பெட்ஸ் (Pets) ஜாக்கிரதை

ஹாய் மக்களே..

என்னடா பெட்ஸ் ஜாக்கிரதைனு போட்டு இருக்கேன் என பாக்கிறீங்களா .. நம்மை ஜாக்கிரதையா இருக்க சொல்லி சொன்ன தலைப்பு இல்லை இது.. நம்மிடம் இருந்து நம்ம பெட்ஸ்களை ஜாக்கிரதையா இருக்க சொல்லும் இழை தான் இது..

என்ன இன்னும் புரியலையா.. பல பேருக்கு பாவப்பட்ட ஏதாவது வாயில்லா ஜீவன் எப்பவாவது மாட்டிடும் . வாய் மட்டும் அதுக்கு இருந்தா கண்டபடி நம்மை திட்டி தீத்துரும்.. அதுக்காக தான் நாம் விவரமா ஹ்யூமன் ஃப்ரண்ட்லியா இருக்கும் அனிமல்ஸ்களை வீட்டுல அதிகம் வளர்த்துறோம். இல்லைனா நம்மை தூக்கி போட்டு மிதிச்சிடும் இல்ல.. அதுலும் என்னை.. ஹிஹிஹி. .. :)

இந்த இழையில் நம்ம பெட்ஸ்ஸை எப்படி எல்லாம் நாம் நம் பாச வலையில் சிக்க வைத்து துன்புறுத்தி இருக்கிறோம் என்பதை பற்றி தான் ஜாலியாவோ, சீரியசாவோ , செண்டியாவோ பேச போறோம். நாம் சின்ன வயதில் அதனிடம் செய்த சேட்டைகள் இல்லைனா இப்ப செய்து கொண்டிருக்கும் ரகளைகள், கேள்விப்பட்டது, பக்கத்து வீட்டு பிள்ளைகள் செய்வது , பயந்தது என தடையே இல்லாம பேசலாம் வாங்க.. :) நம் வீட்டு நாய், பூனை,புறா,கிளி , மாடு ,எருமை, கோழி, ஆடு,முயல், மயில், மான், சிங்கக்குட்டி, ஆனைக்குட்டி இன்னும் என்னவெல்லாம் இருக்கோ அத்தனை பற்றியும் உரையாடலாம்..

நாய்க்கு பொட்டு வெச்சுது, பல்லிக்கு பூ வெச்சுது, பூனைக்கு சூடு வெச்சது எல்லாமே பேசலாம் வாங்கோ .. :)

பெட்ஸ்

முதல்ல நானே ஆரம்பிக்கிறேன்.. எனக்கு நாய் , பூனைனா ரொம்ப பிடிக்கும்.. ஆனா குட்டியா இருந்தா தான்.. பெரிசுகிட்ட கொஞ்சம் இல்லை ரொம்பவே அலர்ஜி..
வளர்த்தினதும் இல்லை.. :(.. ஆனா பறவைகள் மீது ஏனோ ஒரு தனி ப்ரியம்.. கோழிக்குஞ்சு,புறா,கிளி, செம்பூத்து என நிறைய பறவைகளை வளர்த்தி இருக்கிறேன். அதில் கொடுமை செய்த பறவைனா கோழிக்குஞ்சு தான்.. :( அவ்வ்வ்வ்வ்
இதை படிச்சுட்டு, என்னோட பழகாம விட்டுடாதிங்க.. இதை எல்லாம் நான் அறியாத வயசுல புரியாம செஞ்சது :(
எல்லாருடைய கோழிகளும் அரிசி, கம்பு சாப்பிடும்.. ஆனா நான் வளர்த்தியது பஞ்சு, கொத்தமல்லி தழை ,வேப்பிலை, ஒட்டடை தான் சாப்பிடும்.. அது எனெல்லாம் கேட்கபடாது.. தினமும் பள்ளி முடிந்ததும் கோழிக்கு இரை தரேன்னு சொல்லி வீட்டில் ஒட்டடை பூச்சியை பிடிக்க ட்ரை பண்ணுவேன்.. அம்மாக்கு ஒரு சந்தோசம் என்னனா.. வீட்டுல எங்கேயும் ஒட்டடை இருக்காது.. நான் எடுத்துடுவேன்.. ஆனா பாருங்கா. இந்த பாழா போன கோழிக்குஞ்சுக்கு ஒட்டடை பூச்சி எது, ஒட்டடை எதுன்னு தெரியாம போச்சு..பயபுள்ள ஒட்டடைய சாப்பிட்டு பழகிடுச்சு.. அதிலிருந்து எந்த குச்சியை நான் எடுத்து வெச்சாலும், ஓட்டடை குச்சின்னு நினச்சுட்டு ஒடி வந்து குச்சியை கோத்த ஆரம்பிக்கும் யாரு பெத்த கோழியோ.. அது போல ஒரு ஒரு உணவுக்கு ஒரு ஒரு கதை.

என்னோட கோழி குஞ்சுகளுக்கு எப்பவும் நான் நெயில் பாலிஷ் அடிச்சு விட்ருவேன். பளா பளன்னு சிகப்பா நெயில் இருப்பதை பார்த்துட்டு, அதுங்க அதோட நகத்தையே கொத்திக் கொத்தி பாத்துக்கும்.. பாவம்..ரெண்டு கோழிகளுக்கும் கல்யாண செஞ்சு வெக்கிறேன்னு சொல்லி, பூவை தலைய சுத்து கட்டிவிட்டு, அதை பாடாய் படுத்திய நாட்களும் மறக்க முடியாது.. அதுக்கு வாய் இருந்திருந்தா என்னை கண்டபடி திட்டி இருக்கும்..

ஒரு நாள் பூரி சுட்ட எண்ணையை எங்கம்மா கீழே வெச்சி இருந்தாங்க.. ஆறிய எண்ணெய் தான். இல்லைனா, சிக்கன் ஃப்ரை ஆகி இருக்கும்.. கொழுப்பெடுத்த கோழிக்குஞ்சு வடசட்டியில் ஏறி விளையாடிட்டே எண்ணெய்க்கு உள்ளே தொபக்கடினு விழுந்து வெச்சிருச்சு..உடம்போட ஒட்டி அலங்கோலமா வந்து என் முன்னால வந்து நின்னுச்சு.. நான் பாவமா பார்த்து ஷாம்பு போட்டு குளிப்பாட்டி குளிரில் நடுங்கிய கோழியை தீயில் தலைக்கிழா கட்டி லைட்டா வாட்டி வார்ம் பண்ணி விட்டேன்..

இன்னும் இருக்கு..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆஹா சூப்பரான விசயம் என்னைப் பேசசொன்னா நான் பேசிட்டே இருப்பேன்:-)

எங்க வீட்டுல ஏகப்பட்ட பூனை வளர்த்தினோம். சுஷ்மா, பிங்க்கி, டீனூ , சுஜி ந்னு நிறய அதுல சுஷ்மாங்கிறபூனைதான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் வளர்த்தினது. நல்ல ஜாதிப்பூனை அது . ரொம்ப்ப்ப்ப சாது.. அழகா டால் மாதிரியே இருக்கும். புசு புசுன்னு வொய்ட்டா இருக்கும். அப்போ எங்க அப்பா எதாவது சாப்பிடக்கொடுத்து ஒரு சாக்பீஸ்ல சின்ன ரவுண்டு போட்டுருவாரு . அப்போ அது அதை எடுக்காது பேசாம பக்கத்திலேயே உக்காந்து பாக்கும். எவ்வளோ நேரம்னாலும் உக்காந்திட்டுருக்கும். அப்புறம் அதை அழிச்சதும் எடுத்து சாப்பிடும் ;-). கொஞ்ச நாள்ல சாக்பீஸ் இல்லாம வெறும் தண்ணியால ரவுண்டு போடுவோம் அதுக்கும் எடுக்காது :-) அப்புறம் வெறும் கையால ரவுண்டு போடுவோம் .. அதையும் அழிச்ச மாதிரி பாவ்லா செஞ்சாதான் சாப்பிடும் இப்படி நிறயா ரம்ஸ் அவளைப் பத்தி சொல்லிட்டே போகலாம். ரொம்ப அறிவாளி :).... கண்ணாடி முன்னாடி வைச்சா அதுல தன்னைப் பாத்துட்டு யாரோ பின்னாடி இருக்காங்கன்னு பின்னாடி போய் பாக்கும் :-) டம்ளர்ல பாலோ தயிரோ கொடுத்தா கைய உள்ள விட்டு நக்கி நக்கி சாப்பிடும். அப்போ நான் யூ கே ஜி தான் படிச்சுட்டு இருந்தேன் தினமும் ஸ்கூல் விட்டு வரும்போது வீட்டுக்கு அவளைப் பாக்கும் நினைப்புலதான் ஓடிவருவேன். ஒரு நாள் அவளைக் காணோம். அம்மா சொன்னாங்க பக்கத்தில எங்க மாமா வளர்த்தின புறாவ இது புடிச்சிருக்கலாம்னு நினைச்சு கொண்டு போய் காட்டுல விட்டுட்டாங்கன்னு ரொம்ப சோகமாயிடுச்சு. வீட்டுல எல்லாருமே அன்னிக்கு சாப்பிடமுடியாதமாதிரி சோகம். நானும் எங்க அக்காவும் போயிதேடிப்ப்பாத்தோம் . கத்தி கத்தி கூப்பிட்டு பாத்தோம் . ம்ஹும் அதைப் பாக்கவே முடியலை. அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு அம்மாவும் சுஷ்மாவோட அம்மாவை வளர்த்தர வீட்டுல சொல்லி வைச்சோம் இன்னொரு குட்டிப்போட்டா கொடுங்கன்னு :). அப்புறமா வந்து மத்த பூனைக் கதை அப்புறம் என் செல்ல சிபி (டாக்) கதை எல்லாம் சொல்றேன் .

Don't Worry Be Happy.

ஹா ஹா உங்க பதிவு படிச்சு சிரிப்புதான் வருது :-) நாங்களும் கோழிக்குஞ்சு வளர்த்தியிருக்கோம் .. ஆனா நான் ஒட்டடை எல்லாம் கொடுத்தது இல்ல:) கலர் கலரா அழக அழகா வித்துட்டு வர கோழிக்குஞ்சப்பாத்து அழுது அடம்பிடிச்சு வாங்கி வளர்த்தியிருக்கோம். கரையான் எங்க இருக்குன்னு தேடி அந்த இடத்தில கோழிகுஞ்ச வைச்சு சாப்பிட சொல்லி அதுன்னால முடியாது ஏற்கனவே எங்க அம்மா நல்லா அரிசிய போட்டு வைச்சு அதைய சாப்பிட்டு வயிறு முட்டி இருக்கும். ஆனா நான் விடுவேனான்னு அந்தகரையான் மேல விட்டுட்டே இருப்பேன் கோழிக்குஞ்சு தலைத்தெறிக்க ஓடும்...

Don't Worry Be Happy.

ஹஹஹா... நானும் இது போல் கலர் கோழி வாங்கி வளர்திருக்கேன். அது வளர வளர வெள்ளையாச்சுன்னா அழுவேன். ;)

நான் அதை கீழவே விடாம டார்சர் பண்ணுவேன். தூங்கும் போது என் மேலவே தான் அதுவும் தூங்கியாகனும். பிடிச்சு வெச்சுகிட்டு தான் தூங்குவேன். அது என் மேலயே அசிங்கம் பண்ணி வெச்சிருக்கும் காலையில். எங்க அம்மா திட்டி தீர்ப்பாங்க... அது கூட தான் இருக்கணும்னா, கீழ படு, பெட்ட நாரடிச்சு வைக்காதன்னு. ;)

முயல் வளர்த்தப்போ அதை காது பிடிச்சு தான் தூக்கணும்னு தெரியாது. வயிற்றை பிடிச்சு நாங்க தூக்கினா அது எங்களை கண்டாலே ஓடி போய் அம்மா, தாத்தா கிட்ட தஞ்சம் புகுந்துடும். :(

இதெல்லாம் சின்ன பிள்லையா இருந்தப்போ... கொஞ்சம் வளர்ந்தப்போ நாய் வாங்கினா தங்கை. எனக்கு பயமோ பயம். இன்னுமே அவர்கிட்ட நான் வம்புக்கு போக மாட்டேன். எங்க விச்சு கையில் (சாரி வாயில்) எது சிக்கினாலும் அது அவரோடதாயிடும்... அதை கேட்டா அவருக்கு பிடிக்காது... அதுவரை அன்பா வாலாட்டி கொஞ்சுறவன், இப்படி எதாச்சும் சிக்கிட்டா பார்வையே மாறிடும்... “வாடி பார்க்கலாம்... நீயா நானான்னு...”னு ஒரு பார்வை பார்ப்பான்...

“தம்பி நீயே வெச்சுக்க... எனக்கு வேணாம்... என்னை வுட்டுடு”னு எஸ்கேப் ஆயிடுவேன். இப்படி ஒரு வாட்சை கண் முன்னாடி அவர் பீஸ் பீஸா ஆக்குறதை தூரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெய்..
பூனை எங்க சித்தி வீட்டுல அதிகம் வளர்ப்பாங்க.. ஒரு நாள் நான் தூங்க்கிட்டு இருக்கும் பொது என் காலடியில் வந்து படுத்துக்கிச்சு.. பெரிய பூனை. தெரியாம உதைச்சிட்டேன்.. நறுக்குன்னு ஒரு கடி.. அதுலேயும் அந்த பூனைக்கு தெரியுது, நான் அவங்க வீட்டு பொண்ணு.. அதிகம் கடிக்காம நாசுக்கா லைட்டா கடிச்சு வாரன் பண்ணலாம்னு.. :( என்னடான்னு நான் முழிச்சு பார்த்தா, மவளே என மொறைச்சு பாக்குது.. ஹ்ம்ம்

எங்க வீட்டுல ஒரு குட்டி பூனை கொஞ்ச நாளுக்கு இருந்தது.. பாலிதீன் கவர் சத்தம் கேட்டா ஏதாவது ஸ்நாக்ஸ் என நினைத்து ஓடி வரும். வேணும்னே அக்கா அத்தம் பண்ணுவா கவரை எடுத்து, அவளோட தாவணியில் தொத்தி ஏறி வரும்.. :) தோசைனா அதுக்கு பிடிக்கும்..அம்மா தோசை சுட்டா காலை தூக்கி கேட்கும்.. அதுக்கு தான் முதல்ல... பால் கருவாடுன்னு எல்லாமே கிடைக்கும்.. :).. ஆனாலும் நீங்க ரொம்ப சமர்த்தா பூனையை பார்த்து இருக்கிங்க.. வட்டம் போட்டா அமைதியா இருப்பது ரொம்பவே ஆச்சர்யம் தான்..
குட்டி பொண்ணா ஸ்கூல் விட்டு பூனைகாக வரும் ஜெய் குட்டி எப்படி இருப்பான்னு பார்க்க ஆசை :) சுஷ்மா பேரு பயங்கர ஸ்டைலா இருக்கு :) கரையான் கொடுத்து கஷ்டபடுத்திட்டிங்க்களா.ஹஹ்ஹா.. நானும் வளர வளர கரையான் புத்தி பார்த்து தேடி கொடுத்து சாப்பிட வைப்பேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி
செம் பிஞ்ச்.. கோழி குஞ்சு கேட்டாவே எங்கம்மா அசிங்கம் பண்ணினா நீ தான் துடைக்கனும்னு சொல்வாங்க..கண்டதை சாப்பிட கொடுக்க வேண்டியது..
அப்புறம் அது என்ன பண்ணும் பாவம்.. கம்பை நீ சாப்பிட மாட்டியானு அதோட வாயை பிளந்து திறந்து கம்பை நான் கொட்டுவேன்.. ரொம்ப இல்லை.. ஒரு தேக்கரண்டி.. பாவம் அது.. :(

தலையில் அழுத்தி முத்தம் கொடுக்க வேண்டியது.. நான் அழுத்தும் அழுத்தத்திலே அது நசுங்கி நாக்கே வெளியே வந்திட்டு போகும்.. இதோட பாவம் எல்லாம் என்னை சும்மா விடாது.. ஒரே பாசம்.. ஆனா பாழா போன கோழிக் குஞ்சு என்னையே தேடி தேடி வரும்.. பாவம்..

நாய்க்கும் நமக்கும் தூரம் தான்.. ஒரு நாள் பால் வாங்க போனேன்.. குட்டி பொமரேனியன் நாய் குட்டி தான். என்னா கத்து கத்துது? பக்கத்துல கடிக்கிற மாதிரி ஓடி வந்தது.. ஆனா ஒரு அடி தள்ளி நின்னு, (அதுக்கும் பயம் தான்..) கத்துது.. அதுக்கு நான் வீல்னு கத்துன கத்திலே அது சத்தியமா அவங்க வீட்டுக்கே ஓடி போச்சு.. இது நான் காலேஜ் படிக்கையிலே.. ஹ்ம்ம்

ஆனாலும் நீங்க நைட்டெல்லாம் கையில் புடிச்சு வெச்சு தூங்கியதும் , கலர் மாறியதும் அழுததும்.. கஷ்டம் தான் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்னடா நமக்கு தான் பெட்ஸ் என்றால் ரொம்ப பிரியமாச்சே இவங்க இப்படி தலைப்பு போட்டு இருக்கே என பயந்து போய்விட்டேன் எனக்கு நாய் குட்டி தான் உயிர் 4 பொமெரெரியன் வளர்கிரேன்

இதுவும் கடந்து போகும் (•‿•)

ரம்ஸ்.... ஏன் ஏன் இப்படி... பெட்ஸ்னாலே பயந்து பின்னங்கால் பிடறியில படும் அளவுக்கு ஓடும் படு தைரியசாலி நான் :). நாய் பூனை ரெண்டுன்னாலும் ஏக பயம். என் பயத்துக்கு பயந்தே எங்க வீட்டு அப்பு கூண்டில் இருக்கிறார். அவர் செய்யும் லொள்ளுக்கு மட்டும் அளவே கிடையாது. சாயங்காலம் அதுக்கு என் அத்தை பிஸ்கட் கொடுப்பாங்க. அவங்க தூக்கி போட்டால் சாப்பிடாது. வாயில் ஊட்டி விடணும். அவங்க இல்லைன்னா நான் எட்ட நின்னு கூண்டுக்குள் போடுவேன். சமத்தா சாப்ட்டுக்கும். என்ன சாப்பிடாம கிடந்தாலும் இவ நமக்கு வாயில் தரமாட்டான்னு அதுக்கு நல்லாவே தெரியும்.

ரெண்டு கிளிங்க எங்க வீட்டில் இருந்தாங்க. ராசா வும் ராசாத்தியும். அதை நாம ராசாத்தின்னு கூப்பிட போக அது என் அத்தையை ராசாத்தின்னு கூப்பிடும். காலையில் முழிச்சதும் மெல்ல ஆரம்பிக்கும் ராசத்தி ராசாத்தின்னு... கண்டுக்கலைன்னா ஹை பிச்சில் கூப்பிட ஆரம்பிக்கும் ரா..சாத்தீ... ன்னு. ரெண்டு கடலையோ ஏதாவது கொடுத்தால்தான் அடங்குவாங்க. வீட்டுக்கு காலிங் பெல்லே வேண்டாம். வாசலில் யார் வந்தாலும் ராசாத்தி ராசாத்தி ன்னு ஆரம்பிச்சுடுவாங்க

வீடு கட்ட ஆரம்பிச்சதும் தொந்தரவா இருக்கும்னு உறவினர் எடுத்துட்டு போறேன்னு கொண்டு போனார். அங்க இருந்து எஸ்கேப் ஆகிடுச்சு.

அப்புறம் போன வருஷம் ஊரில் இருந்தப்போ அணிலுங்கதான் செம ஆட்டம் போட்டாங்க. முறுக்கு பழம்னு எது வச்சாலும் சமத்தா வந்து தூக்கிட்டு ஓடிடுவாங்க. மதியம் சாதத்துக்கும் வந்துடுவாங்க. வழக்கமா நாங்க அதுக்கு சாப்பாடு வைக்கும் இடத்தில் சாதம் இல்லைன்னா உரிமையோட வந்து சாதம் இருக்கும் பாத்திரத்தை தட்டிட்டு போவாங்க :)

நான் மட்டும் இவங்க எல்லாரையும் எட்ட நின்னு பார்த்து ரசிப்பதோடு சரி கிட்டே போகவே மாட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்ஸ் உங்க பதிவை படிச்சு சிரிப்பை அடக்க முடியலை போங்க. கோழிக்குஞ்சுக்கு நெயில் பாலிஷ், அதுக்கு கல்யாணம் வரைக்கும் ஓகே. ஆனா அதை குளிக்க வச்சு தீயில காட்டி ... என்னா கொடுமை படுத்தியிருக்கீங்க அதை. உங்க வீட்டு பக்கம் ப்ளூ கிராஸ் எதுவும் இல்லியோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல டாபிக் ரம்மி.. எனக்கும் நாய், பூனைனா கொஞ்சம் பயம்தான்.. எங்க மாமியார் வீட்ல நாய் பூனை எல்லாம் இருக்கு.. நாய் பேரு ஜூலி.. அந்த குட்டியா வெள்ளையா மொசு மொசுன்னு இருக்குமே அந்த நாய்.. எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நான் அங்க போவேன்.. அப்போலாம் ஒரு கொலவெறியோட என்னப்பார்த்து வரும்பாருங்க அந்த ஜூலி.. ஐயோ அதுக்கு பயந்துகிட்டே நான் கல்யாணம் பண்ண பயந்திருக்கேன்... :) ஆனா என்ன ஒரு ஆச்சரியம்.. கல்யாணம் முடிச்சு நான் அங்க போன அந்த நாள்ல இருந்து இப்போ வரைக்கும் ஒரு முறை கூட அது என்ன பார்த்து சத்தம் போட்டதே இல்ல.. எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம்... ரொம்ப பாசம் வந்துருச்சு போல அதுக்கு என்மேல.. ஆனா நான் இன்னும் அதே பயத்தோட தான் இருக்கேன்... அந்த பூனை கிட்டலாம் நான் போறதே இல்ல.. எப்பவாச்சும் கிச்சன்ல இருக்கும்போது வந்து கத்துச்சுனா பால் ஊத்துவேன்.. அவ்ளோதான்.. அந்த கோட்ட தாண்டி நானும் போமாட்டேன் அதுவும் வராது.. 3 ஜோடி லவ் பேர்ட்ஸ் இருக்கு.. அத எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுக்கு தீனி வைக்கறது, தண்ணி ஊத்தறது இதெல்லாம் அங்க இருக்கும்போது செய்வேன்.. மனசுக்கு எதாச்சும் கஷ்டமா இருந்தா கூட அதுங்களை பார்த்துட்டே இருந்தா அவ்ளோ ரிலாக்ஸ் ஆகும்...

அடுத்து அம்மா வீட்லதான் என்னோட டியர் பெட் இருக்கு.. அதோட பேரு பிங்க்கு (pinku).. எங்க வீட்டு கிணத்துல இருக்கற ஆமை... ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி பயங்கரமா மழை பெய்ஞ்ச சமயத்துல எப்படியோ அது எங்க வீட்டு கிணத்துக்கு வந்துருச்சு.. அப்ப இருந்து எனக்கு ரொம்ப பெட்னா அதுதான்.. அதுக்கு பிங்குன்னு பேரு வெச்சு பத்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி போயி எட்டி பார்த்துகிட்டே இருப்பேன்... இன்னமும் தினமும் அம்மாகிட்ட பேசும்போது பிங்கு எப்படி இருக்குன்னு கேக்காம போன் வைக்கமாட்டேன்.. தினமும் அதுக்கு காலைல சோறு போடுவோம் வீட்ல.. நான் இருக்கும்போதெல்லாம் என்னை தவிர யாரும் அதுக்கு போடகூடாது.. இப்பவும் அப்படித்தான்... :) அப்போ மீனெல்லாம் கூட சாப்பிட வரும் ஆனா எல்லா மீனையும் முந்திகிட்டு வேக வேகமா நீச்சல் அடிச்சுகிட்டு இது வரும் பாருங்க.. பார்க்கவே அவ்ளோ காமெடியா இருக்கும்.. இன்னும் எங்க வீட்ல எனக்கு பெட்டா இருந்து எதிரியா மாறின ஜீவன் ஒன்னு இருக்குது.. அதுதான் எங்க வீட்டு மாடு.. அதுபேரு சுண்டு... சின்ன கன்னுக்குட்டியா இருக்கற வரைக்கும் எனக்கு அது பெட்டா தான் இருந்துச்சு.. ஆனா வளர்ந்து பெரிய மாடானதும் என்னை எதிரி ஆக்கிருச்சு... இப்பல்லாம் என்ன பார்த்தா முட்ட முட்ட வருது... இருந்தா கூட அதுமேல இருக்கற பழைய பாசத்துல பொங்கல் சமயத்துல எல்லாம் அது கொம்புக்கு கலர் செலக்ட் பண்றதுல ஆரம்பிச்சு அதுக்கு என்ன கலர்லாம் வெச்சு போட்டு வைக்கலாம் வரைக்கும் நான் செலக்ட் பண்ணுவேன்.. அதை வேற அதுகிட்ட சொல்லி சொல்லி காட்டுவேன்.. :) ஆனா இந்த வருஷம் தான் அதெல்லாம் மிஸ் பண்ணுறேன்.. நான் இல்லாம சுண்டு சந்தோசமா பொங்கல் கொண்டாட போகுது...

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்