பொடுகு பிரச்சனை.....

தோழிகளே வணக்கம்.
எனக்கு நிரைய பொடுகு(dandruff) உள்ளது.தயவு செய்து ஆலோசனை கூரவும்......என்னுடைய வயது 30 க்கும் குறைவு....ஹெல்ப் மீ......

சிகைக்காய் வாங்கி அதனுடன் வெந்தயம், பாசிப்பயரு சேர்த்து மெஷின்-ல் குடுத்து அரைத்து அதேயே யூஸ் பண்ணுங்க.. உங்களுக்கு பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்.

தலைக்கு ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் மசாஜ் குடுங்க.பொடுகு பிரச்சனை இருந்த இடம் இல்லாம போய்டும்.

"எல்லாம் நன்மைக்கே"

உஷா
வேப்பம்பூவை நல்லெண்ணையில் காய்த்து தேய்க்கவும்.

உஷா லெமன் ஜுஸை தலை முடியின் வேர்கால்களில் படும்படி தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசிவிடவும்.மாதம் இருமுறை செய்யவும். தலையணை ,சீப்பு, டவல் இவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.பொடுகு இருந்த இடமே இல்லாமல் போயிடும்.

Bharathi

தோழி உஷா எதற்கும் ஒருமுறை மருத்தவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.
மருத்துவ ஆலோசனையின் படி நாங்கள் பயன்படுத்திய மருந்து candid tv dandruff shampoo..
பொடுகு தலைபூராவும் இருக்குமோ எனநினைத்து அனைத்து இடங்களிலும் போடவேண்டாம். பொடுகு ஓரிரண்டு இடங்களில் உருவாகி அனைத்து இடங்களிலும் உதிந்து இருக்கும். அதனால் எந்த இடத்தில் தோன்றீயிருக்கிறது எனப்பார்த்து இந்த ஷாம்பூவை போட்டு, 5 அல்லது 10 நிமிடங்கள் வைத்திருந்துவிட்டு கழுவிவிடவும். இது நறுமணம் வீசும் ஷாம்பூ அல்ல.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

thanks தோழிகளே.....

மேலும் சில பதிவுகள்