வெஜ் ரோல்

தேதி: September 26, 2006

பரிமாறும் அளவு: 6நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 250கிராம்
கோஸ் - 250 கிராம்
பீன்ஸ் - 250 கிராம்
உப்பு - 1 ஸ்பூன்
மைதா - 500 கிராம்
சோள மாவு - 250 கிராம்
அஜினோமோட்டோ - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 1/2 லிட்டர்


 

மைதாவுடன் சோள மாவு சேர்த்து சற்று நீர்த்த பதமாக கரைத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை நீளவாக்கில் மெலிதாக அரிந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
காய்ந்ததும் கேரட்,பீன்ஸ்,கோஸ் இவற்றை ஒவ்வொன்றாக ஒரு,ஒரு நிமிடம் வதக்கவும்.
அஜினோமோட்டோவை சேர்க்கவும்.
உப்பு,மிளகு தூள் தூவி இறக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி உடனே எடுத்து விடவும்.
அந்த தோசையின் மேல் வதக்கிய காய் கலவையை இரண்டு ஸ்பூன் வைத்துலேசாக ஒரு தடவை உருட்டவும்.
கரைத்த மைதாவை இரண்டு ஓரத்திலும் தடவி நடுப்பகுதியை நோக்கி மடிக்கவும்.
மீண்டும் உருளை போல் உருட்டி ஒரத்தில் மைதா பேஸ்ட் தடவி ஒட்டவும்.
இந்த வெஜ் ரோலை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் பறிமாறவும்.


காய்களை அதிக நேரம் வதக்ககூடது. பச்சையாக இருந்தாலும்,எண்ணெயில் பொரிக்கும் போது வெந்து சுவையாக இருக்கும்.
பெரியவர்களுக்கு தயார் செய்யும்போது மிளகாய் சாஸ் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான்வெஜ் ரோல்(nems) எப்படி செய்வது?

உடல் நலம் சரியில்லாததால் பதில் அளிக்க முடியவில்லை.விரைவில் மட்டன் ரோல் ,சிக்கன் ரோல் செய்முறை எழுதுகிறேன்.

நன்றி