ப்ளீஸ் உடனே யாரவது பதில் போடுங்க

வேர்க்கடலை சாப்பிட்டதால் வரும் தலைவலிக்கு என்ன செய்யலாம் ப்ளீஸ் உடனே யாரவது பதில் போடுங்க

வேர்க்கடலை பித்தம் அதிகம் உள்ளவர்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை,ஆகவே தான் இந்த தலை வலி.வேர்க்கடலை சாப்பிடும் போது கருப்பட்டியும் சேர்த்து சாப்பிட்டால் தலை வலி வராது என்பார்கள்.ஆனால் அது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை.எனக்கும் இந்த பிரச்சனை இருந்ததால் வேர்க்கடலை உண்பதையே நிறுத்தி விட்டேன்.

கொத்த மல்லி இலையை அரைத்து சட்னி சாப்பிட்டால் பித்த தலை வலி குறையும்.

வேர்க்கடலை மிகுந்த பித்தம் தான். 'விஜய் தொ.காட்சியில் வரும் பாட்டி வைத்தியத்தில் 'கருப்பட்டியோடு வேர்க்கடலை சாப்பிட்டால் பித்தம் இல்லை என்று திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் சொல்லி இருப்பார்கள்.

பித்தம் தெளிய - இஞ்சிச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடுவதுண்டு.

அல்லது. எலுமிச்சைச்சாறு வெந்நீரில் கலந்து குடியுங்கள்.

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!

ரொம்ப நன்றி தோழிகளே, எனக்கு வேர்க்கடலை என்றால் மிகவும் பிடிக்கும் 2 மாதமா அடிக்கடி சாப்பிட்டேன் அதாலதான் தலை வலி வந்துவிட்டது. அறுசுவையால் இணைந்திருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு , தைப்பொங்கல் வாழ்த்துக்கள், அன்புடன் பிரபாலக்ஷ்மி.

தோழியே, நாள்பட்ட வேர்க்கடைலையில் எண்ணெய் இருக்கும். அதனால் பித்தம் உண்டாவதாக சொல்வார்கள். புதிதாக கிடைக்கும் பச்சை வேர்க்கடலையில் பித்தம் இருக்காதென்று தான் கேள்விபட்டுள்ளேன்.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி பிரபா :) உங்களுக்கும் எங்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்