாதம் டெஸ்ட் செய்து இன்ஃபெக்சன் குறையவில்லை இப்படி இருந்தால் குறைபிரசவம் ஆகும் என பயமுடுத்துகிறார்...

குறிப்பு: போன மாதம் வயிற்றை தொட்டு பார்த்து 2 வார வளர்ச்சி குறைவாக உள்ளதென்று கூறி பயமுடுத்தினார் பின் ஸ்கேன் பார்த்து வளர்ச்சி நன்றாக உள்ளதென்றும் 10கி குழந்தை எடை குறைவாக உள்ளது அது பின்னர் சரியாகிடும் என்றார்.

டாக்டரை மாத்தி பார்க்கலாம் என முடிவு எடுத்துள்ளோம் ஆனாலும் குறைபிரசவம் ஆகி விடுமோ என பயமாக உள்ளது... குறைபிரசவம் ஆவதை தடுக்க நான் என்ன செய்ய வேண்டும்.. டாக்டருக்கு 30+ அனுபவம் உள்ளது.. அதான் அவர்கள் கூறுவதை கண்டு பயப்படாமல் இருக்க முடியவில்லை,,,
பயம் போக்க உதவுங்கள் தோழிகளே....

Dont worry Aarthy
Its good to get second opinion
Scan reports confirms if any deformities -
So no worries about Pre mature delivery
Now a days medical profession turned to commercial
Its good to consult a Experienced DGO in your own locality

All the best

Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது

கவலை வேண்டாம் தோழி எனக்கும் 4 மாததில் இந்த பிரச்சணை இருதது யூரின்ல blood வந்தது நான் ரொம்ப பயந்துடேன் டாக்டர் டப்லெட் கொடுத்து மோர் தண்ணீர் நிறைய குடிக்க சொன்னாங்க சரியாடிச்சி

மேலும் சில பதிவுகள்