ஃப்ரைடு சிக்கன்

தேதி: January 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

 

சிக்கன் லெக் பீஸ் - 4 (அ) தொடையுடன் கூடிய லெக் பீஸ் - 2
தயிர் - அரை கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்
எலுமிச்சை - ஒன்று
சாட் மசாலா - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
ஃபுட் கலர் - சிறிது (விரும்பினால்)
சர்க்கரை - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு


 

தயிருடன் சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, இதில் சிக்கன் துண்டுகளை பிரட்டி ஊற விடவும்.
இந்த கலவை குறைந்தது 2 மணி நேரம் ஊற வேண்டும்.
பின் ஃப்ரெஷ் மிளகை பொடித்து சேர்த்து 220 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். விரும்பினால் இப்போது சாட் மசாலாவும் சேர்க்கலாம். 10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும். வெந்ததும் எடுக்கவும்.
கடைசியாக எலுமிச்சை பிழிந்து பரிமாறலாம். சுவையான எண்ணெய் இல்லாத சிக்கன் தயார். பேக் செய்யாமல் க்ரில் கூட செய்யலாம். க்ரில் செய்தால் இதைவிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹைய்யா நா தான் முதல் பதிவு வனி அக்கா ஃப்ரைடு சிக்கன் தனியா சாப்டா சிக்கன் வயிதுக்குள்ள போய் கத்தும் சோ கனி கு ஒரு ப்லேட் பார்சல் பன்னிடு சாப்டுங்க அக்கா சூப்பர் சூப்பர் டிஷ் ஹோடல்ஸ் ல கொடுபாங்கலே அதே மாறி இருக்கு அக்கா யம்மி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனிதா ஃப்ரைடு சிக்கன் ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சுவையான குறிப்பு.அழகான படங்கள்.நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.added to my favorites..thanx for ur recipe..

கடைசி படம் கலக்கல்.எனக்கும் ஒரு ப்லேட் பார்சல்.

வனி
படம் அள்ளுது..சிக்கன் கலக்கலா இருக்கு..
பருப்பு சாதத்துக்கு இது இருந்தா பரம் திருப்த்தி. வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி இப்படிலாம் ஆசை காட்டக்கூடாது ஆமா சொல்லிட்டேன் சூப்பரான சிக்கன் அப்படியே எனக்கே எனக்கு :) வாழ்த்துக்கள் வனி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யம்மி சிக்கன் சூப்பர்.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ahaaaaa.. super vani, fry chicken superrrr.... eduthu sapada kai thudikkuthu.. ana sapida than mudiyala..( what to do vani?) kandippa try panren, vazlthukkal vani...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி, நான் சொல்ல வந்ததை சுமி சொல்லிட்டாங்க... கடைசி படத்தை பார்த்ததும் ஆவலா சாப்பிட ஒரு காலை எடுக்க போனேன்.. லேப்பி மானிட்டர் முட்டிட்டு நிக்குது. வழக்கம் போலவே அசத்தலான படங்கள், எளிய முறையில், சீக்கிரம் செய்யக்கூடிய பார்ட்டி ரெசிப்பி வனி.. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா அக்கா சிக்கன் அருமையா இருக்கு..வாழ்த்துக்கள் :)

Kalai

வனி குறிப்பு மிக அருமை வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருமையான ஆரோக்கியமான ரெசிப்பி :)

அழகான ப்ரசண்டேஷன் வழக்கம்போல்

நானும் பசங்களுக்காக சில சமயம் பேக் செய்வது உண்டு....ஆனா நிறைய நேரம் எடுக்கிறது.

கிரில் மோடில் எப்படி வைக்கிறதுன்னு முடிஞ்சா சொல்லுங்க அதுக்குன்னு தனி செட்டிங்க் என்னோட எலெக்ரிக் ஓவனிலும் இல்ல மைக்ரோவேவிலும் இல்ல

வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் அக்கா உங்கள் ஃப்ரைடு சிக்கன் சுப்பர் . என்னிடம் microwave தான் உள்ளது . அதில் fry பண்ணலாமா ??? pls தெரிஞ்சவங்கள் சொல்லுங்கோ

யாதுகா

மைக்ரோவேவில் செய்யலாம். க்ரில் மோட் இருந்தா க்ரில் பண்ணுங்க, இல்லன்னா அவன்ல எப்பவும் சிக்கன் எப்படி சமைப்பீங்களோ அப்படியே சமைச்சுடுங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்கிட்டையும் இப்ப இருக்க குக்கிங் ரேஞ்சில் க்ரில் மோட் இல்லை. பேக் செய்தா நேரம் கொஞ்சம் கூட ஆகும். என்ன செய்ய... ஆரோக்கியமா கிடைக்குதே. க்ரில் மோட் மைக்ரோவேவிலும் இல்லையா :( விடுங்க... பேக் பண்ணிடுங்க. இல்லைன்னா பாதி பேக் பண்ணிட்டு நீர் விட்டு கொஞ்சம் எண்ணெய் போல வர ஆரம்பிச்சதும் எடுத்து அந்த லிக்விடோட தவாவில் போட்டுடுங்க. தனியா எண்ணெய் தேவைப்படாது. ட்ரை பண்னி பாருங்க. மிக்க நன்றி இளா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

How can post my opinion in tamil?

கீழே அறுசுவை என்ற தலைப்புக்கு கீழே “தமிழ் எழுத்துதவி”னு ஒரு லின்க் இருக்கு... அதில் போய் தமிழில் தட்டி காப்பி பேஸ்ட் செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃப்ரைடு சிக்கன் பிரைட்டா சூப்பரா இருக்குங்க :-) வாழ்த்துக்கள்

நட்புடன்
குணா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கனி... மிக்க நன்றி :) ஒரு ப்ளேட் என்ன இரண்டு ப்ளேட் அனுப்பிடுறேன்.

ஹலீலா... மிக்க நன்றி :)

goya... மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

பிரியா... மிக்க நன்றி :) அனுப்பிடுவோம்.

ரம்யா... மிக்க நன்றி :)

சுவா.... உங்களுக்கு இல்லாததா... :) மிக்க நன்றி.

முசி... மிக்க நன்றி :)

சுமி.... ;)மிக்க நன்றி. செய்துட்டு சொல்லுங்க.

கல்பூ.... மிக்க நன்றி :) முட்டாம பார்த்து கையை விடுங்க.

கலா... மிக்க நன்றி :)

அருள்... மிக்க நன்றி :)

குணா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nan fried chicken nalaiku seiyalamnu iruken.grill mode la vachi ethana mins vaikanum sollunga please.Nan first time oven la seiya poren.reply briefly