ரவா கிச்சிடி

தேதி: September 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 2 கப்
பீன்ஸ் - 6
சிறிய காரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை பட்டாணி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 3 கப்


 

ரவையை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளை போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும். உப்பு சேர்க்கவும்.
வெங்காயம் சேர்க்கவில்லை என்றால் பெருங்காயம் சேர்க்கவும்.
காய்கள் வெந்த பின் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும்.
சிறிது தளர இருக்கும் போது இறக்கவும்.


சட்னி/சாம்பார்/ஊறுகாய் வைத்து சாப்பிடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சந்தியா,
இன்று உங்கள் ரவா கிச்சடி செய்தேன். நன்றாக இருந்தது.
இமா

‍- இமா க்றிஸ்

அன்புள்ள சந்தியா
இன்று உங்கள் ரவா கிச்சிடி செய்தேன்,ரொம்ப நல்லா இருந்தது!நன்றி!

சமைத்து அசத்தலாம் பகுதி 6 க்காக தங்களின் இந்த குறிப்பை செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி.

indira

சந்தியா நானும் இதுபோல்தான் செய்வேன். சுவை நன்றாக இருந்தது.
செல்வி.

சவுதி செல்வி

சந்தியா, சமைத்து அசத்தலாம் பகுதிக்காக ரவா கிச்சடி செய்தேன். நன்றாக இருந்தது. இன்றுதான் இங்கு பின்னூட்டம் கொடுக்க முடிந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சந்தியா, சமைத்து அசத்தலாம் பகுதிக்காக ரவா கிச்சடி செய்தேன். நன்றாக இருந்தது. இன்றுதான் இங்கு பின்னூட்டம் கொடுக்க முடிந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சந்தியா
சமைத்து அசத்தலாம் பகுதிக்காக இந்த குறிப்பினை செய்தேன்.
என் கணவருக்கு மிகவும் பிடித்த ரெஸிப்பி இது.
ரொம்ப நன்றாக இருந்தது.நன்றி!