ஆட்டுக்கால் பருப்பு பாயா

தேதி: January 17, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ஆட்டுக்கால் - 4
வெங்காயம் - 2
தக்காளி - 4
கடலைப்பருப்பு - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால்- ஒன்றரை கப்
தயிர் - அரை கப்
முந்திரி பருப்பு - 8
எண்ணெய், கொத்தமல்லித் தழை, புதினா, உப்பு - தேவைக்கு


 

ஆட்டுக்காலை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொள்ளவும். அரை கப் தேங்காய் பால் விட்டு முந்திரிப் பருப்பை நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வாசனை வந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வதக்கவும்.
வதக்கியபின் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, சோம்புத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தயிர், கரம் மசாலா, தனியாத் தூள், உப்பு சேர்த்து ஆட்டுக்காலையும் சேர்க்கவும்.
அதில் 3 கப் நீர் ஊற்றி 5 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.
ஊற வைத்துள்ள கடலைப்பருப்பு, அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய் பால் ஊற்றி கொத்தமல்லித் தழை, புதினா தூவி 2 விசில் வரை வேக விடவும்.
ப்ரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்தால் ஆட்டுக்கால் நன்கு வெந்து, எண்ணெய் மேலே மிதந்து பாயா நல்ல பதத்துடன் வரும் நிலையில் இருக்கும். மேலும் சிறிது கொத்தமல்லித் தழை தூவி விடவும்.
சுவையான சத்தான ஆட்டுக்கால் பருப்பு பாயா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் யம்மி பருப்பு பாயா ஹ்ம்ம் பாயாலயே வித்யாசமான பாயா சூப்பர் குறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா பாயா சூப்ப்ராயிருக்கு இதுபோலத்தான் நானும் செய்வேன்,கடலைபருப்பு போட்டு சென்சதில்லை.கடலைபருப்பு சேர்த்து செய்துப்பார்க்கிரேன்.வாழ்த்துக்கள்

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு நன்றிகள் பல.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அழைக்கும் ஸலாம் நிஷா,செய்து பாருங்க.நல்லா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பாயா நல்லா செய்து காட்டியிருக்கீங்க. இந்தியா போகும்போதுதான் செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

Kalai

சூப்பர் :) கலா மாதிரி இதெல்லாம் ஊருக்கு போனா தான் செய்யனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி பாயா அட்டகாசமா இருக்குங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.,இந்தியா போகும்போது அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இந்தியா போகும்போது அவசியம் செய்து பாருங்க.வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு நன்றிகள் பல.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.