எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் தோளிகளே.!!!!!!!!!!!!!!!!!!

தோளிகலே 5 வருடமாக எனக்கு(FILOPIAN TUBE BLOCK) குழந்தை இல்லாததால் IVF செய்ய முடிவு செய்துல்லோம். இன்று முதல் INJECTION ஆரம்பம். கடைசியாக எனக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு என் வாழ்க்கையின் மிக பெரிய சந்தோசமாக, இருக்க வேண்டும் என்று எனக்காக நீங்கலும் பிரார்த்தனை செய்யுங்கல் கடவுளிடம்.
உங்களின் ஆசிர்வாதங்கலும், அன்பான வார்த்தைகலும், எனக்கு நிச்சயம் வேண்டும் தோளிகலே. உங்கல் அனைவரின் வேன்டுதல்கலும், வாழ்துகலும் கண்டிப்பாக எனக்கு நல்ல செய்தியை தரும் என்று நம்புகிறேன். நான் கடைப்பிடிக்க வேண்டிய விசயங்கள் எதாவது இருந்தாலும் எனக்கு சொல்லுங்கல். அம்மா இல்லை எனக்கு. எனவே ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் கூருங்கல். எனக்கு பெரிதும் உதவும்.

கவலை வேண்டாம்.... எல்லாம் நல்லபடி நடக்கும், விரைவில் தாய்மை அடைந்து நல்ல செய்தியை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். எங்கள் பிராத்தனைகளும், வாழ்த்துக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றி வனி.

இந்த முயற்சியில் கட்டாயம் வெற்றியடைந்து குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.கண்டிப்பாக இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.....

கவலை வேண்டாம் தோழியே விரைவில் தாய்மை அடைந்து எங்களுக்கு நல்ல செய்தி சொல்ல வாழ்த்துகிறேன் .கடவுளிடம் வேண்டுகிறேன் .கடவுளை நம்புங்கள் கைவிடமாட்டார் .

அன்பு தோழியே நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் இன்னும் கூடிய விரைவில் உங்கள் குழந்தையின் அழகு முகத்தை பார்க்கபோறோம் என்ற நம்பிக்கையிலும் சந்தோசத்துடனும் ivf முயற்ச்சியில் இறங்குங்கள்...இறைவன் உங்களை கைவிட மாட்டான்...
அதிக எதிர்பார்ப்புடன் அதையே நினைத்து கொண்டு இல்லாமல் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மனதை பதட்டம் அடைய வைக்காமல் திடமாக ஆரோக்கியமாக நம்பிக்கையாக இருங்கள்.

எந்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் உங்கள் மருத்துவரை கேளுங்கள்.என்னென்ன சாப்பிடலாம் என்னென்ன சாப்பிட கூடாது இதெல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தாய்மை அடைந்த செய்தி நிச்சயம் சொல்வீர்கள் அதற்க்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

SSaifudeen:)

கவலைபாடாதீங்க நல்லபடியாக தாய்மை அடைந்து அழகான செல்லத்தை பெற்றெடுத்த சந்தோசத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவலைபடவேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும். சீரடி சாய் பாபாவின் அருளால் நீங்கள் தாய்மையடைய வேண்டி கொள்கிறேன்.

நம்பிக்கையோட இருங்க. இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்கள் முயற்சி வெற்றியடைய எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவலையே வேண்டாம் தோழியே
துணிந்தவருக்கு துக்கம் இல்லை
கண்டிப்பாக உங்கள் முயற்சி வெற்றியை தரும்
உங்கள் தாய் மற்றும் இறைவனின் அருள் கைவிடாது
இன்னும் சிலமாதங்களில் உங்கள் கைகளில்
மழலை தவழ்ந்து விளையாடும்
நான் வணங்கும் முருகபெருமானிடம்
உங்களுக்காக வேண்டிகொள்கிறேன்

Unga husband ah mudinja ayyappan kovil ku malai pota solunga ,sure ah good news varum,na kelvi paten tats y solren sister

மேலும் சில பதிவுகள்