சூப்பரான அரட்டை :)

எல்லோரும் இங்க வாங்க அரட்டை அடிக்கலாம் :) அப்பாடா நானும் அரட்டை இழை துவங்கி எவ்ளோ நாள் ஆகுது வாங்க வாங்க சீக்கிறமா ;)

ரேவதி வீடு வாங்கி இருக்கீங்களா முன்னாடி உள்ள பதிவு பார்த்தேன் வாழ்த்துக்கள், என்னை பற்றி சொல்ல ஒன்னும் இல்லங்க வீட்டில் இல்லத்தரசி 2 பசங்க கிருஷ்ணா, அர்ஜூன், நாங்க நகை கடை வச்சிருக்கோம். அவ்வளவு தான் என்னை பற்றி.
வினோ வரவேற்பிற்கு நன்றி, தமிழில் டைப் பண்ண பழகிகிட்டேன் இங்க வரதுக்கு முன்னாடி அதான்.

வினோ... சரி வினோ போயிட்டு வாங்க :) இனி வழக்கம் போல் வந்துடுங்க.

உமா... நலம். நீங்க நலமா? தேவி மட்டும் தான் புதியவர் ;) வினோ, ரேவதி புதியவர்கள் அல்ல. லாங் கேப்பூக்கு அப்பறம் ரி எண்ட்ரி கொடுத்திருக்காங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க மகன் பேரு அர்ஜுனா??? உமான்னு ஒரு தோழி இருந்தாங்க... இப்ப வராங்களான்னு தெரியல. அவங்க மகன் பேரும் அர்ஜூன். :( அவங்களை எல்லாம் இப்போரொம்ப மிஸ் பண்றோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனிதா அர்ஜூன், முதல் மகன் பேரு கிருஷ்ணா அதனால இவருக்கு அர்ஜுன் அப்படினு பேரு வச்சோம். அப்படியா இப்ப அவங்க வரதில்லையா வருவாங்க நீங்க அவங்க மிஸ் பண்றதா சொன்னீங்கல்ல.

மேலும் சில பதிவுகள்