தயவுசெய்து பதில் கூறுங்கள்

எனக்கும் என் கனவருக்கும் (cartio typing )ஹார்மோன் டெஸ்ட் செய்ய சொன்னார்கல் என் கனவருக்கு நார்மல் என்றும் எனக்கு 15% ரிஸ்க் உள்ளது என்ரு சொல்லிருக்காங்க எனகு ஏற்கனவே 3 டைம் அபார்சன் (heart beat illathathal )ஆகிவிட்டது அதுனால் தான் இந்த டெஸ்ட் எடுக்க சொன்னாங்க ஆனால் டாக்டர் பயப்பட வேனாம் சோல்ராங்க இருந்தாலும் மனதுக்கு ரொம்ப பயமா இருக்கு தயவு செய்து பதில் கூருங்கல் தோழிகலே

அன்பு தோழி... நீங்க சொன்ன டெஸ்ட் பற்றி எனக்கு தெரியல, அதனால் இங்க பதிவிட்டதுக்கு கோவிக்காதீங்க. மன்னிச்சுடுங்க. ஒன்னே ஒன்னு தான் சொல்லணும்... வாழ்க்கையில் 99% டவுட்டு, இல்ல முடியவே முடியாதுன்னு டாக்டர் கை விட்ட கேசெல்லாம் ஜெயிச்சு குழந்தை பெற்று மகிழ்ச்சியா இருக்குறதை கண் முன் பார்த்திருக்கேன். இதை உங்களுக்கும் சொல்லவே இந்த பதிவு... உங்களுக்கு ரிஸ்க் 15% தானே.... இதில் பயப்பட ஒன்னுமே இல்லை. மருத்துவர் சொல்வதை கேளுங்கள், மருத்துவத்தை தொடருங்கள், நல்லதே நடக்கும்னு மனசுல நம்பிக்கை வைங்க.... நடக்கும். எங்கள் பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி சிஸ்டர் அந்த நம்பிக்கையில் தான் முழு மனதோடு கடவுளை வேன்டுக்கிரேன் மிக்க நன்றி உங்கல் ஆருதலுக்கு

கவலைபட வேண்டாம் தோழி.
அதுவே மேலும் உங்களை பலவீனப்படுத்தும். இறைவன் உங்களை கைவிட மாட்டார்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

சுகா கவலை வேண்டாம் இதேப்போல்தான் எனக்கும் இருந்தது 3மாதம் ட்ரீட்மெண்ட்லேயே நல்ல ரிசல்ட் இருந்தது அதுக்கு அப்புரம்தான் என் மகள் பிறந்தாள் அதனால் மனசைப்போட்டு குளப்பிக்காமல் டாகடர் கொடுத்த மருந்தை சாப்பீட்டு கடவுளை நம்பியிருங்கள் நிச்சயம் சந்தோஷமான செய்தி சொல்ல நானும் இறைவனை வேண்டுகிறேன்,சுகா நல்லசெய்தி சீக்கிரம் உண்டு

நன்றி அஸ்விதா கன்டிப்பாக நான் நீங்கள் கூறியப்படி நடந்து கொள்கிரென்

நிஷா அக்கா அந்த நம்பிக்கையில் தான் நானும் இருக்கிரென் நன்றி அக்கா

மேலும் சில பதிவுகள்