ஆட்டு கறி குழம்பு

தேதி: September 26, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

ஆட்டுக் கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 இணுக்கு
இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மல்டி பர்பஸ் கறி மசாலா பொடி - 2 ஸ்பூன்
தேங்காய் - 1/2மூடி
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 2
கிராம்பு - 2


 

கறியை கழுவி அதில் மல்டி பர்பஸ் மசாலா பொடி,இஞ்சி பூண்டு விழுது,உப்பு,கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு நறுக்கிய தக்காளி,வெங்காயம் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் பட்டை
தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் போடவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்தூள் போடவும்.
கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
பின் பிரட்டி வைத்த கறியை சேர்த்து கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட் வைக்கவும்.
2விசில் வந்ததும் திறந்து அரைத்த தேங்காய்விழுது சேர்த்து மூடி மீண்டும் ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
பின் இறக்கி மல்லிதழை தூவி பறிமாறவும்.


தேவைப்பட்டால் தேங்காய் சேர்க்கும் போது நறுக்கிய உருளைகிழங்கு சேர்த்து வேகவிடலாம்.

மேலும் சில குறிப்புகள்