அரியதரம்

தேதி: January 26, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

வெள்ளைப் பச்சை அரிசி - 500 கிராம்
சிவப்பு பச்சை அரிசி - 175 கிராம்
சீனி - 500 கிராம்
அவித்த மைதா மாவு - ஒரு கைப்பிடி அளவு
அரிசிக் குறுணல் - அரை கப்
சுடுநீர் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் இரண்டு அரிசியையும் 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
பின்பு அரிசியில் நீரை வடித்து இடிக்கவும் அல்லது கிரைண்டரில் அரைக்கவும். அரைத்த மாவை சலிக்கவும். 2 அல்லது 3 முறை அரைத்துச் சலிக்கவும். அதில் வரும் சிறு குறுணலை அரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்தமாவு, எடுத்து வைத்துள்ள குறுணல், சீனி, அவித்த மைதா மாவு, ஒரு மேசைக்கரண்டி எண்ணெய், சுடுநீர் சேர்த்து குழைக்கவும்.
பின்பு அப்பாத்திரத்தை காற்று உள்ளே புகாதவாறு நன்றாக மூடி 4 மணிநேரம் வைக்கவும்.
மாவை எடுத்து அளவான உருண்டைகளாக்கி படத்தில் உள்ளது போல் உருண்டைகளை இலேசாக அமர்த்தவும்.
வாணலியை எண்ணெயை விட்டு சூடாக்கி, அமர்த்திய உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பொரிக்கும் போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து பொரிக்கவும்.
சுவையான அரியதரம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது யார் அரியதிரம் போட்டிருக்கிறது என்று பார்த்தேன். :) கட்டாயம் உங்கள் முறையில் செய்து பார்ப்பேன் வத்சலா.

‍- இமா க்றிஸ்

நல்லா இருக்கு . வாழ்த்துக்கள்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

வத்சலா.. நலமா இருக்கீங்களா?? 3 வருடம் ஆயிடுச்சோ உங்களை பார்த்து!!! :) மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. அருமையான குறிப்பு. செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி. புதிய கடவுச்சொல் கிடைத்தது. மிக்க நன்றி.

இமா, இந்த முறையில் செய்து பார்த்து சொல்லுங்கள்.

நன்றி fero

வனிதா நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமா? ஆம் நீண்டகாலம் தான். எங்கே நேரங்கள் கிடைப்பது குறைவு. இந்த முறையில் செய்து பார்த்து சொல்லுங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வத்சலா அக்கா அரியதரம் டேஸ்டி குறிப்பு சோ யம்மி டிஷ் அவசியமா நேரம் கிடைக்கும் போது ட்ரை பன்ட்ரேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வத்சலா அரியதரம் ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க.வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நல்ல குறிப்பு, விரைவில் செய்து பாக்குறேன். வாழ்த்துக்கள்!

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அரியதரம் புதுசா இருக்கு இப்போ தான் கேள்விப்படுறேன்.. செய்ய ரொம்ப ஈஸின்னு நினைக்கிறேன்.. நிச்சயம் செய்துபார்க்கிறேன்.. நன்றி வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அரிய‌த‌ர‌ம் - பேரும், குறிப்பும் புதுசா இருக்கு வ‌த்ச‌லா! அருமை!! நேரம் கிடைக்கும்போது கட்டாயம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்க‌ள்!

அன்புடன்
சுஸ்ரீ

அரியதரம் ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க வத்சலா.//சிகப்பு அரிசி//இந்தியா போகும்போதுதான் செய்துபார்கனும்.வாழ்த்துக்கள் :)

Kalai

நல்ல குறிப்பு,அவசியம் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்க‌ள்!

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கனிமொழி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

ஹலிலா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

அனுஷ்யா உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

ரேவுதய் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

கலா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

முசி நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நல்லா இருக்கு சிஸ்டர்.... செய்து பாத்துட்டு சொல்றேன்..... உங்க அவன் சிக்கன் ரைஸ் ரெசிபி பார்த்தேன்... அருமையா இருக்கு.... அதில் சிக்கனை 200f வைக்க சொல்லிருக்கீங்க. ரைஸயும் அதே அளவு fல் தான் வைக்கனுமா? இந்த sunday செய்யலான்னு நினைக்கிறேன் அதனால உங்க பதில சீக்கிரம் எதிர்பாக்கிறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா