hi friends

hi friends,
enaku yarume replay pannala

என்ன கேள்வி கேட்டீங்கன்னு தெரியலியே! கேள்விக்கு பதில் வரலேன்னா தோழிகளுக்கு பதில் தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது உங்கள் கேள்வியை கவனிக்காமல் விட்டிருக்கலாம். இன்னொரு விஷயம் தமிங்கிலத்தில் வரும் பதிவுகளை பலரும் படிப்பது கூட கிடையாது. உங்கள் கேள்வியை தமிழில் கேளுங்கள். கீழே எழுத்துதவி லின்க் இருக்கிறது. அதை பயன் படுத்தி தமிழில் கேளுங்கள்.

இன்னும் ஒரு விஷயம். உங்கள் கேள்விக்கு பதில் வரவில்லை என்றால் மீண்டும் அங்கேயே ஒரு முறை கேளுங்கள். தனித்தனி இழைகள் வேண்டாமே ப்ளீஸ்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு தோழர்களே,
நான் புதுசாக சேர்ந்து இருக்கின்றேன், கவி அக்கா எனக்கு வயது 28,எனக்கு கல்யானம் முடிந்து விட்டது எனது அக்கா விற்க்கு இன்னம் கல்யானம் நடக்கவில்லை அக்கா முகத்தில, உடம்புல,கழுத்துல எல்லாம் கருப்பு கருப்பா மார்க்கு இருக்கு அதுக்கு ஏதாவுது பன்ன முடியுமா ப்ள்ச் அவ சிவப்பா இருப்பா சட்டை போட்டால் முதுகில் எல்லாம் அசிங்கமா தெரியும். ஆயில்மன்ட் போட்டும் சரியாகல எனக்கு பதில் அனுப்புங்க

சங்கரேஸ்வரி முதல் முயற்சியிலேயே அழகா தமிழில் எழுதியிருக்கீங்க. அதற்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

தோல் மருத்துவரை பார்த்தீர்களா? இதுபோன்ற விஷயங்களுக்கு மருத்துவரிடம் காண்பிப்பதே நல்லது என்பது என் எண்ணம். ஏன்னா இப்படி கறுப்பு மார்க்குகள் நம் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல இருந்தாலும் மருத்துவர்களால்தான் அதை சரியாக என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க முடியும்.

சோப்புகளை தவிர்த்து பயத்தம் மாவு தேய்த்து குளிக்க சொல்லுங்கள். சோப்பில் உள்ள கெமிக்கல்கள் ஒத்துக் கொள்ளாமல் இருந்தாலும் இது போல் வரலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

thanks, docter இது ஒரு வகையான முகப்பரு சொன்னாங்க,cream use பன்னா அந்த தலும்பு போகல எதாவுது நாட்டு வைத்தியம் இருக்கா

மேலும் சில பதிவுகள்