அபார்ஷன்..........

தோழிகளே, எனக்கு 25.06.12 அன்று அபார்ஷன் ஆனது அதன் பின் மாதவிலக்கு சரிவர வருவதில்லை. 08.10.12 அன்று மாதவிலக்கானது 01.12.12 வரை ஆகவில்லை, 01.12.12 அன்று எனக்கு மேல் வயிறு வலி வரவே டாக்டரிடம் காண்பித்தோம் அன்று வரை கரு தரிக்க வில்லை. டாக்டர் மேல் வயிறு வலிக்கு ஒரு டெப்லட்டும், மாதவிலக்காக ஒரு டெப்லட்டும் தந்தார். 08.12.12 அன்று மாதவிலக்கானது. இன்று மீண்டும் டெஸ்ட் செய்ததில் நெகடிவ் ரிசல்ட் தான் ரொம்ப கஷ்டமாக உள்ளது. 2 நாள்களாக அதே போல் வயிறு வலிக்கிறது. இது எதனால்?? நான் வேறு டாக்டரை பார்க்கலாமா? திருப்பூர், கோயம்புத்தூரில் சிறந்த டாக்டர் யார் என்று கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்....

அபார்சன் ஆகி விட்டால் குறைந்தது 6 மாதத்திற்கு பிறகே மீண்டும் கரு தரிக்க வேண்டும்.
உங்கள் கர்ப்ப பை இழந்த தெம்பை பெறவே இக்காலம்.
அபார்சன் ஆன பிறகு சுத்தமாக எல்லாமே வெளியே வந்து விட்டாதா இல்லை சிறிதளவு எங்கேயாவது தங்கி விட்டதா என பரிசோதிக்க வேண்டும்.
அப்படி தங்கியிருந்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
இது டாக்டர் எனக்கு சொன்னது.
எனக்கும் வலி இருந்தது. ஆனால் எனக்கு regular. நல்ல டாக்டரிடம் காரணம் கண்டறிந்து treatment எடுக்கவும்.
இறைவன் கைவிட மாட்டார் தோழி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

தோழி சொன்னது சரியே. நீங்கள் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

எனக்கு Twin Pregnancy, UAE -இல் இது high risk pregnancy என்று சொன்னார்கள், என் கர்பத்தில் இரட்டை குழந்தைக்கு தேவையான இரண்டு அறைகள் இல்லை. ஒரே அறையில் இரண்டு குழந்தைகள். அதுவும் Govt Hospital இல் தான் காட்டவேண்டும் என்று கூறினார்கள்.

நான் 8 வது மாதம் கோயம்புத்தூர் வந்துவிட்டேன். ஆனால் என்னோட ஒரு குழந்தை இறந்து விட்டது. நான் குப்புசாமி நாய்டு Hospital கோவை காட்டினேன். Dr. கற்பகம் முரளி. மிகவும் நம்பிக்கையுடன் பேசினார். என்னை காத்திருக்க சொல்லி 9 மாதம் ஆன பிறகு டெலிவரி செய்தார். மற்ற dr கள் உடனே (8 ம் மாதத்தில்) ஆபரேஷன் செய்து குழைந்தையை வெளியில் எடுத்து NEW Born ICU இல் குறைந்தது ஒரு மாதமாவது வைக்கவேண்டும் என்றனர். ஆனால் எனக்கு எல்லார் போல் ஆபரேஷன் நடந்தது. குழைந்தை 2 நாள் மட்டும்மே ICU இல் இருத்தது. இப்போது நானும் என் ஒரு குழந்தையும் நலமாக இருகிரோம்.

மேலும் நான் தஞ்சாவூர் கற்பரக்ஷபிகை கோவிலுக்கு வேண்டி கொண்டேன். வேண்டுதலையும் நீரைவேற்றிவேட்டோம்

வாழ்க வளமுடன்

நன்றி நித்யா மற்றும் அஸ்விதா , நான் 25.06.12 அன்றே D&C செய்துவிட்டேன், அன்றே SCANஉம் செய்து கர்பப்பை சுத்தமாக உள்ளது என்ட்ரு டாக்டர் ரிப்போர்ட் தந்தார்கள்.

நித்யா, உங்கள் மூலம் கர்ப்பரக்ஷாம்பிகை அம்மனை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி , அங்கு என்ன வேண்டுதல்கள் செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்கள்...

தோழிகளே, இன்று டாக்டரிடம் சென்றோம், உடல் எடையை குறைக்க Obimet SR Tablet கொடுத்தார் மற்றும் மாதவிலக்காக Primolut-N Tablet ம் கர்ப்பபை வலுவடைய Gynovit Tonicம் கொடுத்தார். இந்த onic குடிப்பத்தால் பயன் ஏற்ப்படுமா? ஏன் என்றால் நான் இதை 3 மாதமாக குடித்துவருகிறேன்.

திருப்புர்ல விஜயலட்சுமி, கோயம்புத்தூர் ல குப்புசாமி நாய்டு ஹோச்பிடல் பாருங்க அந்த ஹோச்பிடல் பெட்டெர். அங்கத நல்ல இருக்கு.

மேலும் சில பதிவுகள்