எலுமிச்சை சேமியா

தேதி: February 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

1. சேமியா - 1 கப்
2. எலுமிச்சை - 1
3. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
4. கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
5. பச்சை மிளகாய் - 1
6. காய்ந்த மிளகாய் - 1
7. கறிவேப்பிலை - சிறிது
8. வேர்கடலை - சிறிது
9. முந்திரி - சிறிது
10. உப்பு
11. மஞ்சள் தூள்


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
பின் மிளகாய் சேர்த்து சிவந்ததும், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதில் 1 கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க துவங்கியதும் சேமியாவை கொட்டி கலந்து சிறுந்தீயில் மூடி வேக விடவும்.
முந்திரி மற்றும் வேர்கடலையை வறுத்து வெந்த சேமியாவில் கலந்து விடவும்.
சுவையான எலுமிச்சை சேமியா தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனி சுவையான சேமியா சூப்பர் :)செய்வதும் ரொம்ப சுலபமா இருக்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனக்கு இதோட புதினா சட்னி காம்பினேஷன் ரொம்ப பிடிச்சுது... ட்ரை பண்ணி பாருங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா