சூப்பரான அரட்டை :)

எல்லோரும் இங்க வாங்க அரட்டை அடிக்கலாம் :) அப்பாடா நானும் அரட்டை இழை துவங்கி எவ்ளோ நாள் ஆகுது வாங்க வாங்க சீக்கிறமா ;)

என்னமோ ஒரு பட்சி எட்டிப் பார்க்கச் சொல்லிச்சு. ;) சந்தோஷத்தோட பாயிண்ட் நோட்டட். ;) ரம்ஸ் சொன்னதையும்தான். ;) ம்.. மொத்தமுமே அழகுதான் ஆனால் தெற்குப் பகுதி கொள்ளை அழகு.
வெயில் அலர்ஜியானவங்க... சம்மர்ல வராதீங்க. என் முகத்தை இப்போ பார்த்தா... 'இளமை ரகசியம்' கேட்டவங்கல்லாம் திகைச்சுப் போவீங்க. இங்கு uv rays அதிகம். வெளிய போறப்ப சன் ப்ளாக் போடணும். தொப்பி போடணும். சன் ப்ளாக் ஒத்துக்காது என்றால் சம்மர் தவிர்த்து வருதல் உத்தமம்.

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள் சுவா, வழக்கம் போல லேட்டா வந்துட்டு இடம் கிடைக்காம நிக்கிறேன், ஆனாலும் கல்பூ முதல் சீட் புடிச்சு யாருக்கும் தெரியாம எனக்கு ஒரு இடம் புடிச்சு வெச்சிருக்காங்க, அப்படியே ரூட் பாத்து ஓட்டிட்டே இப்படிக்கா திரும்புங்க சுவா, உங்க பக்கத்தில ஒரு உருவம் உக்காந்திருகே அது நாந்தேன்.

அனைவருக்கும் காலைவணக்கம்;))

சீட் போட்டுட்டு எல்லாரோட பதிவையும் படிச்சேன், பச்சை பசேல்னு எந்த இடத்துக்கு போனாலும் எனக்கு ரொம்ம்ப பிடிக்கும்.
இமா வணக்கம்:))
நீங்க சொல்லியிருக்கிற புறஊதாக் கதிர் விஷயம் இங்கயும் (கோவை) இப்ப அதிகமாத்தேன் இருக்குங்க;( 2 நாள் வெளியில் வெயிலில் போயிட்டு வந்த உண்மை கலர் வெளிய வந்திடுதுங்க ;(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இமாம்மா தேங்க் யூ தேங்க் யூ :). ஹி ஹி குளிரிலும் நான் நடுங்குவேனே :(. எந்த மாதம் க்ளைமேட் ரொம்ப நல்லா இருக்கும் குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அருளு எப்பவும் இப்படி லேட்டா வந்தால் இப்படித்தான் :). சுவா பக்கத்துல நீங்க உட்கார்ந்திருப்பது சீட்டில் இல்லை என் மடியில் அருள் :). ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கலாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

காலை / இரவு வணக்கம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பறக்கும்/மிதக்கும் பஸ்சை யாரு ஓட்டறது கொஞ்சம் நிறுத்துங்க
நானும் வர்றேன்...:)
இந்தாங்க எல்லாருக்கும் அதிரசம் ,முறுக்கு எல்லாம் எடுங்க பஸ்ல சிந்தாம சாப்பிடணும்...ட்ரைவர் சீட்ல இருக்க ஸ்வர்ணாவுக்கு எடுத்து வைக்கிறேன் பஸ் நிக்கும்போது சாப்பிடுங்க...
பஸ்ஸை மெதுவா ஓட்டுங்க மெதுவடை சாப்பிடறோம்...சரியா?

எனக்கு முதல்ல ஹிமாலயாஸ் சுத்தி எல்லா இடமும் பாக்கணும்.
காஷ்மீர் பார்க்கணும்...இந்தியாலயே நிறைய பாக்கி இருக்கு..இந்தியால போற ,போன இடங்கள யாராச்சும் சொல்லுங்க சாப்பிட்டுகிட்டே
நான் போயி கட்டு சத்ம் ரெடி பண்ணிட்டு வர்றேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனி, இளா, காலை வணக்கம் :)

வனி, காலை வணக்கம் மட்டும் போட்டு எல்லாரையும் கெளப்பிட்டு நீங்க எங்கே எஸ்ஸாகுலாம்னு பார்க்கறீங்க.. இங்கேயே இருந்துட்டு போகனும் ஒரு அரை நாள். விட்டது யாரு உங்கள... சுவா.. வண்டிய வேகமா ஓட்டுங்கப்பா.. வனி, ஃபுட்போர்ட்ல இறங்க பார்க்குறாங்க..

இளா, வாங்கப்பா.. சீக்கிரம் ஏறுங்க. இங்கே உக்கார்ந்துக்கோங்க.. நல்லா வேடிக்கை பார்க்கலாம். அடாடா.. வரும்போதே அதிரசம், முறுக்கா.. சூப்பர்..சூப்பர்.. கொண்டாங்க..ரம்ஸ்.. பங்கு போட்டு குடுங்கப்பா.. டிரைவர் மேடத்துக்கு தராதீங்க.. வாசனைய மட்டும் காட்டுங்க. சாப்பிட கொடுத்தா அந்த மயக்கத்துலயே தூங்கி ஏடாகூடமா ஓட்ட போறாங்க.. கவிக்கு ஒரே ஒரு அதிரசம் போதும்.. அவங்களுக்கு இனிப்பு சுத்தமா பிடிக்காது ;) வனிக்கு, முறுக்கு முழுசா பிடிக்காது.. தூளா கொடுங்க ;)) அருள்..இன்னைக்கு விரதம்.. கண்ல கூட இதெல்லாம் பார்க்க மாட்டாங்க.. அவங்க பங்கும் என்கிட்ட தாங்க.. நான் பத்திரமா வச்சிருந்து கவரை மட்டும் அவங்க கிட்ட தரேன் ;) ஜெய்கிட்ட இந்த வாசனையெல்லாம் காட்டிடாதீங்க..அப்புறம் செம்ம கோவமாய்டுவாங்க.. எண்ணெய் வஸ்துவே பிடிக்காது அவங்களுக்கு. அவங்க பங்கையும் என்கிட்டயே தந்துடுங்க. தண்ணி மட்டும் கொடுங்க போதும்.

இளா, கட்டுசாதத்தோட உங்க கைவண்ணத்துல முந்திரி கொத்தும் கொஞ்சம் கொண்டு வாங்கப்பா.. என் கனவில் அடிக்கடி வருது. என்னைக்கு பண்ணுவேன்னு தெரியல.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இளா கட்டுசாதம் செய்து எடுத்துட்டு வரீங்களா டியட்டிங் வெர்ஷன் ப்ளீஸ் :)
காஷ்மீர் போனா நல்லா இருக்கும்ல இளா... இயற்கை அழகி கொட்டிக்கிடக்கும் இடமாச்சே. அங்கே போனால் எங்க இளாகிட்ட இருந்து கவிதையா கொட்டுமே! வாவ் நினைச்சு பார்த்தாலே சந்தோஷமா இருக்கே :)

கல்பூ எல்லாத்தையும் ஏதாவது சொல்லி நீங்களே அமுக்கிக்கற ப்ளானா? கவி தோழீசை எல்லாம் சந்திச்ச சந்தோஷத்தில் இனிப்பு சாப்பிடுவா :). காங்கோ ஜூசை மட்டும் நீங்களே குடிங்க எங்களுக்கு எல்லாம் பங்கு வேணவே வேணாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, வாங்க..வாங்க... நடுவே தண்ணி குடிக்க போகனும்னு இறங்கினீங்க.. எவ்ளோ நேரம் பஸ்ஸை கிடப்புல போடுறது..காங்கோ ஜூஸ் கொடுக்க மட்டும் தான் கை வரும். குடிக்க வாய் வராது கவி B).. எங்கே இன்னும் நம்மாட்களை காணலை.. இதுக்க்கு தான் வண்டியை எங்கேயும் நிறுத்த கூடாதுன்னு சொல்றது.. அங்கங்கே பராக்கு பார்த்துட்டு நின்னுட்டு..சே..சே...சின்னபுள்ளைங்க மாதிரி..அதா.. அங்கே பாருங்க.. ஒரு வளையல் கடைல மயிலை கைல புடிச்சுட்டு அதே கலர்ல வளையல் வேணும்னு தேடிட்டு இருக்காங்க அருளும், ஜெய்யும்...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இமாம்மா சொல்லீட்டீங்களோ வந்துடுறோம் பாருங்க ஒரு படையே கிளம்பிட்டு இருக்கோம் அங்க எதுக்கும் உஷாரா இருங்கம்மா :)

வனி நாங்க கிளம்பினதும் வந்து பாத்தீங்களா போய்ட்டாங்களா இல்லாயான்னு ;)மாலேக்கும் கும்பலா கிளம்பிட்டு இருக்கோம் ரெடியா இருங்க கண்டிப்பா மீன் வருவல் சாப்பிடவே வருவோம் ;)

இளா அச்சச்சோ என்னை போய் ட்ரைவர் சீட்டுக உக்கார வச்சிட்டீங்களே உங்களைலாம் நினைச்சா ரொம்ப பரிதாபமா இருக்குங்க ;) எனக்கு சைக்கிளை தவிர வேர எதுவும் ஓட்ட தெரியாதுங்கோ ;)
நான்ந்தான் அந்த ஜன்னலோரம் கவிக்கும்,கல்பூவுக்கு இடையில உக்காந்துருக்கேனே நீங்க பாக்கலயா நாங்களே மூனு பேரும் இடிச்சிக்கிட்டு உக்காந்துருக்கோம் இதுல அருள் வேர மடியில வந்து உக்காந்துட்டாங்க சரி எவ்வளவோ தாங்கிட்டோம் நம்ம அருளை தாங்க மாட்டோமா என்ன கவி நான் சொல்ரது சரிதானே ;)

அருள் வாங்க வாங்க நீங்க இல்லாம டூரா :) வரும்போது ராகி பணியாரம் மறக்காம கொண்டாங்க ( நாங்க சாப்பாட்டுல கண்ணும் கருத்துமா இருப்போம்ல)

கல்பூ டூர்ல எல்லோர் பங்கையும் பத்திரமா பாதுகாக்கும் வேலையா உங்களுக்கு சொல்லவே இல்லை ;) எல்லாம் சரி நீங்க என்ன கொண்டாறீங்க முதல்ல அத சொல்லுங்க (தயவு செய்து ஃப்ர்ட்ஜ்ன்னு மட்டும் சொல்லிபுடாதிங்கோ) ;-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்