கௌரி கம் பெண்டன்ட் (Kauri Gum Pendant)

தேதி: January 30, 2013

5
Average: 4.5 (11 votes)

அவசரப்படாமல் மிகவும் பொறுமையாகவும், கவனமாகவும் செய்ய வேண்டிய வேலை இது. நிறைய நேரம் பிடிக்கும். ஐந்து ஆறு மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேல் கூட ஆகும். வேலையை இடையில் நிறுத்துவதானால் கம், பேப்பர் இரண்டையும் உலர்த்தி வைத்துவிட்டு மீண்டும் சில நாட்கள் கழித்து கூட வேலையைத் தொடரலாம். கம் தரமானதாக இருந்தால் கழிவு அதிகம் இராது அல்லது ஒரு பெரிய துண்டு கம்மிலிருந்து கழிவு போக சின்னதாக ஒரு பெண்டன்ட் மட்டுமே செய்ய இயலும்.

 

கௌரி கம் (Kauri Gum)
சன்னமான வெட் சான்ட் பேப்பர் (Thin Wet Sand Paper)
ப்ராசோ மெட்டல் பாலிஷ்
ஆலிவ் ஆயில்
துடைப்பதற்கு மெல்லிய பழந்துணிகள்
டிஸ்போசபிள் க்ளவ்ஸ்
பெரிய ஊசி
மெழுகுவர்த்தி
பெண்டன்ட் பெய்ல்

 

கம்மை தூசு போக நீரில் கழுவி எடுக்கவும். தேவையானால் மெல்லிய ப்ரஷ் பயன்படுத்தலாம். கம் வடிவத்திற்கேற்ப என்ன வடிவில் பெண்டன்ட் செய்வதென தீர்மானிக்கலாம். (உதாரணத்திற்கு படத்திலுள்ள 1 - ம் வடிவ கம்மிலிருந்து 2 - ம் வடிவம் (டயமண்ட் வடிவம்) வெட்டலாம். தட்டையாகத் தெரியும் பகுதி பின்பக்கமாகவும், மீதியை முன்பக்கமாகவும் இருப்பது போல் வடிவமைக்கும் முறை இங்கே காட்டப்பட்டுள்ளது. இம்முறையில் பெண்டன்ட்டின் பின்புறத்தை தேய்க்காமல் முன்பக்கம் மட்டும் தேய்த்து பாலிஷ் செய்ய வேண்டும். பின்பக்கம் உள்ள கோடுகள் வெளிச்சதைத் தெறிக்கும் விதம் இதற்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமையும்.
வடிவத்தைத் தீர்மானித்த பின் கழுவி வைத்த கம் துண்டு, சான்ட் பேப்பர், ஒரு பாத்திரத்தில் நீர் சேகரித்துக்கொள்ளவும். ஒரு பழைய டவலை மடியில் விரித்துக் கொண்டு, க்ளவ் அணிந்துகொண்டு TV முன் உட்கார்ந்தால் TV பார்த்துக் கொண்டே மெதுவாக தேய்க்கலாம்.
ஒவ்வொரு முறையும் கம்மையும், சான்ட் பேப்பரையும் நனைத்துவிட்டு தேய்க்க ஆரம்பிக்க வேண்டும். அடிக்கடி இரண்டையும் நனைத்து நனைத்து தேவையான வடிவம் கிடைக்கும் வரை தேய்க்கவும். அழுத்தித் தேய்க்க வேண்டியதில்லை. (முக்கியம் - ஃபைன் சான்ட் பேப்பர் ( Fine Sand Paper) மட்டுமே பயன்படுத்த வேண்டும்).
தேவையான வடிவம் கிடைத்ததும் ஒரு முறை கழுவித் துடைத்துவிட்டு ப்ராசோ பூசி மெல்லிய பழந்துணியால் மினுக்கவும். (ப்ராசோவுக்குப் பதில் Mr. Muscle Cream Clenser பயன்படுத்தலாம்).
இதன் பிறகு இடைவெளிகளில் தங்கியிருக்கும் ப்ராசோ போகக் கழுவி துடைக்கவும். ஒரு மெல்லிய துணியில் சில துளிகள் ஆலிவ் ஆயில் தொட்டு சுற்றிலும் தேய்க்கவும். எண்ணெய் இல்லாமல் முழுவதாகத் துடைத்து பளபளப்பாக்கவும்.
அடுத்து, செய்து வைத்திருக்கும் பெண்டன்ட் & பெய்ல் இரண்டையும் ஒப்பிட்டு பெண்டன்ட்டில் எங்கு துளை செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும்.
ஊசியை சுடரில் காட்டி, சூடானதும் கரியைத் துடைத்துக் கொண்டு கம்மில் சரியான இடத்தில் வைத்து இறக்கவும். அழுத்த வேண்டாம். ஊசி தானாக இறங்க வேண்டும். விரைவாக அதே சமயம் கவனமாக மீண்டும் ஊசியை வெளியே எடுத்துவிடவேண்டும். இல்லாவிட்டால் கம் இறுகி ஊசி உள்ளே மாட்டிவிடும். சரியான அளவு துளை கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் இதுபோல் செய்யவும். துளைகளின் அளவைப் பெரித்தாக்க வேண்டி இருந்தால் சூடான ஊசியை துளையில் வைத்து மெதுவே வட்டவடிவில் அசைத்தால் துளை பெரிதாகும்.
பின்புறமும் துளையைச் சரிபார்த்துக் கொண்டு பெய்லை நுழைத்து அழுத்திவிடவும். குரடு பயன்படுத்துவதைக் கூடுமானவரை தவிர்க்கவும். கம் நொருங்கக்கூடும்.
இனி சங்கிலியில் மாட்டி அழகாக அணிந்துகொள்ளலாம். கம் பெண்டன்ட்களை பெய்ல் வைக்காமல் நேரடியாக கருப்பு கயிற்றில் கட்டியும் அணியலாம். பெண்டன்ட்டின் பின் பக்கம் தட்டையாக இல்லாமல் தேய்த்தும் எடுக்கலாம். பளபளவென்று கண்ணாடி மணி போல இருக்கும். ஆனால் கௌரி கம் என்பதற்கான சிறப்பை உணர முடியாதுபோய்விடும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெண்டன் ரொம்ப அழகா இருக்கு,செய்முறை விளக்கமும் சூப்பர்,கம் பற்றிய சுருக்கமும் நன்று.

அம்மா அழகோ அழகு சான்சே இல்லை பென்டன்ட் சூப்பர்.. உங்கள் கலை திறனே தனி போங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாவ்.! ரொம்ப அழகா இருக்குங்க, :-) சூப்பர்ப் , வாழ்த்துக்கள்

நட்புடன்
குணா

கம்ல பெண்டண்ட்டா ரொம்ப அழகா இருக்கு பார்க்க., சூப்பர் சூப்பர். எனக்கு அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு.

மிக பொருமையான,அழகான கை வேலை,சூப்பர்.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

no words :). Great job!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இம்ஸ்

அடடடா .. அருமையா இருக்கு..
பார்க்க சிம்ப்ளி சூப்பர்ப் .. எத்தனை உழைப்பு இதில் உள்ளது.? . கிரேட் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அழகோ அழகு இமா,
பொறுமையின் இமயம் நீங்ககிறது மீண்டும் ஒரு முறை நிரூபணம்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Wow....Keep rocking...

//வடிவத்தைத் தீர்மானித்த பின் கழுவி வைத்த கம் துண்டு, சான்ட் பேப்பர், ஒரு பாத்திரத்தில் நீர் சேகரித்துக்கொள்ளவும். ஒரு பழைய டவலை மடியில் விரித்துக் கொண்டு, க்ளவ் அணிந்துகொண்டு TV முன் உட்கார்ந்தால் TV பார்த்துக் கொண்டே மெதுவாக தேய்க்கலாம்.

Super Idea...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

வாவ்... மார்வெலஸ் வொர்க்!!

உங்க பொறுமைக்கும், திறமைக்கும் நிகர் நீங்கள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிருக்கிங்க... வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

இமா ஆன்டி பென்டன்ட் ரொம்ப அழகா இருக்கு.பொறுமையா,நேர்த்தியா செய்திருக்கீங்க.கம் பற்றிய குறிப்பும் அருமை.வாழ்த்துக்கள் :)

Kalai

ரொம்ப அழகா இருக்குங்க, வாழ்த்துக்கள்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

இமா சிம்ப்ளி சூப்ப்ர்ப்!

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

முதலாவதாகக் கருத்துச் சொல்லிய வனிக்கும், பலகாலம் கழித்துக் காணும் ரேணுகாவுக்கும், சகோதரிகள் ரம்ஸ், மூசி, ஜெயந்தி, கார்த்திகா, கலா, சுஸ்ரீ, ராஜி செந்தில், அருட்செல்விக்கும்... ஓட்டுப் போட்டவர்களுக்கும் என் அன்பு நன்றிகள். :)

குணா... இது பசங்களும் அணியலாம். என்ன, இப்பிடி ஸ்டைலாக இல்லாம கோணாமாணா ஷேப்ல போடுவாங்க. அனுப்பிவைக்கட்டா! :)

@ ரேவதி, லாவண்யா & தேவி... இது இங்கு விசேஷம். தேய்க்காமல் அப்படியே கூட அணிந்திருப்பார்கள். இங்கு காட்டியிருப்பது ஒரு சாதாரணமான சிறிய வேலை மட்டுமே. ஆனால் கௌரி கம் மியூசியம் போனீர்களானால் அங்கு இருக்கும் செதுக்குவேலைகள் பார்த்து அசந்துபோவீர்கள்.

@ தேவி... //மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்// ;) நன்றி, அது ஒரு அன்பளிப்பு. என்னை வளர்த்த பாட்டி எப்பொழுதும் தீப்பெட்டிகளுக்கு கவர் போட்டு வைத்திருப்பார்கள். (மெல்லிய தகரத்தில் விதம்விதமாக வைத்திருப்பார். அப்போ அவை விளம்பரங்களைத்தாங்கி வந்தன.) இதைப் பார்க்கும்போதெல்லாம் பாட்டி ஞாபகம் வரும். :)

‍- இமா க்றிஸ்

கம்ம எவ்வளவு அழகா வடிவம் கொடுத்து செய்து இருக்கீங்க. ரொம்ப பொறுமை வேணும். இந்த குறிப்பு மூலமா கெளரி கம் பற்றிய புதுவிஷயத்தை தெரிஞ்சுக்க முடிஞ்சது நன்றி இமாம்மா. வாழ்த்துக்கள் அழகான படைப்புக்கு:)

//கெளரி கம் பற்றிய புதுவிஷயத்தை தெரிஞ்சுக்க முடிஞ்சது// சந்தோஷம் வினோஜா. கருத்துக்கு என் அன்பு நன்றிகள்.

‍- இமா க்றிஸ்