முதுமையை போற்றுவோம்

முதியவர்களை மனம் கோணாமல் பார்த்துக் கொள்வது என்பது ஒரு கலை. குழந்தைகளை கவனிப்பதை விட அதிகம் பொறுமை வேண்டும். நாம் சாதாரணமாக சொல்லும் ஒரு வார்த்தை கூட அவர்கள் பார்வையில் தவறாக தோன்றும். இதற்கு நாம் அவர்களை குறை சொல்ல முடியாது. நாளை நமக்கு வயதாகும் போது நம் மனநிலையும் அப்படித்தான் இருக்கும்.

வயதானவர்களை எப்படி முகம் கோணாமல் கவனித்துக் கொள்ளுவதுன்னு நம் அனுபவங்களில் இருந்தோ அல்லது நாம் பார்த்த படித்த விஷயங்களில் இருந்தும் இங்கே பேசலாமே. எல்லோரும் உங்கள் கருத்தை வந்து சொல்லுங்கள் ப்ளீஸ். பெரியவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன பிள்ளைகள் கவனிக்க மறக்கும் விஷயங்கள் என்ன என்பதை அறுசுவை பார்க்கும் பெரியவர்களும் வந்து சொன்னால் இளம்தலைமுறையினர் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

வாங்க நட்புகளே வந்து உங்கள் கருத்தை சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா... நல்ல விஷயம். :) இந்த வயதில் நாம எல்லாரும் யோசிக்க வேண்டிய விஷயம்.

முதல்ல நம்ம வீட்டு பெரியவங்களோட மனநிலையை புரிஞ்சுக்கணும். ஒரு சில பெரியவர்கள் இருக்காங்க... தன்னை பிள்ளைகள் கையில் தாங்கணும்னு நினைப்பாங்க. ஒரு சிலர் நேர் எதிர். தனக்கு வயதானாலும் என்னால எல்லாம் முடியும், என்னை நான் பார்த்துக்குவேன்னு நினைப்பாங்க. உதாரணமா எங்க தாத்தாவை (அம்மாவின் அப்பா) சொல்வேன். அவருக்கு தன்னை யாரும் கையை பிடிச்சு நடக்க வெச்சா பிடிக்காது. ப்ரெச்டீஜ் இஷு. கோவம் வரும். தன்னால் முடியவில்லை, என தன் இயலாமையை குத்தி காட்டுவதாக நினைப்பார். இதே என் அப்பாவின் அப்பா ஒரு ரகம். அவருக்கு தனக்கு யாரும் உதவவும் வேண்டாம், அதே சமயம் தன் இயலாமையை ஒப்புக்கொள்ளவும் செய்வார். இந்த பேசிக் குணத்தை நாம் கவனிச்சாலே புரிஞ்சுடும்... இதை தெரிஞ்சுக்குட்டாலே அவங்களை மனசு கோனாம பார்த்துக்க பாதி வழி கிடைச்ச மாதிரி.

இன்னும் நிறைய பேசலாம்... சமையல் முடிச்சுட்டு வரேன்.:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி மிக உபயோகமான இழையை ஆரம்பிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்:)

மனிதனாக பிறந்த அனைவரும் கடக்கவேண்டிய பாதை இது. ஆனால் அதை மறந்துவிட்டு பெரியவர்களை, உதாசீனப்படுத்தியும், கோபபடுத்தவும் முடிகிறது..
முதுமை இந்த வார்த்தையே சிலரை அச்சப்படவும் கோபம்கொள்ளவும் செய்யும். சிலரை புன்முறுவல் பூக்கச்செய்யும்.
முதுமையில் வரும் சுருக்கங்கள் அனைத்தும் அவர்களின் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும். "சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுனு" சொல்வாங்க, எந்த விஷயம்னாலும் பெரியவங்க ஆலோசனை கேட்டு நடக்கணும்க்கிறதே இதற்கு விளக்கம்.
என் தந்தையின் அப்பா 96 வயதுவரை நன்கு புத்தங்கள் படிக்கவும், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதிலும் வல்லவர்.
சிறுமணித்துளி நேரம் கூட விரயம் செய்ய மாட்டார். மிகுந்த உழைப்பாளி.
என்னுடைய சிறு வயது தோழர் என கூறலாம். மாலை பள்ளி முடிந்து வந்தவுடன் அவரிடம் கதைகேட்டு நச்சரிப்பேன். அவரின் பொக்கைவாய் சிரிப்பில் அகமகிழ்து போவேன்.
ஒருமுறை எங்கவீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் அய்யா என்னது பல்லெல்லாம் போயி தடி போட்டீங்களாட்ட இருக்கு என ஒருவித கேலியும் கிண்டலுமாக கூறினார்.
அதற்கு என் தாத்தா கூறிய பதில் பசுமரத்தாணி போல் இன்னும் பதிந்திருக்கிறது.
அந்த வார்த்தை
" குருத்தோலை பழுப்போலையை பார்த்து சிரிக்கிது, இந்த குருத்து ஓலை பழுப்போலை ஆகிறதுக்கு எத்தனை நாள் ஆகும்".
எவ்வளவு ஆழமான உண்மையான வார்த்தைகள் அவை.
சில பேர் சாலையோரங்கலில் செல்லும் பெரியவர்களை ஏய் பெருசு ஓரமா போய்யா என எவ்வளவு கீழ்த்தரமாக கூறுகினறர். அந்த வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் மனம் வேதனை அடயும், மேற்கூரிய வார்த்தைகள் மனதில் உருண்டோடும்.

இது என்னுடைய இந்த இழைக்கான அறிமுக உரையே கவி, இன்னும் பல பதிவுகளில் இதை பற்றிய அலசல்களுக்கு வருவோம் கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி நீங்க சொல்றது 100% சரி. அவர்களின் குணம் அறிந்து நாம எப்படி அட்ஜஸ்ட் பண்ணி போகப்போறோம் அப்படீங்கறது முக்கியம். நம் எண்ண ஓட்டத்துக்கு அவர்களை கொண்டு வர முடியாது. நாமதான் கொஞ்சம் அவர்களுக்காக இறங்கி வர வேண்டி இருக்கும். இதில் பிரச்சினை வரும் போதுதான் எல்லாமே குழப்பமாகிடுது :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அருள் பழுத்த ஓலை பச்சை ஓலை உதாரணம் சூப்பர். நாளை நமக்கும் வயதாகும்னு நினைச்சாலே பெரியவர்கலை மதிக்கத் துவங்குவோம். இன்னும் சொல்லுங்க அருள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹெல்லோ அருள் உங்க கிட்ட இது தான் முதல் முறையா பேசுரேன்.உங்கள் எடுத்துக்காட்டு சூப்பர்.ரொம்ப நல்லா இருக்கு வார்த்தைகள்

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

hi.kavi madam nan menaka. ungal topic romba nalla irrukku enakku 2 brothers& 2 sisters nan kadaikutty.periya anna oru vibathil illanthuvittom we all are married my dady is 74yrs old and my mom is 62 yrs old nan amma veetil lease kuduthu irrukken ennudaiya chinna annanum same compoundla irrukkanga en annan en parents kitta pessakumatenengiran.avannukku nan veetai vitttu pokanum engiran nan poka muyarchikiren sontha veedu vanga loan try pannurom ennakku 2 daughters en husband own business pannuranga en annan manathil whole property ennakku en mummy kuduthuruvangannu bhayam truly say's that en kanavar earn pannrathuthan ennakku santhosam parents manasa purithukoolama he is reacting like that.I believe in lord jesus he will so to all about my truthfulness then he will realise about me and my husband

god is our sheid

மிக்க நன்றி பிரியங்கா!!
சிறுவயதில நாம கத்துக்கிற விஷயங்கள் அப்படியே நமக்குள்ள இறங்கிடும். அதுபோலதான் இந்த எடுத்துக்காட்டும். எனக்கு மறக்கவே முடியாது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல இழை கவிசிவா! திருமணமான புதிதில் என் மாமியின் மாமியை நான் பாட்டி என கூப்பிட்டேன் அதற்கு அவங்க கோபித்துக்கொண்டு நா எங்கே பாட்டி ஆனேன்? ஆத்தான்னு கூப்பிடு. பாட்டியாமா பாட்டி? என்றார். எனக்கு கிராமத்து கருத்துக்களெல்லாம் புரியல. அவங்க வயசு அப்போ 80 இருக்கும். நான் சிரிச்சிடே சரிங்க அக்கா என்றேன். அவங்க முகத்தில் தெரிந்த வெட்கம் அடடே. அதன் பிறகு நான் ஊருக்கு நான் ஊருக்கு போகும்போதெல்லாம் அவங்களை அக்கான்னு கூப்பிட்டு சிரிக்க வைப்பேன். வாசனை சோப், அவங்களுக்கு பிடித்த தின்பண்டம் என வாங்கிகொடுத்து மகிழ்வேன். லோக்கல் பாலிடிக்ஸ்ஸில் அவங்களுக்கு அதெல்லாம் கிடைக்காது அப்போ.

மிகுந்த மக்கள் தொகைகொண்ட நம் நாட்டில் பேச ஆளில்லாமல் கடைசி காலத்தை தனிமையில் கழித்து இறப்போர் அதிகம்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நல்ல தலைப்பு.பெரியவங்ககிட்ட உட்கார்ந்து பேசினாலே போதும்,இந்த அவசர உலகத்துல அதுக்கெல்லாம் யாருக்கும் நேரம் இல்லை.சமீபகாலமா மனசை கஷ்டபடுத்துற ஒரு விஷயம்,சினிமாவில் காமெடி என்ற பெயரில் அப்பாக்களை அவன், இவன் என்றும் இன்னும் என்னென்னவோ பேரு வச்சு கூப்பிடுறாங்க,வளரும் தலைமுறைக்கு இவங்க இது தான் கத்து குடுக்கறாங்க.பெரியவங்க எதிர்பார்ப்பது நம்ம பிள்ளைகள் நம்ம கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லணும் ,அவங்க உடல்நலத்தை விசாரிக்கணும்,வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரும் மகன் தான் சாப்பிடுவதற்க்கு முன்னால் நீங்க சாப்பிட்டிங்களா?ன்னு ஒரு வார்த்தை கேட்டாலே அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிடும்.

மேலும் சில பதிவுகள்