பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

அன்பு கோழிஸ்
பட்டி தொடங்கியாச்சு, உங்க சூடான கருத்துக்களை கேட்க ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருக்கேன், எல்லாரும் ஓடியாங்கோ...:) வந்து எல்லாரும் பட்டிய உங்களுடய மேலான கருத்துக்க்ளை சொல்லி பிச்சு உதறுமாறு கேட்டு கொள்கிறேன் ;) வாங்க வாங்க... எல்லாரும் வாங்க....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

புத்தம் புது நடுவர்க்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும் :) நல்ல தலைப்பை தந்த ரம்சிற்கும் என் நன்றிகள். ஒர் வீட்டீற்கு 'மறு'மகளாக போவதோ 'மறு'மக்னாக போவதோ கஷ்டமான வேலைதான். இருந்தாலும் இந்த இருவரில் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பவர் என்றால் அது கண்டிப்பா மருமகள் தான். நான் மருமகள் அணியில் இருந்தே பேச விரும்புகிறேன்.. தூக்கம் வராமல் இருந்தால் வாதங்களை வைத்துவிட்டு செல்கிறேன்..பட்டியில் கலந்துகொண்டு சிறப்பிககவிருக்கும் இரு அணி தோழர்/தோழிகளுக்கும் என் அன்பு கலந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

(புத்தம் புது நடுவர்க்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும் :) பட்டில முதல் பதிவு போட்டு எனக்கு வாழ்த்து சொன்ன் உங்களுக்கு நெம்ப நன்ற்ங்கோ கல்பூ...:)அப்போ நீங்க மருமகள் அணில பேசப்போறீக.. (தூக்கம் வராமல் இருந்தால் வாதங்களை வைத்துவிட்டு செல்கிறேன்..) அப்படீன்னா உங்களுக்கு இந்த பட்டி முடியரமுட்டும் தூக்கமே வரக்கூடாதுன்னு நான் வேன்டிக்கிரேன். அப்பிடியே இந்த இஞ்சிடீய குடிச்சுட்டு உங்க வாதங்களை ஒன்னொன்னா சொல்லுங்கோ...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மருமகள் அணிக்கு ஆளு வந்தாச்சு, எதிர் அணி எந்திரிச்சு வாங்கோ...இன்னும் என்ன தூக்கம் கோழிஸ், எல்லோரும் எழுந்திருங்கோ..பட்டில ஒரு சீட்ட போட்டுட்டு தூக்கத்தை தொடருங்கோ அம்மிணிகளா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள்.

இப்போ துண்டு போட்டு சீட்டு பிடிச்சுக்கறேன் நடுவரே. மாப்பிள்ளையா போறதுதாங்க படா பேஜாரு அப்படீங்கற அணியில் என் வாதங்களை வைக்கிறேன். விரைவில் வாதங்களுடன் வருகிறேன் நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே வணக்கம் :) வாழ்த்துக்கள் :)

சொன்னது போல் டைமுக்கு வந்துட்டேன் பார்த்தீங்களா :)

என்னுடைய எதிர் கட்சி மக்கள் எந்த பக்கம்னு பார்த்துட்டு நான் என் அணியை தேர்வு செய்றேன்... அதனால் எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அடடா... எத்தனை வேகமா துவங்கி இருக்கீங்க ;) வாழ்த்துக்கள் பல. உங்க முதல் பட்டிமன்றம் முத்தனா பட்டிமன்றமா அமையட்டும். இண்ட்ரஸ்டிங் தலைப்பை தந்த ரம்யாக்கு பாராட்டுக்கள்.

என்னை பற்றி தெரிந்தவருக்கு நான் எந்த அணியில் வருவேன் என்றும் தெரிந்திருக்கும்... நான் சொல்லவே வேணாம் தானே ;) ஆங்... அதே தான் “மருமகளாக போவதே குஷ்டமப்பா” அணி தான். அப்பாலிக்கா பாயின்ட்டோட வாரேன் நடுவரே.

ஓ மை காட்..... நடுவரே.... கூட்டணி உடைஞ்சி போச்சே!!! எதிர் அணியில் போய் பலமா உட்கார்ந்திருக்காங்களே!!! நான் என்ன செய்வேன். பரவாயில்லை... மேலே எம்மணி தலைவி வந்துட்டாங்க.... கை கொடுப்பாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிக்கு முதன்முதலாக நடுவராக வந்திருக்கீறீங்க..வாழ்த்துக்கள்...வாதாட ஆரம்பித்துள்ள மற்றும் வாதாட வர இருப்பவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்....

எங்க ஆள் கல்யாணமான புதிதில் எங்க வீட்டிற்கு வரும்போது சங்கடப்பட்டதை வைத்தே சொல்வேன்....ஒரு வீட்டிற்கு மாப்பிள்ளையாய் போவதுதான் மிகவும் கஷ்டமானது...ஆண்பிள்ளைகளால் அவ்வளவு சீக்கிரம் புதிய இடத்தில் சென்று இருக்க முடியாது...முக்கியமா அம்மா சமையலை விட்டு...பின்ன பொண்டாட்டி என்னதான் சமைத்தாலும் எங்க அம்மா செய்வது மாதிரி வராது என்று தானே நினைப்பாங்க( மனசுக்குள்ள தான்..வெளியே சொன்னா அப்புறம் அடி இல்ல விழும்)...அப்புறம் புதுசாய் மாமியார் சமையலை வேற சாப்பிடனுமே.?எப்படி இருக்குமோ? ம்...இப்படித்தான் ஆரம்பிக்கும்..அப்புறம்?

மீண்டும் வருகிறேன்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நடுவரே! கல்யாணமாகி ஒரு பொண்ணு கணவன் வீட்டுக்கு வரான்னா அது அவளோட வீடுங்கற உணர்வும் கூடவே வந்துடும். சிலருக்கு அந்த உணர்வு வர சில காலங்கள் எடுத்தாலும் அது அவளுக்கு உரிமைப்பட்ட வீடு. சமூகமும் அந்த உரிமையை அவளுக்கு கொடுத்திருக்கிறது.

ஆனால் கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆனாலும் மாப்பிள்ளைக்கு மனைவியின் வீடு மாமனார் வீடுதான். ஒரு ஒட்டுதல் வரவே வராது. இந்த மாப்பிள்ளைகள் அப்பப்போ மனைவி வீட்டுக்கு வரவே ரொம்ப யோசிப்பாங்க. ஏன்? கஷ்டமாக சங்கடமாக இருப்பதால்தானே?! இதில் வீட்டோட மாப்பிள்ளையா இருந்துட்டா அவ்வளவுதான்.

ஒரு வீட்டில் சங்கடம் இல்லாமல் நாம் இருக்கணும்னா அந்த வீட்டின் அங்கமாக நாம் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆனால் மாமனார் வீட்டுக்கு வர மாப்பிள்ளையை கவனிப்புங்கற பேர்ல இவங்க பண்ற டார்ச்சரில் மாப்பிள்ளை நொந்து நூடுல்ஸ் ஆயிடுவார். விருந்தாளி என்ற உணர்வே அவருக்கு இருக்கும். நல்லா கவனிச்சுக்கறது கூடவா தப்புன்னு எதிரணியினர் கேட்பாங்கோ. நடுவரே நம்ப வீட்டில் யாராச்சும் நம்மளை விழுந்து விழுந்து கவனிப்பாங்களா.... ஆக மொத்தத்தில் மாப்பிள்ளை என்பவர் மாமனார் வீட்டில் ஒரு விருந்தாளி மட்டுமே!

இப்போ நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக செல்கிறோம். அவங்க நம்மை ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்க. ஆனாலும் நமக்கு ஒரு சிறு சங்கடம் இருக்கும். நம் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருக்காதுதானே... அதேதான் இந்த பாவப்பட்ட மாப்பிள்ளைகள் நிலைமையும்.

மருமகளும் மாமியாரும் என்னதான் அடிச்சுக்கிட்டாலும் ஒன்னு அங்கேயே இருப்பாங்க இல்லைன்னா அடிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போனாலும் போவாங்களே தவிர மனைவி வீட்டில் போய் இருப்பதை தவிர்ப்பார்கள். காரணம் மாப்பிள்ளையால் அங்கே இயல்பாக இருக்க முடியாது என்பதுதான்.

மருமகளுக்கு மாமியார் வீட்டில் இருப்பதுதான் கஷ்டம் என்றால் மாப்பிள்ளைகள் மாமனார் வீட்டில் போய் இருக்கலாமே! ஏன் அப்படி இல்லாமல் தனிக்குடித்தனம் போகிறார்கள்?

இதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க நடுவரே. இன்னும் வாதத்தோடு மீண்டும் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே... முதல் கட்ட வாதத்தை வச்சிபுட்டு போறேன் ;)

ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு போனா போனது எல்லாம் அவளூக்கு பழகிடுறதில்லை. அவளுக்கு அந்த இடமும் மக்களும் பழக நாட்களாகலாம், மாதங்கள் ஆகலாம், வருடங்கள் கூட ஆகலாம். அந்த கால கட்டம் இருக்கே... அம்மாடி!!! நல்லா யோசிச்சு பாருங்க நடுவரே... மாப்பிள்ளை சங்கடபட்டா நான் வரல, நீ மட்டும் போயிட்டு வான்னு அனுப்பிடலாம் மனைவியை அம்மா வீட்டுக்கு, ஆனா பொண்ணு மாமியார் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்ல முடியுமா??? என்ன கஷ்டம் வந்தாலும் அவ மட்டும் காலத்துக்கு அங்க போக தான் வேணும்.

சரி காலையில் இருந்து ஒரு வாழ்க்கை பாருங்க...

மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போனா 10 மணி வரை தூங்கினாலும் அவரை கேட்க ஆளில்லை. ஆனா பொண்ணு மாமியார் வீட்டுல 6 மணிக்கு மேல தூங்கினா... அவளை மட்டுமில்ல... அவ குடும்பத்தையே திட்டி தீத்துபுடுவாய்ங்க.

இதுவரை காலை எழுந்து அம்மா காஃபி’னு அவளும் தான் கேட்டு பழகி இருப்பா... ஆனா மாமியார் வீட்டில்... “அத்தை காஃபி போடவா டீ போடவா???”னு கேட்கணும்... “எனக்கு டீமா, மாமாக்கு காஃபி, என் பொண்ணுக்கு பூஸ்ட் போடு... ஆன் மறந்துடாதா மாமாக்கு காஃபில சக்கரை கம்மியா போடு”னு ஹோட்டல் சர்வர் மாதிரி ஆர்டர் வாங்கிட்டு நடையை கட்டனும்... மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போனா பெட் காஃபி!!!

ஏன்னா வேகமா எல்லாம் செஞ்சு எல்லாருக்கும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்து தனக்கு போட்ட டீயை குடிக்கும் முன் அது ஆறி போயிருக்கும்... கடனேன்னு அதை வாயில் ஊத்திகிட்டு காலை டிஃபன் ஆர்டர் எடுக்கணுமே...

அதையும் முடிச்சு அவ எல்லாருக்கும் போட்டுட்டு தான் சாப்பிடும் முன் அது ஆறி போயிருக்கும். இல்ல லன்ச் டைமே வந்திருக்கும். அரக்கபரக்க அடுத்த சமையல் வேலை. பகலில தூக்கம்??? சில வீட்டில் பழக்கமில்லை... “எங்க வீட்டுக்கு எந்த பொண்ணும் பகல்ல தூங்குறதில்ல”னு ஒரு முறை சொன்னா... அடுத்த நாள் இரவில் கூட பொண்ணுக்கு தூக்கம் வராது!!! மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்தா கெடா வெட்டி கொழம்பு பிரியாணி போடுவாங்க!! ஏன்னா மாப்பிள்ளை ஆச்சே!!! நல்லா கவனிக்கலன்னா அடுத்த முறை பொண்ணையும் சேர்த்து வீட்டுக்கு அனுப்ப மறுத்துட்டா??? பயந்தேன்.

மாப்பிள்ளை பொண்ணூ வீட்டுக்கு வந்தா பொண்ணை எங்க வேணும்னாலும் அழைச்சுட்டு ஊரை சுத்தலாம்... ஆனால் பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்கு போனா அதே மாப்பிள்ளை அவங்க வீட்டில் பெர்மிஷன் கேட்பார், “அம்மா, அப்பா... அவளை நான் வெளிய கூட்டிட்டு போய் வரவா???”னு. மாமனார் வீட்டில் “கிளம்பு போகலாம்... என் பொண்டாட்டி நான் கூட்டிட்டு போறேன், யார் என்னை கேட்பது??”

இப்ப சொல்லுங்க... மாமியார் வீட்டில் சுதந்திரம் போவது பையனுக்கா? பொண்ணுக்கா??? அப்ப யாருக்கு கஷ்டம்??? புரிஞ்சுது தானே நடுவரே... :) நான் சாப்பிட்டு தெம்பா வந்து எதிர் அணியை ஒரு கை பார்க்கறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்