தேதி: January 10, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஓட்ஸ் - ஒரு கப்
எலும்பில்லாத கோழி - 50 கிராம்
தேங்காய்பால் - அரைகப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
கேரட் - ஒன்று (சிறியது)
பீன்ஸ் - 5
மல்லிக்கீரை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்புதூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுதூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், புதினா சேர்த்து நன்கு வதக்கவும் .வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு மஞ்சள்தூள், பிரியாணி மசாலா சேர்த்து வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் கோழி, மிளகுதூள், சீரகதூள், சோம்புதூள் சேர்த்து கிளறிவிடவும். அத்துடன் உப்பு, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு மூடிபோட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கொதித்த பிறகு ஓட்ஸை அதில் போட்டு வேகவிடவும்.

ஓட்ஸ் வெந்ததும் அதில் தேங்காய்பால் ஊற்றி கிளறி விட்டு கொதிக்க விடவும்.

பிறகு மல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான ஓட்ஸ் கஞ்சி ரெடி.

Comments
ஹலிலா
சிக்கன் ஓட்ஸ் காம்பினேஷன் சூப்பர். நல்ல சத்தான கஞ்சி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹலிலா
ஹெல்தி கஞ்சி.வாழ்த்துக்கள் ஹாலிலா :)
Kalai
ஹலிலா அக்கா
ஹலிலா அக்கா ஹெல்ட்தி கஞ்சி ஈஸி அன்ட் சூப்பர் குறிப்பு
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஹலிலா
அஸ்ஸலாமு அழைக்கும் ஹலிலா,ஓட்ஸ் பிரியாணி கஞ்சி,சூப்பர்.சத்தான குறிப்பு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ஹலீலா
நல்ல, ஆரோக்யமான குறிப்பு
வாழ்த்துக்கள் ;)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ஹலீலா
ஹலீலா ஓட்ஸ் கஞ்சியில சிக்கன் சேர்த்து செய்துருப்பது நல்லாருக்கு வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
கலீலா
விளக்கப் படக்குறிப்புடன் பார்ர்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது...அருமை வாழ்த்துகள்
பானுகமால்
haija
assalam alikam oats super
dumroot sweet recipes tell me hailalfarveen
நன்றி.
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வனிதா.
வனிதா பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
கலா
கலா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
கனிமொழி
கனிமொழி பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம்
வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அருட்செல்வி.
அருட்செல்வி வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
சுவர்ணா
சுவர்ணா வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
பானுகமால்
பானுகமால் வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம்
வஅலைக்கும் முஸ்ஸலாம் ஹைஜா பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)