பாயாசம் - குக்கர் முறை

தேதி: January 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

ஜவ்வரிசி, பாயாச சேமியா - ஒரு கப்
சர்க்கரை - 1 1/4 கப்
தேங்காய் பால் மற்றும் பால் - ஒரு கப்
முந்திரி, திராட்சை - கால் கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் - 3
வெனிலா எசன்ஸ் - 2 துளி

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சை, ஏலக்காயை வறுத்து எடுத்து கொள்ளவும்.
குக்கரில் 4 தேக்கரண்டி நெய் ஊற்றி ஜவ்வரிசி மற்றும் சேமியாவை நன்றாக வறுக்கவும்.
பின் பால் மற்றும் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து, 2 துளி வெனிலா எசன்ஸ், மீதமுள்ள நெய் சேர்த்து 5 விசில் வந்ததும், 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
சுவையான பாயாசம் தயார். எப்போதும் செய்யும் பாயாசம் போல், இல்லாமல் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சுவையான பாயசம்;அவசியம் செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நானும் இப்படி தான் செய்வேன்..ஆனால் வென்னிலா எஸன்ஸ் சேர்த்தது இல்லை.அடுத்த முறை செய்து பார்க்கிரேன்.

கனி ஈஸியான முறையா இருக்கு இதுப் போல செய்து பார்க்கிறேன் தேங்காய் பால் திரிந்து போய்டாதாப்பா.

பாயாசம் அருமையா இருக்கு. முன்பு வெனிலா சேர்த்து பழக்கமில்லை, போன முறை மட்டும் அவசரத்துக்கு பார்ட்டிக்கு அப்படி செய்தேன். நன்றாக இருந்தது. குக்கரில் அடுத்த முறை வெச்சுடுறேன். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nalla sweetana kuripu kani, nanum ippiidi than seiven kani, ana coconut milk serka maten, ordinary milk than use pannuven, next time coconut milk serthu senchu parkiren.. vazlthukkal kani

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கனி பாயசம் குறிப்பு
அருமை
வாழ்த்துக்கள் ;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி குக்கர்ல இதுவரை செஞ்சதில்லை ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஈசியா இருக்கு செய்து பார்ர்க்கிறேன்...

நான் சவ்வரிசி வேக லேட் ஆகும் என்பதால் கொஞ்ச நேரம் ஊற வைத்து குக்கரில் ஒரு விசில் போட்டு இறக்கி பிறகு சேமியாவுடன் சேர்ப்பேன் கடைசியில் தான் தேங்காய்ப்பால் சேர்த்து பிறகு தாளிப்பேன்,,,

பானுகமால்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி அக்கா பதிவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ப்ரியா அக்கா அடுத்த முறை கன்டிப்பா இந்த முறை ல செய்து பாருங்கா வருகைக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா அக்கா வருகைக்கு மிக்க நன்றி அன்ட் திரின்சு போன மாறி தான் அக்கா இருக்கும் அது தான் டேஸ்ட் வேர மாரி கொடுக்கும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி அக்கா வருகைக்கும் வாழ்துக்கும் மிக்க நன்றி அன்ட் ரொம்ப நாளா நானும் ரூம் போட்டு யோசிச்சு வனி அக்கா மாறியே ஈஸியா சேம் டைம் நல்லா டிஷ் ஆ கொடுகனும் நு மூளய போட்டு கசக்கி புழிஞ்சு தந்த குறிப்பு அக்கா சும்மா சும்மா லொலொலாயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுமி அக்கா வருகைக்கும் வாழ்துக்கும் மிக்க நன்றி தேங்காய் பால் சேர்க்குரது தான் சுவை கொஞ்சம் வித்யாசமா இருக்கும் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருட்செல்வி அக்கா வாழ்துக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹ்ம்ம் ஸ்வர்னா அக்கா நானும் இதான் முதல் முறையா குக்கர் ல ட்ரை பன்னது அக்கா நீங்கலும் நிச்சயமா இந்த முறைல ட்ரை பன்னி பாருங்க அக்கா பதிவுக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பானு அக்கா ( பேரு கரெக்டா நு தெரில தப்பா இருந்தா மன்னிசுகோங்க அக்கா ) உங்களின் பதிவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஹ்ம்ம் நானும் ஜவ்வரிசி வேக டைம் ஆகும் ந்ட்ரதாலா தான் குக்கர் ல செய்யனும் நு ட்ரை பன்னி செஞ்சது அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஜவ்வரிசி, பாயாசம் சேமியா தலா ஒரு கப் ஆ??? இல்லை சேர்த்து ஒரு கப்பா??
மன்னிக்கவும் நான் சமையல் க்கு ரொம்ப புதுசு..என் சந்தேகத்தை தீர்கவும்..