37 வார கர்ப்பம். aminotic fluid அதிகமாக உள்ளது

நான் 37 வார கர்ப்பம்(2nd child). aminotic fluid அதிகமாக உள்ளது. அதனால் doctor 38 வாரத்தில் c-sec பண்ணி விடலாம் என்று சொல்கிறார்கள். உங்களில் யாருக்காவது இப்படி இருந்துள்ளதா?
பார்லி குடித்தால் தண்ணீர் அளவு குறையுமா?

யாராவது தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க please

உங்களுக்கு இப்ப தண்ணி அளவு எவ்வளவு இருக்கு? 5 - 25cm நார்மல்னு சொல்வாங்க. அதை பத்தி அதிகம் தெரியலை. கவலைபடாதீங்க. ஒண்ணும் ஆகாது. நெட்ல சர்ச் பண்ணி பாருங்க. முதல் குழந்தை நார்மலா டெல்வரியா?
என் தோழிக்கு கூட தண்ணி கம்மியா இருக்குனு c - sec செய்தாங்க. குழந்தை ஆரோக்கியமா நல்லா பிறக்கனும். அது போதும். ஆபரேஷன்காக வருத்தப்படாதீங்க.மனசை ரிலாக்ஸ்டா வைத்துக்கோங்க.
பார்லி கால் வீக்கத்துக்கு தருவாங்க.தண்ணி இறங்கும்னு சொல்வாங்க.சுரைக்காய் கூட தருவாங்க.ஆனா அது அமின்டாடிக் ஃபிளூட்-ய குறைக்குமானு சரியா தெரியல.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

உங்கள் பதில் மிகவும் ஆறுதலாக இருந்தது. இன்று வேறு scan center ல் scan செய்த போது fluid level 11-12 cm normal என்று வந்துள்ளது. ஆனால் கொடி கழுத்தை சுற்றி உள்ளதாக வந்துள்ளது.எனக்கு முதல் குழந்தை c-sec தான். இன்னும் 1 வாரத்தில் c-sec பண்ணி விடலாம் என்று doctor சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு குழந்தை movements மிகவும் குறைவாக உள்ளது போல இருக்கிறது. hospital ல் check பண்ணும் போது correct ஆக இருக்கிறது. ஒரு நாளில் எப்பொழுதும் அசைவு இருந்துகொண்டு இருக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட நேரத்தில் இருந்தால் போதுமா?

மேலும் சில பதிவுகள்