6 வார கர்பம்---எந்த நேரமும் வாந்தி

என் தோழி 6 வார கர்பம்.அவளுக்கு எந்த நேரமும் வாந்தியாம்.சொல்லி அழுறாள்... என்ன பண்ணலாம்?
she is living in london

வாந்தி சில்பேருக்கு குழந்தை பிறக்கும் வரைஇருக்கும் அதுக்கு எதுவும் பன்னமுடியாது எலுமிச்சைபழத்தை பாதியாக வெட்டி அதை முகர்ந்தால் நல்லது செய்யசொல்லுங்கள்

angulla dr kalidam check up pokum pothu sonnal immediate ah stop ayidum.

மாதுளை பழ சாறு கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். உலர்ந்த திராட்சை ( raisins)சாப்பிடலாம்.
2 டம்ளர் தண்ணீரில் சிறிது இஞ்சி 2 ஏலக்காய் இடித்து போட்டு கொதிக்க வைத்து 1 சிட்டிகை தேயிலை சேர்த்து வடித்து சீனீ சேர்த்து சூடாக வடித்து குடிக்கவும்.

வாந்தி நிக்க மருந்து கொடுத்தாலும் அப்பப்ப சேர்த்து வெச்சு வந்துடும். அது வெளிய வருவது நல்லதுன்னும் சொல்வாங்க. எது எப்படியோ.... எனக்கு ஒரு சிலர் சொன்ன வைத்தியம் அட்லீஸ்ட் வெளிய இருக்கும் போது வாந்தி வராம இருக்க கை கொடுத்துச்சு. நம் கையில் மணிக்கட்டில் மூன்று இன்னொரு கையின் மூன்று நடு விரல்களை வைங்க, அந்த மூன்றாவது விரல் முடியும் பாய்ண்டை லேசா அழுத்தி விட்டா வாந்தி வருவது நிக்கும். இது ஒரு அக்குப்ரெஷர் பாயிண்ட். பயம் வேண்டாம் செய்ய. சந்தேகம் இருந்தால் கூகிளில் பார்க்கலாம். சில நாள் முன்பு இதே வேலைக்கு அக்குப்ரெஷர் wristband கடைகளில் கிடைப்பதை பார்த்தேன். நல்ல பலன் தருவதாக சொன்னாங்க, அனுபவமில்லை. முயற்சிக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்