பீஃப் பக்கோடா

தேதி: January 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

பீஃப் - கால் கிலோ
முட்டை - 2
தயிர் - அரை கப்
கடலை மாவு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சிகப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை


 

முதலில் கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் அரை தேக்கரண்டி மிளகு தூள், அரை தேக்கரண்டி சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் முழுவதும் வற்றிய பின். ஆற வைத்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த இறைச்சியில் தயிர், கடலை மாவு, முட்டை, உப்பு, சிகப்பு கலர் பவுடர், மீதம் உள்ள தூள் வகைகளைச் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
அதில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிச் சேர்த்து பிசையவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடா போல் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான மொறு மொறுப்பான பீஃப் பக்கோடா தயார். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹலிலா அக்கா எங்க தாத்தாவோட ரொம்ப ரொப ரொம்ப பேவரிட் ரெசிப்பி அக்கா இது பட் நா செஞ்சு தான் ரொம்ப நாள் ஆய்டுசு இந்த வாரம் செய்துடுரேன் அக்கா நல்ல குறிப்பு அக்கா செம கலக்கல் ரெசிபி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரொம்ப ந‌ல்லா இருக்கு,நாகூர்ல இது ரொம்ப famous ஆச்சே!

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப சூப்பரா இருக்கு...

அவ்வளவும் எனக்கு மட்டும்தான்...

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி வருகைக்கும்,பதிவிர்க்கும் ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

முஹ்சினா வருகைக்கும்,பதிவிர்க்கும் ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

fero உங்களுக்கு இல்லாததா அப்படியே எடுத்துக்குங்க. வருகைக்கும்,பதிவிர்க்கும் ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நாகூர்ல ரகுப் கடைதான சொல்லுரீங்க