சர்க்கரைவள்ளிக்கிழங்கு பர்ஃபி

தேதி: February 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 கப்
2. பால் - 1/2 கப்
3. சர்க்கரை - 1/2 கப்
4. வெனிலா எஸன்ஸ் - சில துளிகள்
5. நெய் - 3 மேஜைக்கரண்டி
6. ஃபுட் கலர் - சிறிது


 

சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
இத்துடன் பால், சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஒரு நான்-ஸ்டிக் கலந்து கிளறவும்.
விரும்பினால் ஃபுட் கலர் சேர்க்கவும்.
கலவை கெட்டியானதும் நெய் மற்றும் எஸன்ஸ் சேர்த்து கிளறவும்.
அல்வா பதம் தாண்டி சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
நெய் தடவிய பாத்திரத்தில் பரப்பி அழுத்து விடவும். மேலே முந்திரி, பாதாம் என விருப்பம் போல் அலங்கரிக்கலாம்.
ஆறியதும் துண்டுகள் போடவும். சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு பர்ஃபி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனி அக்கா கலக்கல் டிஷ் அம்மாகு ரொம்ப புடிக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த வீக் எண்ட் ல பர்ஃபி செஞ்சு நான் நல்ல பேர் வாங்க்கிறேன் தாங்க்ஸ் அக்கா இன் அட்வான்ஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு அம்மாக்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா