க்ரிஸ்பி சிக்கன்

தேதி: February 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (4 votes)

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மைதா மாவு - 4 தேக்கரண்டி
சோள மாவு - 3 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
ரெட் கலர் - ஒரு துளி

சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகு தூள், 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் வெந்த சிக்கனை உதிர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, ரெட் கலர், உப்பு சேர்த்து பிசைந்து ப்ரிட்ஜில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் சிறிது சிறிதாகக் கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான க்ரிஸ்பி சிக்கன் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சூப்பர்... கலர்ஃபுலா இருக்கு சிக்கன் மேக்கப் பண்ணி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்ரிஸிபி சிக்கன் ஈஸியா இருக்கு. வாழ்த்துக்கள்

க்ரிஸ்பி சிக்கன் ரொம்ப ஈசியா இருக்கு செய்து பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

க்ரிஸிபி சிக்கன் நல்லா செய்து இருக்கிங்க,சூப்பர்.கடைசி ப்லேட் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கனி மொறு மொறு சிக்கன் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி அக்கா வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வினோஜா அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குமாரி அக்கா செய்து பார்த்துட்டு சொல்லுங்க எப்ப்டி இருந்துச்சுனு வாழ்த்துக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி அக்கா வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஸ்வர்னா அக்கா பதிவுக்கு மிக்க நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி சூப்பரா இருக்கு க்ரிஸ்பி சிக்கன்.. பார்க்கும் போது நாக்கு ஊறுது..சிக்கன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் பொறிச்சது என்றால் சொல்லவே வேண்டாம்.. நிச்சயம் அடுத்த முறை இந்த மாதிரி தான் செய்வேன்.. சூப்பர் வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவ் அக்கா பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்ட் ஹ்ம்ம் நீங்க சொன்ன மாறியே செம கிரிஸ்பியா தான் அக்கா இருக்கும் எனக்கும் சிக்கன் தான் அக்கா பேவரிட் என்.வீ

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி குறிப்பு மிக அருமை:) சிக்கனை பார்த்தாலே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி க்ரிஸ்பி சிக்கன் பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்குங்க.....சூப்பர்.... கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலிலா அக்கா கண்டிப்பா செய்து பாருங்க்ச் சூப்பரா இருக்கும் பதிவுக்கும் வருகைக்கும் நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

க்ரிஸ்பி சிக்கன் பார்க்க சூப்பர் பா.வாழ்த்துக்கள்.கடைசி ப்ளேட் எனக்கு கொடு.மிச்சம் வைக்காம சாப்பிடுரேன்.ஒகே வா.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா