சேமியா கிச்சிடி

தேதி: September 25, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேமியா - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
கீறிய பச்சைமிளகாய் - 2
கேரட் - 2
பச்சை பட்டாணி - கால் கப்
வறுத்த முந்திரி - 10
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 3 கப்
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும். கேரட்டையும், பட்டாணியையும் வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போடவும்.
பின் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, உப்பு போட்டு வதக்கவும்.
பின் வேகவைத்த பட்டாணி, கேரட், 3 கப் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிவந்த பின் வறுத்த சேமியாவை சேர்த்து வேகவிடவும். சேமியா வெந்த பின் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை, முந்திரிப்பருப்பு, எலுமிச்சைச்சாறு, சிறிது நெய் விட்டு கிளறி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்